![](pmdr0.gif)
இலக்கியக் காட்சிகள்
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
ilakkiya kaTcikaL
by ci. pAlacuppiramaNiyan (ciRpi)
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our thanks also go to the Tamil Virtual Academy
This e-text has been generated using Google OCR online followed by proof-reading and corrections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
இலக்கியக் காட்சிகள்
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
Source:
இலக்கியக் காட்சிகள்
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.
தமிழ் மொழித்துறைத் தலைவர் சென்னைப் பல்கலைக் கழகம்
நறுமலர்ப் பதிப்பகம்
சென்னை -29
முதற் பதிப்பு : 1980 இரண்டாம் பதிப்பு : 1983
மூன்றாம் பதிப்பு : 1988 நான்காம் பதிப்பு : 1994
விலை : ரூ. 20-00
விற்பனை உரிமை : பாரி நிலையம் 184, பிரகாசம் சாலை, சென்னை - 600 108
-----------
முன்னுரை
புறக்கண்ணால் காணத்தக்க காட்சிகள், இயற்கைக் காட்சிகள்; அகக் கண்ணால் கண்டு களிக்கத் தக்க காட்சிகள் இலக்கியக் காட்சிகள். புறத்தே காணும் காட்சியினும், இலக்கியம் வழங்கும் இனிய காட்சிகள் நெஞ்சில் நிழலாடி நிலைத்த இன்பம் வழங்கத்தகும் நீர்மையுடை யனவாகும். 'செஞ்சொற் கவி இன்பம்' என்று கம்ப நாடர் பாராட்டுவது இக் கவிஞர் இலக்கிய இன்பத்தையே யன்றோ !
பல்வேறு சமயங்களில், பல்வேறு சூழல்களில், பல்வேறு கட்டாயத்தின் பேரில் இக்கட்டுரைகள் உருப்பெற்றன. 'இலக்கியத்தின் நோக்கங்கள்' என்னுங் கட்டுரை என் கல்லூரி மாணவப் பருவத்தில் கருக் கொண்டதாகும். 'கடலும் கலமும்' என்னுங் கட்டுரை சென்னையில் நடை பெற்ற இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் கருத்தரங்கிற் படிக்கப் பெற்றது. இதுபோன்றே அண்ணாமலை நகரில் நிகழ்ந்த மேற்காணும் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரையே 'வெறியாட்டு' என்பதாகும். 'கலித்தொகை காட்டும் கற்பு நெறி' எனுங் கட்டுரையும் இவ்வகையில் முகிழ்த்ததே-யாகும். கோவையிலிருந்து மலர்ந்த நாடக விழா மலரில் 'நாடக இலக்கியம்'இடம் பெற்றது. 'சைனரும் தமிழ்நாடும்'தமிழ்நாடு அரசாங்க மலரொன்றுக்கு எழுதப் பெற்றது. 'பழந்தமிழரின் உலக நோக்கு'தனிக் கட்டுரை. மதுரைத் தமிழ்ச் சங்க மலரில் இடம் பெற்றது 'இசைத் தமிழின் மறுமலர்ச்சி." எங்கெழிலென் ஞாயிறு எமக்கு'தருமபுர ஆதீன 'ஞான சம்பந்தத்தில்'ஒளிர்ந்ததாகும். சென்னைக் கம்பர் கழக ஆண்டு விழாப் பேச்சு, 'கிட்கிந்தா ராமன்' எனும் கட்டுரையாக வடிவு பெற்றது. 'தென்றல் வரவு"இளந் தென்றல்' எனும் திங்களிதழில் வந்தது. 'இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நடத்திய கவியரசர் கிருட்டினப் பிள்ளையின் 150வது ஆண்டு விழாச் சொற்பொழிவின் கட்டுரை யாக்கமாகும்.
இலக்கிய ஆர்வம் மிகுந்த தமிழுலகம் என் முயற்சியினை வரவேற்கும் என்னும் துணிவுடையேன்.
சி. பா.
------------------
உள்ளுறை
இலக்கியக் காட்சிகள்
தோற்றுவாய்
அறிஞர்தம் அறிவுத் தெளிவிலிருந்து, சிந்தனைச் சுடரிலிருந்து, கருத்து அலைகளினின்று வெளிப்போந்த அமர காவியங்களே இலக்கியங்கள். இந்த இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையினின்றும் முகிழ்த்தெழுந்த வாழ்க்கை வெளிப்பாடுகளும் காலத்தின் சுவடுகளும் எனலாம். வாழ்க்கையின், காலத்தின் பிரதிபலிப்புக்களான இவற்றின் நோக்கங்கள் பற்றிக் காண்போம்.
இலக்கியத்தின் நோக்கங்கள்
அறிவு வளர்ந்து கொண்டு போனால் மட்டும் அவனி உய்ந்துவிட முடியாது. சிறந்த மராத்தி நாவலாசிரியர் காண்டேகர், 'அறிவைக் கொண்டு வாழுபவனின் வாழ்க்கை வேலமரம் போன்றது; அஃது அருகில் வருபவருக்கு நிழல் தராது. அம்மட்டோடு இல்லை; அதனுடைய கூரிய முட்கள் நிழலுக்கு வருபவனின் காலில் எப்போது தைக்குமோ அதனையும் சொல்ல முடியாது' என்கின்றார். எனவே அறிவுமட்டும் வளர்ந்தால் நெஞ்சம் நிலை திரிந்து பல நீசச் செயல்கள் நித்தமும் நிலையில்லா இவ்வுலகத்தில் நிகழ ஏதுவாகும். அறிவும் நெஞ்சமும் இரு புகை வண்டித் தண்டவாளங்களைப் போன்றன . எங்கேயாகிலும் தனது நிலையினின்று சிறிது விலகினாலும் அதன்மேல் ஊர்ந்து செல்லும் புகைவண்டி கவிழ்ந்து போவது திண்ணம். எனவே, இலக்கியத்தின் நோக்கம் அன்புருவான நெஞ்சினை வளர்ப்பதே ஆகும். காட்டாக, ஏழையின் வாழ்வுப் படப்பிடிப்பை முதலாளியும், மண் குடிசையிலே மக்கள் அலமருவதை மாளிகை வாசிகளு ம், முதலாளியின் வாழ்வைத் தொழிலாளியும் எப்படி அறியமுடியும்? கொலைப் பாவத்தின் கொடுமையைச் சித்திரிக்காவிடில் கொலையாளியின் நெஞ்சம் சீர்திருந்துவது எவ்வாறு? கொடுமையைத் தங்கள் வடிவாகக் கொண்ட கல் நெஞ்சர்கள் மடிமை தொலைந்து மக்கள் மன்றத்திலே மதிப்புப் பெற்ற மானமுள்ள வாழ்வு வாழ்வது எவ்வாறு? என்றெல்லாம் இலக்கியம் நாட்டு நீதியை, நடைமுறை வாழ்க்கையை, நன்கு படம் பிடித்துக் காட்டி நல்வழி நடக்க வகை செய்கிறது. இவ்வாறு வாழ்க்கை உண்மைகளை எடுத்துக்காட்டுவதும், எடுத்துக் காட்டித் தம்மைப் பயிலுவோர் நெஞ்சங்களை நெறிப் படுத்துவதுமே இலக்கியங்களின் தலையாய நோக்கங்களாகும்.
வாழ்வும் இலக்கியமும்
வாழ்க்கையினின்றும் உயிர்பெற்றன ஆதலின், இலக்கியங்கள் வாழ்க்கை உண்மைகளை உள்ளது உள்ளவாறே படம் பிடிக்கின்றன. வீட்டு வாழ்விற்கு விளக்கமாகத் திகழ்கின்றவள் மனைவி. அதுபோல், நாட்டு வாழ்விற்கு அணிகலனாகத் துலங்குபவன் ஆடவன், இந்த உண்மையை,
மற்றுமொரு காட்சி : பொருள்வயிற் பிரிந்து சென்றான் திண்தோளனாகிய தலைமகன். கார்காலத்தில் திரும்பி வருவதாக வாக்களித்து விட்டுத் தலைவியிடம் விடை பெற்றுச் செல்கின்றான் அவன். கார்காலமோ நெருங்கிறது. தலைவியோ தூண்டிற் புழுவெனத் துடிக்கிறாள்.
'தலைவனோ கார்காலம் வருவது உணர்கிறான் ஆயினும் அவன் மேற்கொண்ட செயல் முடியவில்லை. செய்வன இருந்தச் செய்யும் தன்னிகரற்ற தலைவனன்றோ, அவன்! எனவே காலம் தாழ்க்கிறது. கார்ப்பருவமும் வந்துவிட் டது. வேங்கை விரிமலர்களும் முல்லையும் பூக்கத் தொடங்கிவிட்டன. ஆனாலும் தலைவி தன் தலைவன் சொன்ன சொல் தவறமாட்டான்; கார்ப்பருவம் பொய்க் கோலம் புனைந்து நிற்கிறது எனத் தேறி நிற்கின்றாள். இத்தகு அருமையான வீட்டு வாழ்க்கையினைக் கவிஞன் இலக்கியத்தில் அமைக்கின்றான். இதனால் ஒப்புயர்வற்ற தலைவியின் நெஞ்சமும் அவன் தலைவன் மாட்டுக் கொண்ட பெரு நம்பிக்கையும் ஒருங்கே புலப்படக் காண் கின்றோம்.
தலைமகன் திரும்பிக் 'கறங்குமணி ஒலிக்கும்' தேரில் விரைந்து வருகிறான். தேரை ஓட்டும் பாகனோ மிகவும் திறனுடையவன். பாரதப் போரில் பஞ்சவரில் நடுவணான பார்த்தனுக்குத் தேரோட்டிய பார்த்தசாரதியோ எனவும் ஐயறுகின்ற அளவுக்கு விரைந்து வயப்புரவிகளைச் செலுத்துகின்றான். ஆனாலும் தலைவனின் நினைவு காடு மலை தாண்டித் தலைவியை அடைந்துவிட்டது, திடீரெனத் திரும்பி, தேர் செல்லும் பாதையின் மருங்கே நோக்கினான் தலைமகன். புதர்களில் மலர்களில் மது உண்ண வந்த மது கரங்கள் மருட்சியடைந்து இங்கும் அங்கும் எழுந்து பறக்கின்றன. இதனைக் கண்டான் தலைமகன். நெஞ்சம் எரியுற்ற இழுதென இரங்கிற்று. பாகனை விளித்துத் தேரை நிறுத்தச் சொன்னான. தேரின் மணி ஒலித்த ஒலியினால் கிலியடைந்த வண்டுக்கு இரங்குவான் போல், மணியின் நாக்குகளை எல்லாம் கட்டிவிட்டு அமைதியாகத் தேரைச் செலுத்தச் சொன்னான் தலைவன். இந்தச் சீரிய சித்திரத்திலே அந்நாளைய மக்களின் அருள் நெஞ்சம் காட்டப் படுகிறதன்றோ ?
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த காதலனும் காதலியும் வாழ்வில் ஒன்றுபட்டனர். அவர்கள் தாய் தந்தையர் யார் யாரோ? என்று கூறுமளவிற்கு இருந்தாலும், செம்மண் பூமியில் பெய்த நீர் போல் ஒன்று கலந்து இணைந்துவிட்ட இரு நெஞ்சங்களை,
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தினை இயற்றிய இளங்கோவடிகள் தம் நூல் எழுந்ததற்கான காரணங்களைப் பதிகத்தில் தெளிவாகக் கூறுகின்றார் :
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்! (சிலம்பு; வழக்குரை காதை : 80)
என்று கூறித் தன் உயிர்கொண்டு அவனுயிர் தேடினள் போல உயிர்விட்டாள். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்' என்ற உண்மையைப் பாண்டியன் மூலம் உணர்த்துகின்றார் ஆசிரியர்.
அடுத்து, 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' என்ற உண்மையைக் கண்ணகி வாழ்வின் மூலம் அறிவுறுத்துகின்றார். உரைசால் பத்தினியாகிய கண்ணகி, 'தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்' என இளங்கோவடிகளால் பாராட்டப் பெற்றவள். கற்பின் மிக்கொழுந்த ஆற்றலால் மதுரை நகரை எரியுண்ண வைத்தாள். பாண்டியன் தன் பதி நீங்கிச் சேர நாடு சென்று அங்கிருந்தும் வானோர் உலகு போனாள். இவள் வரலாற்றினைக் குன்றக் குறவர்கள் வாயிலாக உணர்ந்து, சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்குரிய படிமம் சமைக்க இமயத்தினின்றும் கல் கொணர்ந்து அதனைத் தன்னை இகழ்ந்த கனக விசயர் முடிமேல் ஏற்றித் தன் நாட்டில் ஒரு கோயில் எடுத்து விழாச் செய்வித்தான். இலங்கைக் கயவாகுவும் கோயில் கட்டிக் கண்ணகியாம் கற்புத் தெய்வத்தை வழி பட்டான்.
ஊழ்வினையாலே கொல்லப்பட்டான் கோவலன். கண்ணகியை விட்டு அன்புச் செல்வியாம் மாதவிபால் அன்பு பூண்டு வாழ்த்து வந்தான். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிற்று. 'மாயப்பொய் பல கூட்டும் மாதவி' என மயங்கி, யாழிசைமேல் வந்து விதி வலியுறுத்த, அவளை விட்டும் நீங்கினாள். அவனைப் பிரிந்த மாதவி, 'மாலை வாராராயினும் காலை காண்குவம்' என நம்பி னாள். வரவில்லை அவன். இப்படிச் செல்கிறது கதை. ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதை இதன் மூலம் தெளிவுறுத்துகின்றார் ஆசிரியர்
இப்படிச் சில வாழ்க்கை உண்மைகளைக் காட்டி வாழ்க்கையை விளக்குவதோடு மட்டும் அமைந்து விடாமல், அவ் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வழிகளைக் கூறிச் செல்லும் சிறப்பினையும் இலக்கியங்கள் பெற்றுத் துலங்குகின்றன.
இலக்கியமும் நெறிப்படுத்துதலும்
ஒவ்வொரு காலத்தில் தோன்றிய இலக்கியங்களும் வாழ்க்கையை நெறிப்படுத்துகின்ற வகையிலேதான் அமைந்து காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் புற நானூற்றுப் பாடல்கள் சில அறங்களை நேரடியாக உணர்த்திச் செல்கின்றன. அகப்பாடல்கள் நேரடியாக நெறிப்படுத்துவனவாக அமையவில்லை. ஆனால் அவை, தம்மைச் சுவைக்கும் சுவைஞர்கள் நெறிப்படுகின்ற வகையில் சீர்மையுடன் துலங்குகின்றன.
இன்று காட்டுத் தீப்போலத் பொதுவுடைமைக் கொள்கை உலகம் முழுதும் பரவி வருகிறது. புரட்சி விதையை விதைத்துவிட்டுச் சென்ற அறிஞர் காரல் மார்க்ஸ், அத் தருவினைத் தண்ணீர் விட்டுப் பட்டுப் போகாமல் பாதுகாத்த லெனின் போன்றோர்கள் நாட் டிலே 'புரட்சியிலே புரட்சியிலே பூப்பதுவாம் இவ்வுலகம்' என்னும் பொருளுக்கு அழகு தரும் பூலோக சொர்க்கமாய் விளங்கும் உருசியாவின் கொள்கையை ஆயிரம் ஆண்டு சுளுக்கு முன்னரே ஒரு கவிஞன் பாடிச் சென்றார், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று. வாழ்தலை இனிமையாகவும் கொள்ளாமல் ஓர் வெறுப்பு வந்தவிடத்து இனிமை யற்றுக் கொடுமை உடையதாகவும் கருதாமல் சமநோக்கோடு கருதி நம் கடப்பாட்டினைச் செவ்வனே ஆற்ற வேண்டும் என்ற பண்பாட்டு மன அமைதியினைப் பூங்குன்றனார்.
பகுத்துண்டு பல்லுயிரோம்புதலை வாழ்க்கையின் கட மைகளுள் ஒன்றாகக் கொள்ள வேண்டும்.
ஈயென இரத்தலின் இழிவினையும், கொள்ளெனக் கொடுத்தலின் உயர்வினையும்,
அடுத்துத் திருக்குறளுக்கு வருவோம்.
வள்ளுவரின் 'அறத்துப்பால்' மக்களின் அற வாழ்க்கைக்கும், 'பொருட்பால்’ பெரும்பான்மை அரசியல் வாழ்க்கைக்கும், 'காமத்துப்பால்' இலக்கியச் சுவைக்கும் பெரிதும் பயன்படுவனவாகும்,
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்: உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்ற மூன்று உண்மைகளைக் கூற வந்த இளங்கோவடிகளும், நூலின் இறுதியில்,
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் (கானல் வரி 32 : 3- 4)
என்ற இரண்டு அடிகளில் எத்துணை அருமையான நீதியை நம்முன் வைக்கின்றார்.
அடுத்துத் தோன்றிய மணிமேகலை உணர்த்தும் அறங்கள் பல.
அறமே வாழ்க்கைக்கு மிக்க விழுத்துணையாவது என்பதை,
ஆற்றா மாக்களின் அரும்பசி களைந்து வாழும் மெய்ந் நெறி வாழ்க்கையே உயர்த்த வாழ்க்கை என்பதை,
'கல்வியிற் பெரியனாம் கம்பன்' இராமாயணம் என்னும் காவியக் கோயிலைக் கட்டினான். 'அவன் (தொடாதது ஒன்றும் இல்லை; தொட்டதை அழகுபடுத் நாமல் விட்டதில்லை' என்று அறிஞர் ஜான்சனைப் பற்றிக் கோல்ட்ஸ்மித் கூறும் கூற்றினை நாம் கம்பர்மேல் ஏற்றிச் சொன்னால் மிகையாகாது.
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் நிரலில் முதலில் நிற்பவர் பாரதி. அவர் ஓர் உலகக் கவி! புரட்சிக்கவி.
கவிஞர்கள், மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டுச் சட்டமன்றத்தில் சட்டமியற்றாவிட்டாலும் தம் மன உலகில் சிந்தித்து நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்ல சட்டத்தை இயற்றுகிறார்கள். சான்றாகப் பாரதி தாசனின் புரட்சிக் கருத்துகள் சிலவற்றைக் கூறலாம்.
சமுதாயத்தில் புரையோடிப்போன உள்ளங்களுக்குப் புனித மருந்து போடும் தொழிலில் அவர் இறங்கியுள்ளார். விதவைத் திருமணத்தை வலியுறுத்து முகத்தான்.
பெண்கள் குடித்தனம் பேணுவதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், உலகினை உணர்ந்து கொள்வதற்கும், கல்வியைப் போற்றுதற்கும் பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்று கூறுகின்றார்.
முடிவுரை
'காலத்தின் இடையிடையே ஹோமர், ஷேக்ஸ்பியர், மில்டன் முதலிய கவிஞர்கள் தோன்றியிருக்காவிட்டால் உலகம் அழிந்திருக்கும்' என்கிறார் ஷெல்லி. ஆம்; இது தான் உண்மை . உலகைக் கட்டிக் காக்கும் பொறுப் பினைப் பெரும்பான்மையும் கவிஞர்கள் ஆக்கும் காவியங்களே பெற்றுத் திகழ்கின்றன. உடலுக்கு உரத்தை விஞ்ஞானம் தரலாம். ஆனால் உள்ளம் பண்பட இலக்கியம் பெரிதும் பயன்படுகிறது. 'முதன்முதலில், இலக் கியத்தைப் படிக்கும் பொழுது நமது மூளை தூங்குகிறது. நமது மனமும் அமைதி அடைகிறது. பின்னர் அந்த இலக்கிய உலகிலே தமது நுண்ணுடல் செல்கிறது. அங்கு நிகழும் இன்ப துன்ப உணர்ச்சிகளை மனம் அடைகிறது. ஆனால் அதனால் நமது பருவுடல் துன்பமடைவதில்லை' என்பர் டாக்டர் மு. வரதராசனார். இதுவே இலக்கியத்தின் குறிக்கோளாகும்.
இலக்கியம் செம்மையான மனத்தினை நமக்குத் தருகிறது. பணம் எவ்வளவுதான் இருந்தாலும் மன அமைதி கிட்டி விடாது. அமைதியைக் கொடுக்கக்கூடிய அரு மருந்து இலக்கியமே ஆகும். அமைதியை இலக்கியம் தவிர வேறெந்தப் பொருளும் வழங்கிவிட முடியாது. அமைதியே - அன்பே வாழ்வின் நிறையுடைமையை எடுத்தியம்பும். அமைதி! அமைதி! அமைதி! எனத் தவம் இயற்றும் தவசி கள்கூட அமைதி பெற்றுவிட முடியாது. ஆனால் அதே நேரத்தில் இலக்கியத்திலேயே தனது வாழ்நாளினைக் கழிக்கும் ஒரு பெரியார் அமைதியினை எளிதாகப் பெற்று விடுவர். இதனாலன்றோ நீற்றறையில் தவமுனியாம் திருநாவுக்கரசர்,
'அலைகள் ஓயாமல் மோதும் கற்பாறை போன்று இரு; அது அலைகளின் வேகத்தை அடக்கிவிடும்' என்கிறார் மேலை நாட்டு அறிஞர் மார்க் ஒளரேலியன். அந்த அமைதி இலக்கியத் தேர்ச்சியினால், இலக்கியம் அளிக்கும் வற்றாத இன்பத்தினால் வருவதொன்றாகும். வற்றாத வளம் சுரக்கும், வளமாகக் காவிரி பாயும் புண்ணிய பூமியில் இருந்தால்கூட அமைதியற்று அல்ல லுற்று மிடிமிகப் பெற்ற இன்னல் நிறைந்த வாழ்வினை வாழும் எண்ணற்றோரை நாம் காண்கின்றோம். அவர்கள் பணம் சேர்க்கப் பாடுபட்டார்களேயொழிய வாழ்வின் அமைதிக்கு - நெஞ்ச நிறைவுக்கு - நினைவின் இன்பத்திற்கு பண்பட்ட வாழ்க்கையின்பாற்பட்டுப் பகலோன் போல் ஒளிவீசித் திகழப் பாடுபடவில்லை. எனவே இலக்கியம் இத்துணை அருமையான ஒரு செயலினை மக்களிடையே என்றும் செய்து கொண்டு வருகிறது. எனவே மேலை நாட்டு இலக்கியமாயினும் சரி, நந்தமிழ் நாட்டு இலக்கியமாயினும் சரி, நாம் ஆழ்ந்து படித்து, அதன் இனிமையில் திளைத்து, அமைதி பெற்று, நெஞ்சினை வளர்த்து, அதே நேரத்தில் உடல் நலமும் பேணி விழுமிய வாழ்க்கையை இலக்கிய ஆசிரியர்கள் சொல்லிச் சென்றிருக்கும் சொல்லின் வழியே நடத்து வோமாக!
--------------
வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் மிக்க இனம் தமிழின மாகும். தமிழ்க் குடியின் பழமையினைக் குறிப்பிட வந்த ஐயனாரிதனார் என்னும் சேர அரசர் தாம் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில்,
கிறித்துவுக்கு முன்
கிறித்து நாதர் பிறப்பிற்கு முன்னரே தமிழர் திரை கடலோடியும் திரவியந் தேடினர்; கி. மு. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் என்னும் கிரேக்க அரசனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் வாயிலாக மயில்தோகை: யானைத் தந்தம், மணப் பொருள்கள் முதலியன சென்றன. மயிலைக் குறிப்பிடும் 'தோகை' என்ற தமிழ்ச் சொல் ஈப்ரூ மொழியில் 'துகி' என்று வழங்குவதாயிற்று. அம் மொழியில் 'அகல்' என்பது மணப்பொருளாம் அகிலைக் குறிப்பதாகும். பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் திமில் உடைய எருதுகள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சேர நாட்டு மிளகினைப் பொலீசிரியர்கள் விரும்பி வாங்கித் தம் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். 'யவனப் பிரியா' என்றே மிளகு வழங்கப் பெற்றது. தமிழ் நாட்டு வணிகர் கொண்டு சென்ற பொருள்களை ஏடன் துறை முகத்தில் அரேபியர்கள் பெற்று ஆப்பிரிக்கருக்கு விற்றனர் [2]. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அனுப்பி வைக்கப்பெற்ற அரிசி, மயில், சந்தனம் முதலிய பொருள்களின் பெயர்கள் திராவிட மொழிப் பெயர்களாகவே அமைந்திருப்பதனைக் காணும் பொழுது பண்டைத் தமிழர்தம் கடல் வாணிகச் சிறிப்புத் தெற்றெனப் புலப்படும் [3].
புலவர் பெயர்கள்
மேலும் பழந்தமிழ்ப் புலவர் பலர் வாணிகத்தில் மேம்பட்டிருந்ததனை அவர் தம் பெயர் கொண்டே அறியலாம். மதுரைச் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார். மதுரைப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தங் கொற்றனார் முதலி யோரின் பெயர்கள் இவ்வுண்மையை உணர்த்தும்.
முந்நீர் வழக்கம்
தொல்காப்பியனர் கடற்பயணத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
'முந்நீர் வழக்கம் மகடுவோ டில்லை '[4] என்று அவர் கடற் பயணத்திற்குப் பெண்களை உடனழைத்துச் செல்லக் கூடாது என்று விதி கூறியிருப்பது கொண்டு தமிழர் தம் கடற் செலவினைக் குறித்து அறியலாம். மேலும் தமிழர் கடற்பயிற்சி மிக்கிருந்த காரணத்தால், ஆர்கலி, ஆழி, .ணரி, முந்நீர், பவ்வம், பரவை, கடல் முதலான பல சொற்கள் கடலைக் குறிக்க ஏற்பட்டன. மேலும், கலங் களைக் குறிக்கும் ஓடம், பரிசல், புணை, தோணி, அம்பி, திமில், படகு, கலன், கப்பல், நாவாய், வங்கம் முதலான பெயர்களும் தமிழர் தம் க ட ல் வாணிபச் சிறப்பை யுணர்த்தும்.
உள் நாட்டு வாணிபத்திற்கு உறுதுணையாயிருந்த ஓடம், 'பஃறி' என வழங்கப்பட்டது. பட்டினப்பாலையில் இத்தகைய பஃறியைப் பற்றிப் பின்வருமாறு சொல்லப் பட்டுள்ளது. 'வெள்ளை உப்பின் விலையைச் சொல்லி விற்றுப் பண்டமாற்றாக நெல்லைக் கொண்டு வந்தவை; குதிரைச் சாலையிலே நிற்கும். குதிரைகளைப் பிணிக்கு மாறு போலக் கழிசூழ்ந்த பக்கத்திலே தறிகளிற் கட்டப் பட்டுள.'
அறத்துறை அம்பிகள் என்று கூறப்பட்ட ஓடங்கள் பெரியோராயினும் சிறியோராயினும் ஆற்றைக் கடக்க வருவோரை ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு அழைத்துச் சென்று விடும்.
யானையை யொத்திருக்கும்,
பெருங்கடலில் செம்மாந்து திரியும் ஓடுகலம் நாவாய் எனப்பட்டது. புகார்த் துறைகளில் நாவாய்கள் நிற்கும் நிலையினைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கம்பத்தினை அசைக்கும் யானையின் செயலுக்கு ஒப்பிட் டுள்ளார்.
இழையணிகளைத் தூரதேயங்களுக்குக் கொண்டு விற்றுவிட்டு இரவு நேரத்தில் இருங்கழியை யடையும் வங்கங்களில் வந்திறங்கிக் கரையைச் சேரும் வணிகரைப் பற்றி மதுரைக் காஞ்சி பின்வருமாறு அழகு பட விவரிக்கின்றது:
இருங்கழி யிழிதரு மார்கலி வங்கம். [19]
கலங்கரை விளக்கம்
நடுக்கடலில் இரவு நேரத்தில் வழங்கும் கலங்கள் திசைதடுமாறாது கரை வந்தடைதற்குத் துணையாகக் கடற்கரைப் பட்டினங்களில் அக்காலத்தில் கலங்கரை விளக்கங்கள் அமைந்திருந்தன. இத்தகு கலங்கரை விளக்கங்களைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
எட்டுத் தொகை நூல்களில் கப்பல்கள் 'கலம்' என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளன. குறுந்தொகைப் பாட்டொன்றில் கடலும் கலமும் சுட்டப்படுகின்றன.
சங்குகள் கரையின்கண்ணே திரிய, கடல் எழுந்து ஆரவாரிக்கும் ஒலிபரந்த குளிர்ந்த துறைக்கண் கலங் களைப் பரதவர் செலுத்துவர் என்று ஐங்குறுநூறு குறிப்பிடும்:
(1) புகார்
பண்டைத் தமிழகத்தே சோழ நாட்டில் காவிரிப்பூம் பட்டினமும், சேர நாட்டில் முசிறியும் பாண்டிய நாட்டில் கொற்கையும் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில், காவிரி கடலொடு கலக்கும் இடத்தில், காவிரியாறு அகலமும் ஆழமும் நிறைந்து விளங்கிய காரணத்தால், பாரம் ஏற்றிய கப்பல்கள் பாய்சுருக்காது சென்று அதன் கரைகளில் வெளி நாட்டிலிருந்து வந்த பண்டங்களைச் சொரிவனவாகும்:
மீன்களை விற்று அதன் விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவியல்களும், வீடும் தோணியும் பிரித்தறிய வாராதபடி காண்பாரை மயக்கச் செய்யும் மனையிடத்தே குவிக்கப் பெற்ற மிளகுப் பொதிகளும், மரக்கலங்கள் தந்த பொன்னாலாகிய பொருள்களும், கழிகளில் இயங்கும் தோணிகளால் கரைசேர்க்கப்பெற்ற மலைபடு பொருள்களும், கடல்படு பொருள்களும் முசிறித் துறைமுகத்தில் நெருங்கிக் கிடந்தன.
சிறுபாணாற்றுப் படையும், [27] மதுரைக்காஞ்சியும் [28] கொற்கைத் துறைமுகத்தே நடந்த முத்து வாணிகத்தினை வளமுறக் குறிப்பிடுகின்றன. முத்தால் மாட்சிமையுற்றது கொற்கை என அகநானூறு நவிலும்.
வணிகர் சால்பு
இத்தகு வணிகத்தினை மேற்கொண்டிருந்த பெரு மக்கள் உண்மையே பேசும் நற்பண்பு மிக்கவர். தமக்குக் கிடைக்கும் இலாபத்தை வெளிப்படையாகக் குறிப்பிடுவர்; பிறர் பொருளை மிகுதியாகக் கொள்ளாமலும், தாம் விற்கும் பண்டங்களைக் குறைத்துக் கொடாமலும் நடுவு நிலைமை சான்ற நெஞ்சுடன் வாணிகம் செய்வர். இவ்வாறு வணிகரைப் பற்றிப் பட்டினப்பாலை சிறப்பாகக் குறிப்பிடுகின்றது.
இதுகாறும் கூறியவற்றால் பண்டைக் காலத்தே தமிழர் கலம் செலுத்தி வாணிகம் போற்றி வளம் பல சேர்த்து வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்ற செய்தி விளக்கமுறக் காணலாம்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின் [35]
என்ற பொய்யாமொழியின் கூற்றிற்கிணங்கத் தமிழ் வணிகர் அறநெறி போற்றிய மேம்படு வாழ்க்கை வாழ்ந் தனர் என்பதும் புலப்படும்.
--------
[1]. திருக்குறள் 1031
[2]. பி.டி. சீனிவாச ஐயங்கார்; தமிழர் வரலாறு; பக்கங்கள் 129-134.
[3]. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி; தென்னிந்திய வரலாறு. பக்கங்கள் 76-78.
[4]. தொல்காப்பியம்; அகத்திணையியல்; நூற்பா : 37
[5]. புறநானூறு 66 : 1-2
[6]. பட்டினப்பாலை : 29-32
[7]. புறநானூறு : 343: 5-6
[8]. புறநானூறு : 299 : 2:3
[9]. அகநானூறு : 50: 1-2
[10]. புறநானூறு : 381; 23-24
[11]. நற்றிணை : 74 : 1-4
[12]. பட்டினப்பாலை : 172-175,
[13]. பெரும்பாணாற்றுப்படை : 319-321.
[14]. மதுரைக் காஞ்சி : 77-83
[15]. மதுரைக் காஞ்சி : 321-323
[16]. மதுரைக் காஞ்சி : 536-541
[17]. பதிற்றுப்பத்து : 52 : 3-4
[18]. அகநானூறு : 255 : 1-2
[19]. புறநானூறு : 400: 20
[20]. பெரும்பாணாற்றுப்படை 346-351
[21]. குறுந்தொகை : 240
[22]. ஐங்குறுநூறு : 192: 1-2
[23]. புறநானூறு : 386 : 14-15
[24]. புறநானூறு : 30 : 10-14.
[25]. புறநானூறு : 343 : 1-8
[26]. அகநானூறு : 149 : 9-10
[27]. சிறுபாணாற்றுப்படை : 56-58
[28]. மதுரைக் காஞ்சி 135-138
[29]. அகநானூறு : 27 : 8-9.
[30]. பட்டினப் பாலை : 2016-211
[31]. மதுரைக் காஞ்சி : 500
[32]. நற்றிணை : 31 : 8-9
[33]. நற்றிணை : 295 : 5-6
[34]. நற்றிணை : 30:8-9.
[35]. திருக்குறள் : 120
-------
மொழி மக்கள் மனத்தினைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி எனலாம் [1]. மொழி எண்ணத்தை வெளிப் படுத்தும் கருவியாக[2] அமைவதனால் அம் மொழியில் அமைந்துள்ள இலக்கியங்கள் அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக் கூறுகளை எடுத்து மொழியும் பெற்றியுடன் திகழ்கின்றன. தமிழ்மொழியின்கண் சிறப்புற்றுத் திகழும் பழைய இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் அக்கால மக்கள் வாழ்வியலினை வளமுறக் காட்டி நிற்கும் கருத்துக் கருவூலங்களாகும். பாட்டும் தொகையும் சங்க இலக்கியம் எனக் கூறப்படும். இப் பழம் பெரும் இலக்கியங்கள் இயற்கையின் பின்னணியிற் பெரு வாழ்வு வாழ்ந்த தமிழர் வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
மனிதனின் வாழ்க்கைக் கூறுகளில் சமயத்திற்குத் தனியானதோர் இடம் உண்டு. மனிதனைப் பக்குவப் படுத்தும் நெறிக்குச் சமயம் என்று பெயர். மக்கள் உயரிய குறிக்கோளோடு விழுமிய வழியில் செல்லச் சமயம் உதவுகின்றது. தமிழர்க்குக் கடவுள் நம்பிக்கையும் அதனால் கடவுள் வழிபாட்டு நிலையும் இருந்தனவாக அறிகிறோம். பின்னாளில் தென்னாடு போந்த ஆரியர் வருகைக்கு முன்பே தமிழர் தம் சமயவாழ்க்கை ஒரு தனிமையான பண்போடு திகழ்ந்ததாகக் கூறுவர்.[3]
தொடக்கக் காலத்தில் ஒருவித அச்சத்தோடு கடவுள் வழிபாடு தொடங்கியிருக்கக் கூடும். 'மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப'[4] என்ற கபிலர் பாடல் இக் கருத்தினை வலியுறுத்தும். வரலாற்றுக்கு எட்டாத பழங்காலத்தில் தெய்வத்தை வழுத்தி வழிபடும் முறைகள் இயற்கையோடு வாழ்வு இயைந்த முறையில் அமைந்திருந்தன.
மலையும் மலையைச் சார்ந்ததுமான குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்த மக்கள், 'வெறியாட்டு முதலிய விழாக்களினால் தெய்வங்களை வழுத்தி மகிழ்விக்கும் அளவிலேயே தமிழர் சமயம் அமைத்திருந்தல் கூடும்' என்றும், 'காலஞ்செல்லச் செல்லத் தமிழருக்கே சிறப்பான வெறி யாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும், ஆரியருக்குரிய கிரியை முதலியவற்றால் மறைக்கப்பட்டு ஒழிந்தன' என்றும் பேராசிரியர் டாக்டர் சு. வித்தியானந்தம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.[5]
சங்க காலத்தே குறிஞ்சி நில மக்களிடத்தே வெறியாட்டு என்னும் வெறிக் கூத்து மிகப் பெரிதும் பரவியிருந்தது 'வெறி' என்னும் சொல் தெய்வத்தைக் குறிப்பதாகும்.[6] தெய்வம் மக்கள் மீது வந்து ஆடுவதை 'வெறியாட்டு' என்று வழங்குவர். முருகனுக்கு இயல்பாய நறுமணத்தை 'வெறி' என உரைப்பர்.[7] இது குறித்தே சங்க காலப் புலமைச் சான்றோராகிய நக்கீரனாரும் திருமுருகனைக் குறிப்பிட வந்த விடத்து 'மணங்கமழ் தெய்வத்திள நலம் காட்டி' என்று குறிப்பிட்டுள்ளார்[8]. தெய்வம் மக்கள் மீது வந்து ஆடுவதை வெறியாட்டென்று வழங்குவர். சங்க இலக்கியங்களில் முருகவழிபாடு கூறப் படும் இடங்களிலெல்லாம் 'வெறியாட்டு' எனப்படும் இத்தகைய கூத்துகள் வருணிக்கப் பட்டுள்ளன. வழி படுவோர் தெய்வம் தம்மிலே வந்து வெளிப்படும் என்னும் நம்பிக்கையுடன் கூத்தாடினர்.
தொல்காப்பியனார் கூறும் இலக்கணம்
தொல்காப்பியனார் தம் பொருளதிகாரத்தில்,
நச்சினார்க்கினியர் நவிலும் விளக்கம்
மேற்காணும் பாடலைக் கூர்ந்து விளக்கம் பெற்றால் வெறியாடல் ஏன் மேற்கொள்ளப் பெறுகின்றது என்பதும் அதன் அகப்பொருள் அமைதியும் நன்கு தெரிய வரும்.
வெறியாட்டு நிகழும் சூழ்நிலை
தலைவன் மாட்டுத் தன் நெஞ்சம் நெகிழ்ந்து அவனிடத்து ஆராக்காதல் கொண்டு வாழும் தலைவி, சில நாள்களில் தலைவனைச் சந்தித்துப் பேச முடியாது போயின் கவல்வாள்; தலைவனைப் பிரிந்திருக்க முடியாத தலைவி உடல் மெலிவாள். தலைவியின் மேனியிலே தோற்றிய வேறுபாடு கண்டதாய் முதலியோர் அவ் வேறுபாடு எதனால் ஏற்பட்டதென்று ஆராயப் புகுவர். நெல்லை முறத்தில் வைத்துக் குறி பார்ப்பவளாகிய கட்டுவித்தியை அழைத்து வந்து கட்டுப் பார்ப்பர். 'கட்டுப் பார்த்தலாவது ஒரு முறத்தில் நெல்லை வைத்து அதை எண்ணிப் பார்த்து அவ்வெண்ணின் வழியே அறிந்த செய்திகளைக் கூறல்' என்பதாகும்.[12] இவ்வாறு நிமித்தம் பார்ப்பவள் அகவன் மகள் என வழங்கப்படுவாள். அவ்வாறு அவள் தெய்வங்களைப் பாடி அழைத்து நிமித்தம் பார்க்கும் பொழுது, தலைவி, தலைவனிடத்துக் கொண்டு காதலை எவ்வாறேனும் தாய்க்கு அறிவித்துவிட வேண்டும் என்று எண்ணங் கொண்ட தோழி அவ் அகவன் மகளை அணுகுகின்றாள். அவள் ஒவ்வொரு மலையாக வருணித்துப் பாடிவிட்டு, தலைவன் வாழும் குன்றத்தையும் பாடி முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை தலைவனின் குன்றத்தையே பாட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறாள். இதனால் தாயர் முதலியோருக்குத் தலைவியின் காதல் நெஞ்சமும் வாழ்வும் தெரிய வருகின்றன. அப் பாட்டு வருமாறு:
வேலன் வெறியாட்டயர்தல்
தலைவியின் உடலில் வேறுபாடு கண்ட தலைவியின் தாய் முருககோயிற் பூசாரி படிமத்தான் எனப்படும் வேலனை அழைத்துத் தலைவியின் நோய்க்குரிய காரணத்தை வினவுவாள். வேலன், குறிஞ்சி நிலத்தெய்வம் முருகனேயாதலால் இது முருகனாலாயதென்று கூறுவான். முருகனுக்குப் பலி கொடுத்துப் பூசனை புரியின் தலைவியின் நோய் நீங்குமென்பான். முருகனை விளையாட்டயர வேலன் புனையும் வெறியயர்களம் மிகவும் அழகுறப் புனையப் பெறும். குறுந்தொகையில் இருபாடல்களில்[14] இவ் வெறியயர் களம் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கக் காணலாம். 'மணற் பரப்பிலே புன்க மலர்கள் உதிர்ந்து பரவிக் கிடத்தல், முருகன் வெறியர் களந்தொறும் செந்நெல் வான்பொரி சிதறினாற் போல உள்ளது, [15] என்றும், 'விளங்கிய கடற் பரப்பிலே நல்ல மணங்கமழும் ஞாழல் மலருடன் புன்னை மலரும் பரவி வெறியயர் களம் போலத் தோன்றும்[16] என்றும் வெறியயர்களம் பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது.
மதுரைக் காஞ்சியில் வெறியாடு களம்
தலைவியின் உடல் மெலிவிற்குக் காரணம் முருகனே என்று கூறி, வேலன் முருகனைப் பரவி வழிபட்டுக் கூத்தாடுவான். 'அரிய அச்சத்தைத் தோற்றுவிக்கும் வேலன் தலைவிக்கு வந்துள்ள இடுக்கண் முருகனால் விளைந்தது என்று கூறி, கேட்டோரை வளைத்துக் கொண்டு, அரித்தெழும் ஓசையையுடைய இனிய வாத்தியங்கள் ஒலிக்க, கார்காலத்தே மலரும் மலராகிய குறிஞ்சியைச் சூடி, கடப்ப மாலையணிந்த முருகனைச் செவ்விதாகத் தன் மெய்க்கண்ணே நிறுத்தி வழிபட மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து மன்றுகள் தோறும் நின்று குரவைக் கூத்து அயர்வர். '[17]
திருமுருகாற்றுப்படையின் வெறியயர் களம்
'கோழிக் கொடியுடன் திருமுருகனைக் களத்திற்கு எழுந்தருள் வித்து, நெய்யுடன் வெண்சிறு கடுகையும் மெய்யில் அப்பிக் கொண்டு, வழிபடும் மந்திரத்தை உச்சரித்தபடி, சிவந்த நூலைக் கையிலே காப்பாகக் கட்டிக்கொண்டு வெண்பொரியைத் தூவி, ஆட்டின் குருதியுடன் பிசைந்த தூய வெள்ளிய அரிசியைச் சிறுபலியாக இட்டு, மஞ்சள் நீருடன் நறுமணஞ் சான்ற சந்தனம் முதலியவற்றைத் தெளித்து, செவ்வலரி முதலிய பூக்களை மாலையாகச் தொங்கவிட்டு, ஊரெங்கும் பசியும் பிணியும் நீங்குக வென்று வாழ்த்தி, நறிய புகை யூட்டி, குறிஞ்சித் தீம் பண்ணைப் பாடி, இன்னிசைக் கருவிகள் பலவும் அருவி யென ஒலிக்க, பலவகைச் செந்நிறப் பூக்களைத் தூவிச் செந்தினை பரப்பி, வெறியயர் களத்தைப் புனைந்து, ஆர வாரம் எழும்பப் பாடி மணியசைத்து வழிபடுவர்' என்ற செய்தி, குறமகள் வெறியயர்ந்தாள் என்ற நிலையில் திருமுருகாற்றுப்படையாற் பெறப்படுகின்றது.[18]
அகநானூற்றில் ஆடுகளம்
'மலைநாட்டுத் தலைவன் மார்பு செய்த காதல் நோயினைத் தாய் அறியாதவளாகித் தலைவியின் வளை நெகிழ்ந்த தன்மையைப் பார்த்துச் செயலற்ற உள்ளத் தினளாய்க் கட்டுவிச்சியை வினவ, அவள் பிரப்பரிசியைப் பரப்பி வைத்து, இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம் என்ற கூற, அதனை வாய்மையாகக் கருதி, ஓவியத்தை யொத்த அழகு புனையப்பெற்ற நல்ல மனையில், தன் மகளின், பலராலும் போற்றப்பட்ட பண்டைய அழகு முன்போற் சிறப்புற வேண்டுமென்று தெய்வத்தைப் பரவ நினைந்தாள். இணைந்த பலவாய இனிய இசைக்கருவிகள் இசைந்து ஒலிக்க, வெறியாடும் களனை இயற்றி, ஆடுதற் கமைந்த அழகிய அகன்ற பெரிய பந்தலில், வெள்ளிய பனந்தோட்டினைக் கடப்ப மலரோடு சூடி, தாளத்தோடு பொருந்த முருகக் கடவுளின் பெரும் புகழினைத் துதித்து வேலன் வெறியாடு களத்தில் கூத்தயர்ந்தான்.[19]
இச் செய்தியினை வெறிபாடிய காமக் கண்ணியார் நவில்கிறார். வெறியாட்டுப் பற்றிய சிறந்த பாடல்களைப் பாடிய சிறப்பால் இப் புலவர் இச் சிறப்பினைப் பொருத்த
முறப் பெற்றுள்ளார்.
வெறியாட்டில் வேலன்
ஐந்குறுநூற்றில் அமைந்துள்ள வெறிப்பத்து[20] என்னும் பகுதியில், தலைவியின் பொலிவற்ற தோற்றத் திற்கு முருகனே காரணம் எனக் கூறி வேலன் முருகனைப் பரவுவான்' என்றும்,[21] குறுந்தொகையில், 'மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் முருகக் கடவுளால் வந்தது என்று வேலன் கூறி விழாவயர்வான்' என்றும்[22] கூறப்படுகின்ற செய்திகளால் வேலனின் செயல்கள் விளக்க முறுகின்றன வெறியாடும்பொழுது வேலன் கழற்காயை உடம்பில் அணிந்து கொண்டு படிமக்கலத்தைத் தூக்கிக் கொண்டு முருகணங்கின் குறையென வேலன் மொழி வான்[23]. வெறியாட்டில் ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையையுடைய பிரப்பை வைத்து வழிபடுவர். [24]
சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியை அறுத்து வேலலைப் பரவுவதும் உண்டு.[25] பலவாக நிறம் வேறுபட்ட சோற்றை உடைய பலியுடன் சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று தலைவன் மார்பு செய் நோய் உள்ள பெண்ணின் நறிய நெற்றியைத் தடவி, முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பான் வேலன் என்பது குறுந்தொகைப் பாட்டொன்றால் நாம் பெறுகின்ற செய்தியாகும்.[26] இவ் வெறியாட்டில் தெய்வம் ஏறப்பெற்று அசைகின்ற அசைவு, உலாவி அசைந்து ஆடுகின்ற விறலியின் ஆட்டத்திற்கும், அரிய மணியை உடைய பாம்பின் ஆட்டத்திற்கும் ஒப்பிடப்பட்டுள்ளது. [27] ஆடுகளத்தில் மகளிர் ஆடுகின்ற ஆட்டம், தெய்வத்திற்குப் பலியாக இட்ட செழுமையாக தினைக்கதிரைத் தெரியாமல் உண்ட மயில் வெம்மையுற்று நடுங்கி ஆடுதற்கு ஒப்பிடப் படுவதும் உண்டு[28]. குறுந்தொகை,[29] அகநானூறு,[30] பட்டினப்பாலை,[31] முதலியவற்றில் வெறியாட்டம் மேவிய மகளிரின் தோற்றப் பொலிவைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.
வெறியாட்டுக் குறித்து இளம்பூரணர்
முன் குறிப்பிடப்பெற்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு இளம்பூரணர் காட்டும் உரையால் வெறியாடல் பற்றிய மேலும் சில கருத்துக்கள் விளக்கமுறுகின்றன.
'காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்க மாகிய வெறியும், அந் நிலத்துள்ளார் (குறிஞ்சி நிலம்) வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இந் நிலத்திற்குச் சிறந்தது' என்பர் இளம்பூரணர்.
முடிவுரை
தெய்வங்கள், பரவி வழுபடுவார் மீது தோன்றித் தான் கூறவேண்டுவனவற்றைக் கூறும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டிலும் ஈழத்து வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் மக்களிடையே இன்றும் நிலவுவதாக அறிகிறோம்.[33] பழங்காலத்தில் மக்கள் கூத்தாட்டு நிகழும் பொழுது முருகன், வழிபடும் பூசாரியின் மேல் வந்து வெளிப்பட்டுத் தான் கூற வேண்டியவற்றைக் கூறுவான் என நம்பினர். சமய நம்பிக்கையினை ஒருவாறு உரைக்கும் இவ் வழக்கு, பண்டைய காதல் ஒழுக்கத்தின் ஒரு துறையினையும் ஒளியாமல் வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம். தோழி வெறியாட்டு எடுக்கும் பொழுதும், தலைவி மெலிந்து வாடி வேறுபட்ட நிலையில் தாய் ஐயுறும் பொழுதும், தமர் தலைவனுக்கு வரைவு மறுக்கும் பொழுதும், நொது மலர் வரைவின்போதும், கட்டுக்காணிய நின்றவிடத்தும், கூட்டம் உண்மையினைத் தாய் அறிந்தவிடத்தும் முன்னிலைப் புறமொழிகளால் அறத்தொடு நிற்பாள். எனவே, வெறியாட்டு என்பது தோழி அறத்தொடு நிற்றலுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது என்றும், தலைவி மாட்டுத் தலைவன் கொண்ட காதலைச் சத்துவம் தோன்றத் தெரிவிப்பதற்கு ஒரு வாயிலாக அமைகிறது என்றும் கூறலாம். சுருங்கக் கூறின், பண்டைத் தமிழ் மக்களின் அகத்திணை ஒழுகலாற்றின் ஒரு கூற்றினை வெறியாட்டு விளங்கவுரைத்து நிற்கிறது எனலாம்.
---------------
[1]. "The language is a mirror of their (People) minds-"Pillstleury and Meader- The Psychology of Language, P. 290
[2]. The language is the vehicle of thought.
[3]. டாக்டர் சு. வித்தியானந்தம்; தமிழர் சால்பு ப. 106.
[4]. குறுந்தொகை : 87 : 1-2.
[5]. தமிழர் சால்பு : ப, 106, 107.
[6]. தமிழ்க் கலக்களஞ்சியம்: தொகுதி 6; பக்கம் 505.
[7]. நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை - அக நானூறு உரை, கழகப் பதிப்பு: ப. 231.
[8]. திருமுருகாற்றுப்படை, அடி 290.
[9]. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை யியல்; நூற்பா 60.
[10]. தொல்: பொருள் . நூற்பா 60. நச்சி. உரை.
[11]. அகநானூறு : 22
[12]. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் : குறுந்தொகை உரை: நூலாராய்ச்சி ப. 79.
[13]. குறுந்தொகை : 23
[14]. குறுந்தொகை 53, 318
[15].
[19]. அகநானூறு : 5-19
[20]. ஐங்குறுநூறு - 241-250
[21]. ஐங்குறுநூறு - 249-1-2
[22]. குறுந்தொகை : 111: 1-2
[23]. ஐங்குறுநூறு : 245 : 1-3
[24]. மறிக்குர வறுத்துத் தனைப்பிரப் பிரீஇ - குறுந்தொகை : 263 : 1
[25]. சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து - திருமுருகாற்றுப்படை: 218
[26]. குறுந்தொகை : 362 : 3-5
[27]. பதிற்றுப்பத்து : 51: 10-13
[28]. குறுந்தொகை : 105 : 2-4
[29]. குறுந்தொகை : 366,
[30]. அகநானூறு : 370 : 14
[31]. பட்டினப்பாலை : 154 : 155
[32]. புறப்பொருள் வெண்பாமாலை, இருபாற் பெருந்திணை : 10.
[33]. டாக்டர் சு. வித்தியானந்தம், தமிழர் சால்பு : பக்கம் 111.
------------
சங்க நூல்களில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான கலித்தொகை, 'கற்றறிந்தா ரேத்துங் கலி' என்று ஆன்றோராற் பாராட்டப்பெறும் பெருமையுடைய தாகும். கலிப்பா வகையுட் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாடல்களைத் தன்னகத்தே கொண்டது இந்த நூல். "இச் செந்தமிழ்ப் பெருநூல் தேன்செறிந்த மொழிகளாலும் தெள்ளிய உருவகங்களாலும் இயன்ற கற்போருள்ளத்தைக் கவருந் தகைமைத்தாம். மக்கள் தம் நால்வாழ்விற்கு வேண்டிய நன்னெறிகள் பலவற்றை இடையிடையே தொகுத்தும் விரித்துஞ் சுட்டிச் செல்வதும் இந் நூலின் சிறப்புக்களில் ஒன்றாம்"[1] என்பர்.
பிற்றைநாட் புலவர்களாலும் கலித்தொகை போற்றப் பட்டது என்பதனைப் பின்வரும்
பாடல் கொண்டு அறியலாம்.
இனி, கலித்தொகை காட்டும் மகளிர் கற்பு நெறியினைக் காண்போம்.
முதலாவதாகக் கற்பு எனப்படுவது யாதென்று நோக்குவோம். உரையாசிரியர் என்றே பெருமையுடன் அழைக்கப்பெறும் இளம்பூரணர், 'கற்பு என்பது - மகளிர்க்கு மாந்தர் மாட்டும் நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது' என்று பொருள் விரித்துள்ளார்[2]. இளம்பூரணரே பிறிதோரிடத்தில், 'கொடுப்பக் கொள்வது கற்பு என்றமையால், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும், களவு வெளிப்படாத வழி யும், மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளப் புணர்ச்சியான் உரிமை பூண்ட வழியும் கொள்ளப்பெறும் எனக் கொள்க' என்று குறிப்பிட்டுள்ளார்.[3] நச்சினார்க்கினியர் கற்பின் இலக்கணத்தை விரிக்குமிடத்து, 'அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுக வெனவும் இதுமுது குரவர் கற்பித்தலானும், 'அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும், 'ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்' (தொல். பொ. 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின்கண் ஓரையும் நாளுந் தீதென்று அதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது ஒத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக்கொண்டு துறவறத்திற் செல்லுந்துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று" என்று நயம்படக் கிளத்தியுள்ளார்.[4] கற்பியவில் இவ்வாறு பொருள் உரைத்த நச்சினார்க்கினியர், பொருளியலில், 'கற்பாவது, தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள்' என்று குறிப்பிட்டுள்ளார்.[5]
தொல்காப்பியனார் கற்பைப்பற்றிக் கூறுவனவற்றைத் தொகுத்துப் பேராசிரியர் மு. இராகவைங்கார் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்[6]:
"கற்பாவது - கொள்ளுதற்குரிய தலைவன், வேள்விச் சடங்கொடு கூடத் தலைவியை அவள் பெற்றோர் கொடுப்பக் கொள்ளுதலாம்." (142)
கொண்டானிற் சிறந்த தெய்வமின்றெனவும், அவனை இன்னவாறு வழிபடுக எனவும், இருமுது குரவர் (பெற்றோர்) கற்பித்தலாலும், அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் கடவுளர் - இவர்களிடத்து ஒழுகும் ஒழுக்கத்தைத் தலைமகன் கற்பித்தலாலும், வேதத்தும் சடங்கினும் விதித்த சிறப் பிலக்கணங்களைக் கற்பித்துக் கொண்டு, துறவறத்துச் செல்லுந்துணையும் இல்லற நிகழ்த்துதலாலும், கொண்ட தலைவனை இன்னவாறு பாதுகாப்பா யென்றும், அவற்கு நீ இன்னவாறு குற்றேவல் செய்தொழுகென்றும் அங்கியங்கடவுள் சான்றாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலாலும் 'கற்பு' எனப் படுவதாயிற்று' என்பர்.
பாலைக் கலியின் முதற்பாடலிலேயே மகளிர் தம் கற்புச் சிறப்பு சுட்டப்படுவதனைக் காணலாம்[7]. பொருள் தேடும் முயற்சி மேற்கொண்டு பிரியக் கருதிய தலை மகனைத் தோழி அவன் தலைமகளை விட்டுப் பிரியா திருப்பதற்கு ஏதுக்கள் சிலவற்றைக் காட்டி நிற்கிறாள். 'மறப்பரும் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந் தனீர்' என்று சாடுகின்றாள். 'தம் கைப் பொருள்களைப் பிறர்க்கு ஈந்து தீர்த்துவிட்டுத் தாம் வந்து நம் பால் இரந்து நிற்பவர் சிலர்; அத்தகையோர்க்கு நாம் இல்லையெனச் சொல்லி வழங்காமற் போவது இழிவன்றோ?' என்று எண்ணி, மலை பல கடந்து செல்லவும் ஒருப்பட்டனை. அவ்வாறு மலை பல கடந்து தேடிவரும் பொருள் தான், பொருளால் பெறும் பயனை உனக்குத் தருமோ? நிலை பெற்ற கற்பினையுடையவளான இவள், நீ பிரிந்தால் உயிர் வாழாது இறந்தொழிவாளே . இவள் மார்பைத் தழுவியபடியே இவளை வாழச்செய்து பிரியாதிருத்தலன்றோ உண்மையான செல்வம் ஆகும்" என்று தலைமகனைத் தெருட்டினாள் தோழி,
தலைவனின் துன்பத்திற்குத் துணையாக நிற்கத் தலைவி பெரிதும் விருப்புகின்றாள். எனவே,
இடைச்சுரத்திடை முக்கோற்பகவரைக் கண்டு, உடன் போக்கு ஒருப்பட்டுச் சென்ற தலைவி குறித்துச் செவிலித் தாய் உசாவிய போதும், முக்கோற்பகவர், தனைவி இறந்த கற்பினாள் '[12] என்றும், அவளுக்கு ஏதும் துன்பம் விளைவிக்காதீர்கள்' என்றும் குறிப்பிட்டிருக்கக் காணலாம்.
'உலகமே வறட்சியால் துயருற்ற காலத்தும், மழையைப் பெய்விக்கும் கற்புச் சக்தி யுடையவளான இவன் மனைவி' என்று கலித்தொகை காட்டும் தலைவி ஒருத்தி விளங்குகின்றாள்:
'வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்.'[13]
மேலும் தலைவனும் தலைவியும் இளமைச் செவ்வியும் காமவிருப்பமும் ஒருங்கே பெற்றவர்களாதலின், சாதாரணப் பொருட் செல்வத்தினை விரும்பி இவற்றைத் துறத்தல் கூடாது என்றும், வாழ்நாள் வரையிலும் இணைந்தும் பிணைந்தும் நிற்றலே வாழ்வாவது என்றும், வறுமை காரணமாக ஒரு துண்டு ஆடையே உடுப்பவராக வாழ்ந் தாலும், அதனைப் பொருட்படுத்திக் கவலையில் ஆழாது, ஒன்றிக் கலந்து வாழ்பவரின் வாழ்க்கையே சிறந்த இன்ப வாழ்க்கையாகும் என்றும், காரணம், கழிந்துபோன இளமையை மீட்டுத் தருவதென்பது எவருக்கும் அரிதான செயலாகும் என்றும் தோழி பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவனிடம் கூறி, இல்வாழ்க்கையின் கற்புநெறியின் இனிய பெற்றியினை எடுத்துரைக்கின்றாள் :
"நல்ல பெண்கள் நாணத்தால் தலை கவிழ்வது போலத் தினைக்கதிர்கள் முற்றித் தலை சாய்ந்துள்ளன' என்கிறார் கபிலர் :
மருதனிள நாகனார் ஊடியும் கூடியும் தலைவன் தலைவியர் போகம் நுகரும் மருதத்திணை யொழுக்கத்தைப் பாட வருகின்றார். காதலரிருவரும் விரும்பும் திருமண நாளன்றிரவு, தலைவி ஆடைக்குள் ஒடுங்கியவளாக, காதல் கொண்ட, மருண்ட மான் நோக்கினை யுடையவளாக விளங்குகின்றாள். வேதம் வல்ல அந்தணன், இருவரையும் எரியை வலம் வருமாறு சொல்ல, தலைவனும், தலை கவிழ்ந்தவாறு தலைவியும் வலம் வருவர்' என்று கற்பு நெறியில் தலைப்படும் காதலர் காட்சியின் மாட்சியினை விளக்கிக் காட்டுவர்:
'அதோ ஏற்றின்மீது கிடக்கின்ற அவ் ஆயன் இவள் தன் தோளின் மீது கிடப்பான். அக் கபிலையைத் தழுவுகின்றான் இக் காரிகையை உறுதியாகக் கூடுவான். அச்செவ்-வேற்றினத் தழுவலுறுகின்றான், இத் தலைவியின் மூங்கிற்றோள்களில் துயிலப் பெறுவான்" என்று பல படித்தாகவெல்லாம் ஆயர் மகளிர் தமக்குள்ளே பேசிக் கொள்வர்:
’ஆயமகன் கொண்ட காதல் தவறாது அன்னையால் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில் ஆயமகளின் தாயும் அவ்வாறான காதல் நெஞ்சம் வாய்ந்தவளே' என்று உரைக்கின்றாள் தோழி:
தலைவன் பிரிவால் கலங்கித் தவிக்கும் தலைவி, 'இல்லத்திலுள்ள நீர் கலங்கியிருந்தால் அது இருக்கும் பாத்திரத்துள், சிறிது தேற்றாவின் விதையைத் தேய்த் ததும், அந்நீர் தெளிந்து விடுவது போல், மார்பழகு நிறைந்த மாண்பார் தலைவனைச் சேர்ந்ததும் தெளிவுற்று நலம் பெற்றுவிடுகிறாள் என்பதும் நெய்தற் கலிப்பாடல் ஒன்று கூறும் செய்தியாகும்.
-----
[1]. கலித்தொகை; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு ; பதிப்புரை. ப. 5, 6.
[2]. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; இளம்பூரண ம்; பொருளியல். நூற்பா, 51 உரை
[3]. தொல்காப்பியம்; பொருளதிகாரம்: இளம்பூரணம்; கற்பியல்; நூற்பா 1, உரை.
[4]. தொல்காப்பியம்; பொருளதிகாரம். நச்சினார்க் கினியம்; கற்பியல், நூற்பா 1, உரை
[5]. தொல்காப்பியம்; பொருளதிகாரம்: நச்சினார்க் கினியம்; பொருளியல், நூற்பா 52, உரை
[6]. தொல்காப்பியம்; பொருளதிகார ஆராய்ச்சி : ப. 84.
[7]. பாலைக்கலி; 1 : 9-10.
[8]. கலித்தொகை; பாலைக்கலி; 1: 11-14
[9]. கலித்தொகை; பாலைக்கலி; 1: 17.
[10]. கலித்தொகை; பாலைக்கலி; 1 : 21.
[11]. கலித்தொகை; பாலைக்கலி; 5: 10-11.
[12]. கலித்தொகை; பாலைக்கலி; 8 . 22.
[13]. கலித்தொகை; பாலைக்கலி; 16.20.
[14]. கலித்தொகை; 17 : 5-22
[15]. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 3 : 11-14.
[16]. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 3 : 15-19.
[17]. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 4 : 1-3.
[18]. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 18 ; 16-20.
[19]. கலித்தொகை; மருதக்கலி; 4 : 3-5.
[20]. கலித்தைாகை; மருதக்கலி: 13 :19-20.
[21]. கலித்தொகை; முல்லைக்கலி; 2:21-24
[22]. கலித்தொகை; முல்லைக்கலி; 3 : 60-64
[23]. கலித்தொகை; முல்லைக்கலி; 3 ; 71-73
[24]. கலித்தொகை; முல்லைக்கலி; 4:18. 28.
[25]. கலித்தொகை; முல்லைக்கலி; 4; 73.76.
[26]. கலித்தொகை; முல்லைக்கலி;7: 20-23
[27]. கலித்தொகை; முல்லைக்கலி; 14; 15-21.
[28]. கலித்தொகை; நெய்தற்கலி ; 25; 64-66.
-------------------
தமிழ், முத்தமிழ் என்று வழங்கப்படுகிறது. இயல், இசை, கூத்து என்ற முப்பிரிவுகள் தமிழில் அமைந்து 'முத்தமிழ்' என வழங்கப்படுகின்றது. கூத்து எனினும், நாடகம் எனினும் ஒன்றே. திருவள்ளுவர் 'கூத்து' என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.
சங்க காலத்தில்
சங்க காலத்தில் நாடகத் தமிழ் நல்ல நிலையில் இருந்தது. இயல் இசை ஆகிய இரண்டன் சேர்க்கையால் உண்டாகும் நாடகத் தமிழில் ஈடுபட்ட கலைஞர்கள் 'கூத்தர்' என வழங்கப்பெற்றனர். ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறவந்த தொல்காப்பியனார்,
மேலும், குறிஞ்சிக்கலியின் பாடல்கள் பல நாடக நயம் நிறைந்து காணப்படுகின்றன.
சிலப்பதிகார காலத்தில்
சிலப்பதிகாரம் தமிழின் முதற்பெரும் - தனிப்பெரும் காப்பியமாகும். இது 'முத்தமிக் காப்பியம்' என்றும் வழங்கப்பெறும், சிலப்பதிகாரத்தின் கலைச்செல்வி, 'நாடக மடந்தை' என்று குறிப்பிடப்படுகிறாள்.
எனவே, சிலப்பதிகார காலத்தில் நாடகம் என்ற சொல் நாட்டியத்தையும் குறித்து நின்றதனை அறியலாம். சிலப் பதிக்கார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தம் உரையில், 'நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலிய தொன்னூல்களும் இறந்தன. பின்னும் முறுவல். சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்' என்று மறைந்த நாடகத் தமிழ் நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடியார்க்கு நல்லார் தம்முடைய காலத்தில் வழங்கிவந்த நூல்களாகத் தெரிவித்துள்ள இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரத சேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலியனவுங்கூட இக்காலத்துக் கிடைக்கவில்லை.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பெறும் 'நாடக மடந்தையர் ஆடரங்கு' ஒரு முக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்னும் முத்திறத்தவான திரைச் சீலைகள், தூண் நிழல் அரங்கினுள் விழுந்து நாடகத்தில் பங்கு கொள்வோரை மறைத்து விடாமலிருக்க விளக்குகளை அமைத்தல் முதலிய செய்திகள் எல்லாம், நாடகக் கலை சிலப்பதிகார காலத்தில் சிறப்புற்றிருந்த நிலையினைக் காட்டும். கூத்தச் சாக்கையன் ஆடிய கூத்தினை,
இடைக் காலத்தில்
'நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து' என்று மணிவாசகப் பெருந்தகையார் தம் திருவாசகத்தில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இங்கு 'நாடகம்' என்ற சொல், நடித்தல், விளையாட்டு என்ற பொருளில் வந்துள்ளது. சீவகசிந்தாமணியில்,
மேலும், உரையாசிரியர் என வழங்கப்பெறும் இளம் பூரண அடிகள், 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்' என்னும் நூற்பாவிற்கு உரை விரிக்கும்பொழுது,
”நாடக வழக்காவது, சுவைபடவருவனவெல் லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத்தாலும், குலத் தாலும், ஒழுக்கத்தாலும், அன்பினாலும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப் பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவன வெல்லாம் ஒருங்குவந்தனவாகக் கூறுதல்"
என்று குறிப்பிட்டுள்ளமை நாடக வழக்கின் நயத்தினை நன்கு காட்டும் .
ஆயினும், இக்காலத்தே நாடகங்கள் மிகப் பலவாக வழங்காமல் அருகியே போயிருக்க வேண்டும். காரணம், இக்காலத் தொழுந்த நாடக நூல்கள் ஒன்றேனும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் படிப்பதற்கென்று நாடகங்கள் எழுதப் பெறவில்லை என்பது தெரியவருகிறது. நடிப்பதற்கென்றே நாடகங்கள் எழுதப்பெற்று, அவையும் நாடகக் குழுவினர் மட்டுமே எழுதிப் படித்துக் கொள்ளும் நிலையில் இருந்தன என்பதனை உணரலாம்.
பிற்காலச் சோழர் காலத்தில்
இடைக்காலத்தே நலிந்து போன நாடகக் கலைக்குப் பிற்காலச் சோழ மன்னர்கள் புத்துயிரூட்டிப் புரந்தனர். திருக்கோயில்களில் திருவிழாக் காலங்களில் நாடகங்கள் நடிக்கப் பெற்றனவாக நாம் அறிய வருகிறோம். முதலாம் இராஜராஜ சோழ மன்னன் காலத்தே தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் இராஜராஜேசுர நாடகத்தை ஆட ஏற்பாடு செய்தான் என்று கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. அக் கல்வெட்டுப் பகுதி வருமாறு:
"............. உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வர முடையார் கோயிலிலே ராஜராஜேசுவர நாடக மாட நித்தம் நெல்லுத் தூணியாக நிவந்தஞ் செய்த நம்வாய்க் கேழ்விப்படி சாந்திக்கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றனான விஜய ராஜேந்திர ஆசார்யனுக்கு இவன் வமிசத்தாருக்கும் காணியாகக் கொடுந்தோமென்று ஸ்ரீ காரியக் கண்காணி செய்வார்க்கும் கரணத்தர்களுக்கும் திருவாய் மொழிந்தருளி திருமந்திர ஓலை ......... வந்தமை யிலும், கல்வெட்டியது. திருவாலந் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆ சா ரி ய ன் உடையார் வைய்கா சிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேசுவர நாடகமாட, இவனுக்கும் இவன் வம்சத்தாக்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கும் இராஜகேசரியோடொக்கும் ஆடவலானென்னும் மரக்காலால் நீத்த நெல்லுத் தூணியாக நூற் றிருபதின் கலநெல்லும் ஆண்டாண்டுதோறும் தேவர் பண்டாரத்தெய் பெறச் சந்திரா தித்தவற் கல்வெட்டித்து."
இந் நாடகம் நெடுங்காலம் நஞ்சைத் தரணியிற் நடை பெற்று வந்ததென்றும், தஞ்சையை மராட்டியர் கைப் பற்றி ஆளத் தொடங்கிய காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டது என்றும் வரலாற்றாராச்சி அறிஞர்கள் குறிப்பிடுவர்.
முதலாம் குலோத்துங்க சோழன் காலத்துத் திருப் பாதிரிப்புலியூரில் உள்ள பாடலிபுரீசுவரம் கோயிற் கல்வெட்டு 'பூம்புலியூர் நாடகம்' அக்கோயிலில் நடைபெற்று வந்த செய்தியினை எடுத்துரைக்கின்றது. இவ்வாறான இன்னும் பல செய்திகளைக் கொண்டு பிற்காலச் சோழர்கள் காலத்தில் நாடகக் கலை பெற்றிருந்த நல்ல நிலையினை அறியலாம்.
பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்
சீகாழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், என்னயினாப் பிள்ளையின் முக்கூடற்பள்ளு நாடகம், திரி கூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய நந்தன் சரித்திரம், மாரிமுத்துப் பிள்ளையின் நொண்டி நாடகம் முதலியன நாடக நயஞ்சான்ற தமிழ் நாடக நூல்களாம்.
பெங்களூர் அப்பாவு பிள்ளை இயற்றிய சத்திய பாஷா அரிச்சந்திர விலாசம், காசி விசுவநாத முதலியார் இயற்றிய டம்பாச்சாரி விலாசம் முதலியன சென்ற நூற்றாண்டில் எழுந்த குறிப்பிடத்தக்க நாடகங்கள், பார்சி நாடகங்கள் நாடகத்துறையில் ஒரு நல்ல முன்னேற்றத்தினைத் தந்தன.
நாடகத்தமிழ் வளர்த்த நல்லவர்கள்
தமிழ் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள் (1867 -1922) திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து தம் இருபத்து நான்காவது வயதில் நாடகத்துறையிற் புகுந்து, வேடம் புனைந்து நடித்து, பின் துறவு மேற்கொண்டு, வண்ணம், சந்தம் முதலியன பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்து, பல சபாக்களில், நடிப்பாசிரியராக விளங்கி, ஓரிரவிலேயே நான்கு மணி நேரம் நடைபெறக்கூடிய நாடகம் முழுவதனையும் அடித்தல் திருத்தல் இன்றிப் பாடல்கள் வசனங்களோடு எழுதி முடிக்கும் திறன் பெற்றவராய் விளங் கினார். தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வங்கள் எனக் சொல்லத்தகும் நாடகங்கள் பலவற்றை இயற்றித் தமிழ் நாடகத் தலைமை-யாசிரியராகக் கொள்ளத் தக்கவராகின்றார். நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் நீதித்துறையில் உயர் பதவி வகித்தும், நாடகத் துறையில் ஈடுபட்டுத் தாமே மேடையேறி நடித்து 'கூத்தாடிகள்' என்று நாடகக் கலைஞர்கள் அழைக்கப்பட்ட இழிநிலையினைப் போக்கிச் சமுதாயத்தில் அவர்களுக்கு ஓர் உயர்ந்த தகுதியினைப் பெற்றுத் தந்தார். ஆங்கில நாடகங்கள் பலவற்றைத் தழுவித் தமிழில் நாடகங்கள் எழுதியும், தாமாகவே பல நாடகங்களை எழுதியும் நாடகப் பேராசிரியராக விளங்கினார் இவர். இவ்விருவரும் இந் நூற்றாண்டில் நாடக இலக்கியமும் கலையும் வளர்த்த நல்ல தமிழ்ச் சான்றோர்கள் ஆவர், இவர்கள் ஆற்றிய தொண்டின் வித்து முளைத்து, வளர்ந்து, ஆல்போல் தழைத்து, தமிழ் நாடகக் கலையாக நிறைந்தொளிர்கின்றது.
----------
தமிழ் நாட்டினைப் புண்ணிய பூமி என்று ஆன்றோர் வழங்குவர். இங்குப் பல்வேறு சமயங்கள் பல்வேறு காலங்களில் சிறப்புறத் திகழ்ந்திருக்கின்றன. வரலாற்றுத் தொன்மை மிகுந்த சங்ககாலத்தில் சமயப் பொறை தமிழ் நாட்டில் துலங்கியது என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றாய் இலங்குகின்றன. ஒரே குடும்பத்தினுள்ளும் பல்வேறு சமய நம்பிக்கைகளைத் தழுவியவர்கள் தங்களுக்குள் ஏதும் கலகம் விளைவித்துக் கொள்ளாமல், ஒற்றுமையுணர்வுடன் அமைதி காத்து வாழ்ந்தனர் என்பதனை அறிய முடியும். சமயங்கள் அன்று மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கை-யினையும் தெளிவினையும் அமைதியையும் ஊட்டின எனலாம்.
சைவம், வைணவம் என்று இன்றளவும் தமிழ்நாட்டில் சிறப்புறத் துலங்கிவரும் சமயம் இந்நாட்டிலேயே தோன்றிக் கிளைத்து வளர்ந்து நின்று நிலவிவரும் பழம்பெரும் சமயங்கள் எனலாம். அவ்வாறின்றி வட நாட்டினின்றும் தென்னாடு போந்து நந்தமிழ் நாட்டில் புகுந்த சமயங்களாகச் சமணமும் பௌத்தமும் விளங்குகின்றன. புத்தர்பிரான் பொலிந்த காலத்திலும் அவர்க்குச் சற்று முன்பும் வாழ்ந்தவராகக் கருதப்படும் வர்த்தமானர், தமக்கு முன் அருக சுமயத் தலைவர்களாகத் திகழ்ந்த 23 தீர்த்தங்கரர்களின் சமயக் கோட்பாடுகளை விளக்குபவராகத் தம்மைக் கூறிக் கொண்டார். இவருடைய காலம் கி.மு. 559 - கி. மு. 527 என்பர். கி.மு. 776 இல் நிர்வாண நிலை எய்திய பார்சுவ நாதர் அருக சமயத்தின் ஆதி முதல்வர் என்பர். ஆயினும் வர்த்தமானர், பார்சுவநாதர் எனும் இப்பெரியார்களுக்கு முன்னரேயே இந்தியாவில் இருந்த பழஞ் சமயம் சமண சமயம் என்பது உறுதி. யசுர் வேதத்திலேயே இடப தேவர், அஜாத நாதர், அரிட்ட நேமி முதலான தீர்த்தங்கரர்களின் பெயர்கள் காணப்படுவதனால் இச்சமண சமயத்தின் பழமை அறியப்படும்.
பேராசிரியர் அ. சக்கரவர்த்தி நயினார் என்பவர், நீலகேசி நூலின் முன்னுரையில் வான்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்திலேயே இராமன் தென் திசைக்கண் போந்த போது சமண சமயத்தவர் வாழ்ந்த ஆசிரமங்களைக் கண்டான் என்று கூறப்பட்டிருப்பதனால், பத்திரபாகு முனிவருடன் சந்திர குப்த மெளரியன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் தென்னாடு புகுந்து மைசூரைச் சேர்ந்த சிரவண வேள் குளத்தில் தங்கி வடக்கிருந்து (சல்லேகனம்) உயிர் நீத்தான்; அதனால் அப்போது தான் சமண சமயம் தென்னாட்டில் புகுந்தது எனும் செய்தி தவறென்பர்.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி ஓச்சிய காங்க வமிச மன்னர்களும், தமிழ் இலக்கிய வரலாற்றில் - தமிழ் நாட்டு வரலாற்றில் இருண்ட காலப் பகுதியெனப் கூறப்படும் சங்க மருவிய காலத்தில் அரசாண்ட களப்பிர மன்னர்களும் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெரிதும் இச் சமயத்தை ஆதரித்தனர் என்றும் வரலாற்று வழியே அறிய முடிகின்றது.
சமண சமயத்தின் அடிப்படையான சில கொள்கைகள் இங்கு வாழ்ந்த தமிழர்கள் உள்ளத்தை இறுகப் பற்றின. முதலாவதாகச் சமணசமயம் உயிர்க் கொலையினை வெறுத்தது. தமிழ்நாட்டில் அக்காலையில் வேள்வி செய்தலும், வேள்வியில் உயிர்ப்பலி வழங்கலும் ஆரியர் கூட்டுறவால் நிலவிவந்தன. சமணர்கள் இதனைப் பலமாக எதிர்த்தனர். மேலும் பிறவுயிர்கட்குத் துன்பம் இழைக்கக் கூடாது என்றும், எவ்வுயிர்க்கும் அருள் காட்ட வேண்டும் என்றும், கொல்லாமையை நோன்பாகக் கொள்ள வேண்டும் என்றும், புலால் உண்ணுதல் எவ்வாற்றானும் போற்றப்பட வேண்டாத தீய பழக்கம் என்றும் சமணர்கள் போதித்தனர். இக் கொள்கைகள் எல்லாம் தமிழர்க்கு உவப்பாயமைந்தன.
மேலும் சமண முனிவர்கள் தீயன பயக்கும் பொய்யினைப் பேசக்கூடாது என்றும், பிறர் பொருளைக் கனவிலும் கருதலாகாது என்றும் பிறப்பிற்குப் பெருங் காரணமாக இருக்கும் அவாவினை அகற்ற வேண்டும் என்றும், மகளிர் மோகத்தை விழையாமை வேண்டும் என்றும், பிறரைப் பழித்தலும் பிறர்மாட்டுச் சினங் கொள்ளுதலும், கடுஞ்சொல் கூறுதலும் கடியப்பட வேண்டும் என்றும், நாவடக்கத்தினை நனிபோற்றி மேற் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.
இவ்வாறு நல்வாழ்விற்குரிய நல்ல பல கொள்கைகளைச் சமண சமயம் கொண்டிருந்ததனால் தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழர்களுக்கு இக்கொள்கைகளில் பிடிப்பும் பிணைப்பும் ஏற்பட்டன. மற்றொரு சிறப்பியல் பினையும் சமண சமயத்தாரிடம் காணலாம். எந்தெந்த நாட்டில் அவர்கள் புகுந்து கலந்து வாழ்ந்தார்களோ அவ்வந் நாட்டில் தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்புவதற்கு அவ்வந்நாட்டில் வழங்கிய மொழிகளையே கையாண்டனர். தமிழ்நாட்டிற் போந்த சமணர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டதோடு அமையாது அம்மொழியினை வாழ்வித்து வளப்படுத்தவும் முனைந்தனர் . முதற்கண் சமயப் பிரசார நோக்கத்திற்காகத் தமிழ் மொழியினைப் பயிலத் தொடங்கிய அவர்கள் பின்னர் அம்மொழியில் இலக்கிய இலக்கணம் முதலாய துறைகளில் நூல் பல எழுதத் தலைப்பட்டனர்.
இவர்கள் மக்களிடையே தொண்டு செய்து அவர்கள் நம்பிக்கையினையும் அன்பினையும் முதலாவதாகப் பெற்றனர். பிறப்பினால் இவர்கள் உயர்வு தாழ்வு பாராட்டாமல் எல்லா மக்களையும் சமமாக எண்ணித் தொண்டு செய்தனர், இரண்டாவது, அஞ்சியவர்க்கு அடைக்கலந் தந்து போற்றினர். தென்னார்க்காடு மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றின் தென்கரையில் ஜம்பை என்று இன்று வழங்கும் கிராமம், அந்நாளில் வீரராசேந்திரபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. அங்குச் சோழதுங்கன் ஆள வந்தான் அஞ்சினான் புகலிடம் என்றோர் அடைக்கலப் பள்ளி இருந்ததாகச் சாசனம் ஒன்று கூறுகின்றது. இது போன்றே வடார்க்காடு மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் உள்ள கீழ்மின்னல் கிராமத்திலும், போளூர் தாலுக்கா வடமகாதேவி மங்கலம் என்னும் ஊரிலும் காணப்படும் கல்வெட்டுகள் கொண்டு, அவ்வூர்களில் இத்தகைய 'அஞ்சினான் புகலிடங்கள்' இருந்தனவாக அறியலாம்.
மூன்றாவதாக, மக்கள் பிணி நீக்கும் பெரும் பணியிலும் சமணர் ஈடுபட்டனர். மருத்துவக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த இவர்கள் மருந்துத்தானமும் மக்கட்கு வழங்கினர். நான்காவதாகச் சாத்திர தானத்தினை மேற்கொண்டனர். கல்விக்கண் வழங்கும் திருப்பணியில் இவர்கள் ஈடுபட்ட னர். மேலும் ஈண்டொரு சிறப்புச் செய்தியினையும் குறிப்பிட வேண்டும். ஏடும் எழுத்தாணியுமே நிலவிய அந் நாளிற் செல்வம் படைத்த சமணர்கள் தங்கள் சமய நூல்களைப் பல படிகள் எழுதுவித்து அப்படிகளைத் தக்கார் பயிலத் தானம் செய்தனர் என அறிகிறோம். கி. பி. பத்தாம் நூற்றாண்டில் கன்னட நாட்டில் இருந்த சமண சமயத்தைச் சார்ந்த அந்திமுப்பெ என்னும் பெண்மணி, சாந்தி புராணம் எனும் சமண சமய நூலினைத் தம் செலவில் ஆயிரம் படிகள் எழுதுவித்துத் தானம் செய்ததாக ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 'சமணமும் தமிழும்' எனும் நூலில் (பக்கம்: 44) குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சமண முனிவர்கள் அந் நாளில் தமிழ் நாட்டு மக்களிடையே அவர்தம் பயன் கருதாத் தொண்டின் சிறப்பினால் ஓர் உயர்நிலை பெற்று வாழ்ந்தனர்.
இவர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் சிறப்புடையன என்பது முன்னமே குறிப்பிடப்பட்டது. தமிழின் முதல் இலக்கண நூல் தந்த தொல்காப்பியனாரே சைனர் என்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களது துணிபாகும், இக் கூற்றுத் தக்க காரணங்கள் காட்டப் பெற்று தமிழறிஞர் ஒரு சிலரால் அந்நாளிலும் பின்னாளிலும் மறுக்கப்பட்டது. ஆயினும், இந் நூலில் சமண சமயக் கொள்கைகள் சில காணப்படுகின்றன என்று காட்டுவர். உயிர்களை அறுவகையாகப் பிரித்துக் காணும் மரபியல் நூற்பாவினை எடுத்துக்காட்டாகவும் கூறுவர், திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறிச் சில சான்றுகளைக் காட்டுவர். இது போன்றே சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் கௌந்தியடிகள் வாயிலாக இளங் கோவடிகள் சமண சமயக் கொள்கைகளை விளக்குவதனால் சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் என்றும் ஒரு சிலர் கூறுவர். பதினெண் கீழ்க்கணக்கு நூலுள் ஒன்றாகிய நாலடியார் எண்ணாயிரம் சமண முனிவர்களின் படைப்பு எனக் கூறும் பழைய கதையும் உண்டு. எஞ்சிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு, ஏலாதி, சிறு பஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது, அறநெறிச் சாரம் முதலான நூல்கள் சமண சமயப் புலவரால் எழுதப் பட்டன என்பர். இந் நூல்களைப் பற்றிய விரிவான ஆய்வு ஈண்டு வேண்டப்படுவதில்லை. ஆயினும் இந்நூல்களில் சமண சமயக் கோட்பாடுகளின் எதிரொலி காணப்படு கின்றது என்பது மட்டும் உண்மையாகும்.
இனி, சைனப் பெருமக்கள் தமிழ்மொழிக்கு ஆற்றி யுள்ள தொண்டினைச் சற்று மேலோட்டமாகக் காண்போம்.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர் என்னும் சைன முனிவரால் இயற்றப் பட்டது. இச் சீரிய காப்பியம் நாமகள் இலம்பகம் முதலாக முத்தியிலம்பகம் ஈறாகப் பதின் மூன்று பிரிவுகளையும் 3145 பாக்களையும் கொண்டு உள்ளது. சமணர்கள் இந்நூலி னைப் பாராயணப் பனுவல் நூலாகக் கொள்வர். சீவகன் மகளிர் எண்மரை மணக்கும் செய்தி இந்நூலிற் கூறப்படு வதனால், இந் நூலினை மண நூல் என்றும் வழங்குவர்.
சான்றோர் தன்மைகளாக நாலடியார்,
பெருங்கதை, பைசாச மொழியிற் குணாட்டியர் என்பவரால் இயற்றப்பட்ட பிருகத் கதை. வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அம்மொழியினின்று தமிழ்ப்படுத் தியவர் கொங்குநாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்த கொங்கு வேளிர் என்பவராவர். ஒன்பான் சுவையும் ஒருங்கே அமையப் பெற்றுப் பல சமண சமய வழக்கு களையும் தன்னகத்தே கொண்டுள்ள நூல் இஃதெனலாம்.
இலக்கணத் துறை சைனராலேயே பெரிதும் வளம் பெற்றதெனலாம். தொல்காப்பியனாரே சமணம் என்ற கூற்று, சரியோ தவறோ, நன்னூல் என்று பிற்காலத்துச் சிறந்ததோர் இலக்கண நூலினைத் தந்த பவணந்தியார் சைனரே என்பதில் தடையில்லை. மேலும் 'அகப்பொருள் வினக்கம்' இயற்றிய நாற்கவிராச நம்பி, யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை எனும் இரு சீரிய யாப்பிலக்கண நூல்களை இயற்றிய அமிதசாகரர் (யாப்பருங்கல விருந்தியினை இயற்றியவர் குணசாகரர் என்ற கருத்தும் நிலவுகிறது) நேமிநாதம் எனும் நூலை இயற்றிய குணவீர பண்டிதர், வெண்பாப்பாட்டியல் என வழங்கும் வச்சணந்தி மாலையினை இயற்றிய குண வீரபண்டிதர் முதலானோர் சைன சமயப் பெரியோர்களே ஆவர்.
மேலும், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட முதல் உரையாசிரியராம் இளம்பூரணரும், தமிழின் முதற் காப்பியமாம் சிலப்பதிகாரத்திற்கு உரைகண்ட அடியார்க்கு நல்லாரும் அமண் சமயத்தைச் சார்ந்தவர்களே ஆவர். மேலும் தமிழினில் நிகண்டு என்னும் புதிய துறையினைச் சைனர்களே தொடங்கி வாழ்வும் தந்தனர். சேந்தன் எனும் சிற்றரசன் வேண்டுகோட்கிணங்கத் திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டு, பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டு, வீரை மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு முதலான நிகண்டு நூல்கள் அந்நாளில் இக்காலத்துப் பேரகராதிகளின் தொண்டினைச் செய்து கல்விப் பயிர் வளர உரமூட்டின.
இவ்வாறு காப்பியம், சிறுகாப்பியம், சமய நூல்கள், நீதி நூல்கள், தனி நூல்கள், இலக்கணம், நிகண்டு முதலான பல்வேறு துறைகளிலும் பாங்குற நிலைத்த தொண்டாற்றியவர்கள் சைனர்கள் என்பது இக் கட்டுரையான் இனிது விளங்கும்.
தேவார காலத்தில் சமணர் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெளிவு. தேவாரப் பதிகங்களில் சமணர் ஒழுக்கம், செயல், நிலை குறித்த பல செய்திகளைக் காணலாம். அக்கால ஆட்சியாளரிடை இவர்கள் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கு பின்னாளில் சிதைந்தது. இதற்குத் தோற்றுவாய் செய்தவர் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தருமாவர். திருநாவுக்கரசர் மகேந்திரவர்ம பல்லவனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குத் திரும்பக் கொணர்ந்தார். அவன் சமணப் பாழிகளையும் கோட்டங்களையும் இடித்து அவ்விடங்களில் திருக்கோயில்களை எடுப்பித்தான். மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் வேண்டுகோட்படி பாண்டிய நாடு சென்று திருஞான சம்பந்தர் சமண முனிவர்களுடன் அனல்வாதம், புனல் வாதம் நிகழ்த்தி வெற்றிபெற்றுச் சமணர் பலரைக் கழுவேற்றினர் என்ப. கூன்பாண்டியன் எனப்படும் நின்றசீர் நெடுமாறனும் அமண் சமயத் தொடக்கொழிந்து, சைவ சமயத்திற்குத் திரும்பினான் என வரலாறு கூறும். இவற்றாலெல்லாம் இடைக்காலத்தில் சைனர்களின் அரசியல் செல்வாக்கு பாதிக்கப்பட்டாலும், அவர்களின் மொழித் தொண்டும், சமுதாயத்தொண்டும் தடைபடாது நிகழ்ந்து வந்தன. எனவேதான், தேவார காலத்திற்குப் பின்னர்ச் சைனர்களால் எழுதப்பட்ட பல்துறை நூல்களையும் காண்கிறோம். மேலும் அவர்கள் சோழ பாண்டியப் பெரு வேந்தர்கள் காலத்திலும் மக்கட்குச் சமூகப் பணி ஆற்றிய திறம் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது.
இதுகாறும் கூறியவற்றால் சைன சமயப் பெரியோர்களால் தமிழ் இலக்கிய இலக்கண நிகண்டுத் துறைகள் வளர்ந்து செழித்தன என்பதும், சைன சமயத்தின் சிறந்த கோட்பாடுகள் தமிழரால் போற்றி ஏற்றுக்கொள்ளப் பட்டன என்பதும், மக்கள் தொண்டினை மன நிறைவோடு சைன சமயத்துறவிகள் ஆற்றி வந்தனர் என்பதும், தமிழ் உள்ளவரையில் அமண் சமயத்தார் அம்மொழிக்கு ஆற்றிய தொண்டு நின்று நிலவும் என்பதும் ஒருவாறு உரைக்கப் பட்டன எனலாம்.
------------
வரலாற்றுத் தொன்மையும் பெருமையும் வாய்ந்தது தமிழினம். தொன்னெடுங் காலத்திற்கு முன்னரே தமிழில் இயற்றப்பட்ட இலக்கியங்கள் பலவாகும். அவ்விலக்கியங்கள் தமிழர் தம் வாழ்வை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. இலக்கியம் காட்டும் பழந்தமிழர் வாழ்வியல் உண்மைகளை வைத்து நாம் காணும் பொழுது அவர்தம் பரந்த விரிந்த உலகக் கண்ணோட்டம் நமக்குத் தெற்றெனத் தெளிவாகின்றது. உலகவாம் நன்னோக்கம் பழந் தமிழரை வழிநடத்திச் சென்றுள்ளது என்பதனை நாம் பழம் பேரிலக்கியங்கள் கொண்டு அறியலாம்.
அமெரிக்க எழுத்தாளர் 'வெண்டல் வில்கி' என்பவர் 'ஒரே உலகம்' (One World) என்றதோர் நூலினை எழுதினார். அந்நூலில், 'எதிர்காலத்தில் நம் சிந்தனைகள் உலகை அளாவியதாக இருக்கவேண்டும்' (In future our thinking must be worldwide) என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்து உயர்வான தொன்று என்று கொண்டு அமெரிக்கர்கள் அவ்வாசிரியரைப் பெருமிதத்துடன் பாராட்டுகின்றனர். ஆனால் அவர்கள், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே பழந்தமிழ்ப் புலவர் ஒருவர்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று, உலக மக்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக எண்ணிப் பாடிய உண்மை-யினை அறிய வருவரேயாயின் எத்துணை மதிப்பினையும் சிறப்பினையும் தமிழர்பால் கொண்டு பாராட்டுவர் என்பதனை உன்னுதல் வேண்டும். கணியன் பூங்குன்றனார் புறநானூற்றுப் பாடல் ஒன்றிற் குறிப்பிட்டுள்ள இவ்வுலகந் தழுவும் உயர்நோக்கு, தமிழர் தம் தனிநோக்காக இருந்தது என்பது புலனாகக் காணலாம்.
கண்ணனிடம் பேரன்பு கொண்ட பாரதியார் காணுமிடம் எல்லாம், பார்க்கும் பொருளெல்லாம் கண்ணனாகவே கண்டார். 'உண்ணுஞ் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எங்கும் எம் கண்ணன்' என்று ஆழ்வார்கள் கண்டது போலவே, பாரதியாரும் காககைச் சிறகின் கரிய நிறத்தினிலும், பார்க்கும் மரங்களின் பச்சை நிறத்தினிலும், தீக்குள் விரலை வைத்தால் கிடைக்கும் தீண்டும் இன்பத்தினிலும் கண்ணனையே கண்டார். அதே பாரதியார்,
திருமுருகாற்றுப்படை,
திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர் போன்றே சிலப்பதிகாரம் தந்த இளங்கோ-வடிகளும், உலகைக் காத்து நிற்கும் திங்களையும், ஞாயிற்றையும், மழையையும் போற்றித் தம் காப்பியத்தினைக் கவினுறத் தொடங்குகின்றார்.
இவ்வாறு காலந்தோறும் தமிழகத்தில் தோன்றிய சான்றோர் பெருமக்கள் பரந்துபட்ட உலக நோக்கிலே நின்று, சில வாழ்வியல் உண்மைகளை வலியுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பன்னெடுங்காலத்திற்கு முன்னரே உலகுயிர் அனைத்தையும் ஓரினமாகக் கண்டு, வாழ்வாங்கு வாழ்ந்த இனம் தமிழினமாகும். இன்றும் தமிழர் தாம் வாழும் அயலிடங்களையெல்லாம் தம் அன்பாலும் அறிவாலும், தொண்டாலும் முயற்சியாலும், பண்பாலும் பயனாலும் உயர்வித்து வருதல் கண்கூடு. எனவே நாமக்கல் கவிஞர் திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின்,
-------------
தொன்மை
அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழி, 'முத்தமிழ்' என முறையுடன் வழங்கப்பெறும். இயல், இசை, கூத்து எனப் பகுக்கப் பெறும் முத்தமிழில் நடுவானது இசைத் தமிழாகும். தமிழின் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், இசைத்தமிழ் நூல்கள் அது போது தமிழகத்தில் வழங்கின என்ற குறிப்புப் பெறப்படுகின்றது.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலின் ஒவ்வொரு பாடலின் அடியிலும் அப் பாடலைப் பாடிய புலவரின் பெயரும், அப் பாடலுக்கு இசை அமைத்தவர் பெயரும், பண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறமகள் ஒருத்தி, குறிஞ்சி நிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாட, அது போது தினைக்கதிரை உண்ண வந்த யானை, தினையினை உண்ணாமலும், அவ்விடத்தை விட்டு நீங்காமலும், பாடும் குறிஞ்சிப் பண்ணால் கவரப் பட்டு மனமுருகி நின்று, பின்னர் உறங்கியும் விட்ட செய்தி, பின்வரும் அகநானூற்றுப் பாடலால் அறியப் படுகின்றது:
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண் (திருக்குறள் : 573)
என்னும் திருக்குறளில், பண் பாடலோடு பொருந்தி வரவேண்டும் என்றும், கண் இரக்கங்காட்டும் குறிப்பை அருள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம்.
வளர்ச்சி
சிலப்பதிகாரம். முத்தமிழ்க் காப்பியம் என்றே வழங்கப்படும். கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை முதலிய காதை களில் இனிய இசைப்பாடல்கள் இலங்கக் காணலாம்.
'பண்களாவன, பாலையாழ் முதலிய நூற்று மூன்று' என்பர், திருக்குறளின் உரையாசிரியர், பரிமேலழகர் - தேவாரத்தில் அமைந்துள்ள பண்கள், இருபத்து மூன்று என்பர். மேலும் தேவாரத் திருப்பாடல்களில் இடக்கை, உடுக்கை, கத்திரிக்கை, கல்லவடம், கல்லலகு, கிணை, குடமுழா, கொக்கரை, கொடுகொட்டி, சல்லரி, தக்கை, தகுணிச்சம், தண்ணுமை, பறை, பிடவம், முழவு, மொந்தை, முரவம் முதலான தோற்கருவிகளும், வேய்ங் குழல் முதலிய துளைக் கருவிகளும், யாழ், வீணை முதலான நரம்புக் கருவிகளும், தாளம் முதலிய கஞ்சக் கருவிகளும் இடம் பெற்றுள்ளன.
திருவாசகத்தில் அமைந்துள்ள திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல் முதலிய பாடல்கள் இசையோடு சார்த்திப் பாடப்பெற்றுவரும் பாடல்களாகும். மேலும்,
பிற்காலச் சோழர்கள் காலத்தில், திருப்பதிகங்கள். பண்முறையோடு பரம்பரையாக ஓதுவாமூர்த்திகளால் பயிலப் பெற்றுப் பாடப் பெற்று வந்தன என்ற செய்தி யினைக் க ல் வெட்டுக்கள் கொண்டு அறியலாம் . 'முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்,' என்று அருணகிரிநாதர், முருகப்பெருமான் முத்தமிழ்பாற் கொண்ட காதலைக் குறிப்பிடுவர்.
சீகாழி அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனை, திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி, என்னயினாப் பிள்ளையின் முக்கூடற்பள்ளு (ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்ற கருத்தும் உண்டு) மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சர்வசமயக் கீர்த்தனைகள், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா முதலியன, இசைத்தமிழ் உலகிற்குக் கிடைத்த கொடைப் பனுவல்களாகும்.
தமிழ்நாட்டில் தெலுங்குப் பாடல்கள் நுழைந்து கொண்டு, தமிழர்க்கெனத் தமிழ் இசைப்பாடல்களே கிடையா என்று வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு நிலைமை வளர்ந்துவிட்டது.
தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரும், "வித்துவான்கள் பழைய கீர்த்தனைகளைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளிலே பழம் பாட்டுக்களை மீண்டும் மீண்டும் பாடுதல் நியாயமில்லை . அதனால் நமது சாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்" என்று எச்சரிக்கை விடும் நிலை ஏற்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசனும்,
மறுமலர்ச்சி
மீண்டும் இசைத் தமிழ் இருளிலிருந்து ஒளிக்கு வந்திட, இந்த நூற்றாண்டில் - வரலாற்றில் இடம் பெறத் தக்க தொண்டு செய்து, தமிழிசைக்குப் புத்துயிர் தந்து, ஒரு மறுமலர்ச்சி வாழ்விணை அளித்தவர், காலஞ் சென்ற செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களாவர். அவர்களின் அறிவாற்றலின் விளைவால் 1929 ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் தோன்றிய மீனாட்சி கல்லூரி, 1932 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது, இந்தியப் பெரு நாட்டில், இசைக் கலையினை நான்கு ஆண்டுகள் கற்பித்துப் பட்டம் வழங்குகின்ற முதற் பல்கலைக் கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகமேயாகும். 1936 ஆம் ஆண்டு, அரசர் அவர்களின் முயற்சியால் இசை மாநாடு கூட்டப் பெற்றது. 16-11-1940 ஆம் ஆண்டில் நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில், செட்டி நாட்டரசர் அவர்கள், தமிழிசை வளர்ச்சிக் கென ரூபாய் பதினாயிரம் நன்கொடையாக வழங்கினார் கள். அண்ணாமலை நகரிலேயே 14-8-1941 முதல் 17-8-1941 வரையில் நான்கு நாட்கள், முதல் தமிழ் இசை மாநாடு கூட்டப் பெற்றது. இசை மேதைகள் பலர் அம் மாநாட்டில் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளியில் 4-9-1941ல் பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்கள் தலைமையில் கூட்டப் பெற்ற மாபெரும் கூட்டத்தில், அப்போது குமார ராஜாவாக விளங்கிய டாக்டர் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்கள், தமிழ் இசை இயக்கத்தின் சீரிய நோக்கங்களைச் சிறப்புற எடுத்துரைத்தார்கள். 15-9-1941-ல் இசைக்கலைஞர் பலர் சேர்ந்து, தமிழ் இசை இயக்கத்திற்குத் தம் ஆதரவினைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள். 16-9-1941-இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில், தமிழ் இசை இயக்கத்தினை ஊக்குதலி தன் பொருட்டு ஆதரவுக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ் இசை பாடற் போட்டிகள் நிகழ்த்தப் பெற்றன. பெருங் கொடை வள்ளல், அண்ணாமலை அரசர் அவர்கள் தாம் சீருடனும் சிறப்புடனும் கொண்டாடிய அறுபதாம் ஆண்டுவிழாவில், தமிழ் இசை வளர்ச்சிக்கு இரண்டாவது முறையாக ரூபாய் பதினையாயிரம் வழங்கினார்கள். 1943 ஆம் ஆண்டில், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் தலைமையில், தமிழ் இசை ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப் பெற்றது. பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள், அக்குழுவிற்குச் செயலாளராக இருந்து பணியாற்றினார்கள்.
தேவகோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, குடந்தை, திருப்பத்தூர், திண்டுக்கல், வலம்புரி, ஐயம் பேட்டை, திருநெல்வேலி முதலிய தமிழ் நாட்டு நகரங்களில் இசை மாநாடுகள் நடைபெற்றன. இசைக் சங்கங்கள் தொடங்கப் பெற்றன.
சென்னைத் தமிழ் இசைச்சங்கம் 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில், செட்டி நாட்டரசர் அவர்களால், சென்னையில் நிறுவப்பெற்றது. 23-12-1943 முதல் 4-1-1944 வரை பெரியதொரு தமிழிசை மாநாடு சென்னையில் நடை பெற்றது. 23-1-1944ல் தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் தமிழ் இசைக் கல்லூரி ஒன்றும் தொடங்கப் பெற்றது. மேலும், தமிழ் இசை இயக்கத்திற்குத் தொடக்கப் நாட்களில் ராஜாஜி, டி கே.சி., சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் முதலிய பெருமக்களின் ஆதரவு கிடைத்தது, இசைக் கலைஞர்களில் பேரும் புகழும் பெற்ற மேதைகள் பலர், தமிழ் இசை வளர்ச்சிக்குத் தலை யாய தொண்டாற்றினர். 1950 ஆம் ஆண்டு தொடங்கிப் பண் ஆராய்ச்சிக் கூட்டங்களும் ஆண்டுதோறும் முறையாக நடைபெற்று வருகின்றன. செட்டி நாட்டரசர் ராஜ சர் முத்தைய செட்டியார் அவர்களும், தமிழ் இசைச் சங்கத் தலைவர் திரு. மு. நாராயண சாமிப்பிள்ளை அவர்களும், கெளரவச் செயலாளராக திரு. மு. அ. சிதம்பரம் செட்டியார் ஆகியோரும் தம் அயராத தொண்டால், தமிழ் இசைச் சங்கத்தினை வளர்த்து வருகின்றனர். மதுரையில் தொடங்கப் பெறும் தமிழ் இசைச் சங்கம், ஆலவாய் உறை அண்ணல் சொக்கேசர் அருளால், வளர்பிறையென வளர்ந்து தொண்டாற்றுவதாக.
------------------
உலகில் எண்ணிறந்த உயிர்கள் பிறக்கின்றன; கால வேகத்தில் வளர்கின்றன; வாழ்கின்றன. இறுதியில் இறந்து முடிகின்றன. மனிதர்களில் "தோன்றிற் புகழொடு தோன்றியவர்" உரையும் பாட்டும் உடையோராய் வாழ்ந் தவர், 'மன்னாவுலகத்து மன்னுதல் குறித்துத் தம் புகழ் நிறீஇத்' தாம் மாய்ந்தவர், ஒரு சிலராகவே இருக்கக் கூடும்.
சிலர் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வாழ்கிறார்கள்; பலர் எப்படியும் வாழலாம் என்று வாழ்கிறார்கள். முன்னவர் வாழ்க்கையை முன்னோர் சென்ற நெறியும் உயரிய கொள்கைகளும் வழிநடத்திச் செல்கின்றன; பின்னவர் வாழ்க்கை, குறிக்கோளிலாத வாழ்க்கையாய் அமைகிறது. குறிக்கோளும் கொள்கைகளும் இல்லாமல் வாழ்வு நடாத்திச் செல்வது, கடிவாளம் இல்லாத குதிரைமேல் 'சவாரி' செய்வதை ஒக்கும், நல்ல கொள்கைகள், சான்றோர் உணர்த்திவிட்டுச் சென்றநெறி நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும். இன்றேல் ஓட்டைப் படகில் பயணம் செய்து நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தவன் கதையாய்ப் போய் முடியும்.
உலகில் தோன்றும் உயிர்கள் இன்ப நாட்டம் உடையன. இன்பம் தான் அமர்ந்து மேவுகின்ற தன்மை வாய்ந்தது. மண், பெண், பொன் ஆகிய மூன்று ஆசைகளும் மனித மனத்தை அலைத்து அரித்துக் குலைப்பனவாகும். மனமெனும் குரங்கு இம் மூவாசைகளைப் பற்றினால் அதனால் விளையும் துன்பங்கள் கோடி கோடியாகும்.
ஆசைகள், பற்றுகள் பல வகையென நாம் முன்பே கண்டோம். 'ஆசையே அனைத்துலகத் துன்பங்களுக்கும் காரணம்' என்பர். எனவேதான்,
எங்கெழிலென் ஞாயிறு எமக்கு?
ஒரு மனிதனை மதயானையொன்று துரத்தி வருகின்றது. அதன் தாக்குதலிலிருந்து தப்ப மனிதன் ஓடோடிச் செல்கிறான். இறுதியில் வ ழியில் பாழுங்கிணறு ஒன்றனைப் பார்க்கிறான். படிக்கட்டுகள் வழியே இறங்கிக் கொள்ள நினைக்கிறான். ஆனால் கிணற்றடியில் பட மெடுத்தாடும் பாம்பு சீறி நிற்கிறது. எனவே அதன் சீற்றத்திலிருந்து தப்பக் கிணற்றிற்குள் வெளியிலிருந்து வந்து உள்ளே தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகளைப்பற்றிக் கொண்டு தொங்குகிறான். அப்போது அவ்வழியே வந்த எலியொன்று அக்கொடிகளைத் தன் பற்களால் கடித்து அறுக்கின்றது. அந்நிலையில் கிணற்றங்கரையில் வளர்ந்திருந்த மரத்தில் தேனீக்களால் கட்டப்பட்டிருந்த தேன் கூடு அழிந்து அங்கிருந்து தேன் துளிகள் கீழே ஒழுகிக் கொண்டிருக்கின்றன. சூழ்நிலைகளை முற்றிலும் மறந்து விட்ட மனிதன் தன் நாக்கைத் தான் இருந்த இடத்திலிருந்தே நீட்டிச் சுவைக்க நினைக்கின்றான். இதுவே மனிதர் துய்க்கும் இன்பம் என்று கூறுகின்றது அச் செய்யுள். செய்யுளைக் காண்போம் :
மனிதன் ஒருவன் நிறையச் செல்வம் திரட்டினான். அதனைத் துய்க்காமலும், பிறர்க்குத் தந்து அறந்தேடா மலும், செல்வத்தைப் பொன்னாக்கி, அப் பொன்னை உருண்டை-யாக்கித் தன் மனைவியிடம் கொடுத்துப் பாதுகாப்பாக வைத்திருந்தான். தான் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் பொழுது பொன் கொண்டு அறம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தான். ஆனால் திடீரென்று அவன் நா அடைத்துப் பேசமுடியாத நிலைக்கு ஆளாகி, யாக்கையின் உயிர் அகத்ததோ புறத்ததோ என்னும் நிலை வந்துற்றது. உறவினர்களெல்லாம் அவன் படுக்கையைச் சுற்றிக் கூடிவிட்டனர். அப்போது அச் செல்வன் தன் மனைவியைப் பார்த்துக் கைச்சாடையால் பொன்-முடிச்சைக் குறிப்பிட்டுக் கொண்டு வருமாறு பணித்தான். ஆனால் அவன் மனைவி அவன் செயலுக்குத் துணை நிற்கவில்லை. எனவே, அவன் எண்ணம் என்ன வென்பதனைப் பிறருக்குத் தெரியாமல் மறைப்பதற்காகப் பின் வருமாறு பேசத் தொடங்கினாள்: “ஐயோ! என் கணவர் இறுதி நேரத்தில் விளாம்பழத்தின் மீது ஆசைப்பட்டு விட்டாரே! விளாம்பழம் கிடைக்கும் பருவம் (Season) இஃதன்றே! இப்பொழுது என்ன செய்வேன்?" என்று கதறியழத் தொடங்கினாள் . கணவன்மேல் மிகுந்த அன்புகொண்டவள் போல் நடிக்கத் தொடங்கினாள். உறவினர்க்கெல்லாம் அக்குடும்பத் தலைவன் நினைத் திருந்த திட்டம் என்ன வென்பது தெரிய இயலாமற் போய் விட்டது. மனைவியின் வஞ்சக நாடகம் - பொன்னாசை காரணமாக ஏற்பட்டுவிட்ட மாயப்பேச்சு அறத்தை எங்கோ அடித்துத் துரத்திவிட்டது. எனவே பொன்னாசை, கணவன் விருப்பத்திற்கு எதிராக மனைவியை மாற்றி விட்டதைக் காண்கிறோம். திருத்தக்க தேவரின் தீந்தமிழ்ப் பாடலைக் காண்போம்:
இவ்வாறு உய்யும் உயர்நெறி அறிந்துணர்ந்து தெளிந்த பெரியவர் திருவாசகம் தந்த மணிவாசகப் பெருந்தகையாவர். 'கல்லைப் பிசைந்து கனியாக்கும் விச்சை' யறிந்தவர். காசிவரை சென்று சைவ சமயம் பரப்பிய குருரகுருபரரும், கற்பனைக் களஞ்சியமாம் சிவப்பிரகாசரும், தாயுமான தயாபரரும், வடலூர் வள்ளற் பெருமானும், திருவாசகத்தில் தோய்த்த நெஞ்ச முடையவர்கள் என்பது அவர்கள் பாடியுள்ள பாடல்கள் பலவற்றால் அறியலாகும். கிறித்துவ சமயத்தினையே பரப்பத் தமிழ் நாடு போந்த டாக்டர் ஜி. யு. போப் என்னும் பாதிரியார், திருவாசகத்தில் நெஞ்சந் தோய்ந்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். திருவாசகத்தை ' என்புருக்கும் பாட்டு' (Bone-melting song) என்று குறிப்பிட்டார். திருவாசகத்தில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் அகவலில் வரும் 'இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்ற தொடருக்கு இணையான கருத்தை, இறைவனைக் குறித்து வெளிப் படுத்தும் மொழி உலகில் எங்கும் காணமுடியாது என்பர். மொழித்திறம் முட்டறுத்த மொழி நூற்புலவர்களும், ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசையின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும் குறிப்பிட்டு, தமிழ் பக்தியின் மொழி (Language of Devotion) என்று குறிப்பிடுவர். அளவிலும் சுவையிலும் தமிழில் எழுந்த பக்திப் பாடல்கள் போல் வேறு எம் மொழியிலும் காண முடியாது என்பர்.
மலங்கெடுத்து மனமுருக்கும் திருவாசகம் தோத்திர நூல்களில் தலைசிறந்ததாகும். 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்பது பழமொழி. திருவாசகத்திலும் அதன் ஒரு பகுதியாய் அமைந்துள்ள திருவெம்பாவை பக்தியுலகில் சீரியதோர் இடத்தினைப் பெறுகின்றது. திருப்பெருந்துறைப் புராணம்,
அறிவு, அழகு, செல்வம், பண்பு, வயது, குடிப்பிறப்பு முதலிய பத்துவகை ஒப்புகளால் ஒத்த தலைவனும் தலைவியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்போது பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணை மணமகன் கையில் ஒப்படைக்கும் பொழுது, 'உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்று கூறிக் கொடுப்பர். கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி ஊழ்கூட்டத் தலைவனும் தலைவியும் ஒன்று சேர்வது பழைய காலத் திருமணமாக இருந்தது, களவின் வழிவந்த கற்பு இதுவாகும். திருமணத்தின் போது திருமண வீட்டிற் புதுமணல் பரப்பப்பட்டு, மாலைகள் தொங்கவிடப்பட்டு, விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்திரத்தைச் சேரும் நல்லோரையில், மங்கல மகளிர் நால்வர் முறையே கை மாற்றி வாங்கி, புதுக்குடத்தில் துலங்கும் நீரை மணையின் மீது அமர்ந்திருக்கும் மணமகளின் தலைமீது சாய்க்க, அக் குடத்திலிருந்து மங்கலப் பொருளாம் நெல்லும் மலரும் மணமகளின் நெறித்த கதுப்பில் வந்து தயங்கி நிற்கின்றன. கற்பினின்று நீங்காமல் நல்ல பல செயல்களுக்குக் கணவனோடு துணை நின்று, இன்று திருமணத்தில் உன்னைப் பெற்ற கணவன் எஞ்ஞான்றும் உவக்கும் வகையில் வகையுற நீ வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நிறைந்த நெஞ்சோடு வாழ்த்துகின்றார்கள். இதுவே பழந்தமிழர் திருமண முறை. நல்லாவூர் கிழார் பாடியுள்ள கீழ்வரும் அகப்பாடலொன்று தரும் செய்தி இது.
"வறுமையுறுதலும் இயல்பென்றறியாது புறங் கூறுவோர் காண்டற்கு நாணித் தலைவாசலையடைத்து மிடியாற் கரிய பெரிய சுற்றத்தோடே கூடவிருந்து அடையத்தின்னும்" என்று 'உச்சிமேற் புலவர் கொள்'நச்சினார்க்கினியர் வரைந்த உரையால் விளங்கும்.
மேலும் ஆண்டுகள் பலவாகியும் நரையிலவாகுதலின் காரணத்தை உசாவிய மக்கட்குப் பிசிராந்தையார் 'மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்' என முதலாவது குணங்களால் பெருமை பொருந்திய மனைவியையே குறிப்பிட்டுள்ள து கொண்டு அறியலாம். தமிழ் மறையும்,
சங்க காலத் தலைவி, தாய் சினந்து சீறிக் குழந்தையினைக் கோல்கொண்டு ஓச்சியடிக்கும் பொழுது, 'அம்மா அம்மா' என்றே கதறியழுவதைப் போன்று தலைவன் இனிய செய்யினும் இன்னாதன செய்யினும் அவனையே அடைக்கலம் என நம்பி வாழும் பெற்றி வாய்ந்தவளாவாள்.
உலகில் தோன்றிய உயிர்கள் இறைவன் அருளால் தோன்றி, அவனருளால் அவன் தாள் வணங்கி வாழ்கின்றன. எனவே மீட்டும் இறைவனிடம், 'உங் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்ற சொல்லை மீண்டும் புதுப்பித்துக் கொள்வது மிகையாகும். எனவே மார்கழித் திங்களில் வைகறையில் எழுந்து நீராடிச் சிவனைச் சிந்தை யிற்கொண்டு பாடிப் பரவும் பெண்கள் பழஞ்சொற் புதுக்க அஞ்சுகின்றனர். ஆயினும் சிவபெருமானிடத்துப் பின்வருமாறு கூறிக்கொள்கின்றனர்.
' எங்கள் மார்பகங்கள் அடியாராய் அல்லாத பிறரின் தோள்களைச் சேரா; எங்கள் கைகள் உனக்கல்லாத பிறர்க்கு எப்பணியினையும் இயற்றா; எங்கள் கண்கள் இரவும் பகலும் வேறொன்றினையும் காணா; இந்தப் பரிசு ஒன்றினை மட்டும் எங்கள் தலைவராகிய நீவிர் எங்கட்கு வழங்கிவிட்டால், கிழக்கே தோன்றும் கதிரவன் எத்திசையில் எழுந்தாலும் எங்கட்கு ஒரு கவலையும் இல்லை'
என்கின்றனர்.
எனவே, நாம் அனைவரும் சிவநெறி மறவாத சிந்தையராய், ஞாலம் அவன் புகழே மிக, நம் நெஞ்சத்தை அவன் வாழும் திருக்கோயிலாக்கி, அன்பர் பணிக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டால், இன்பநிலை தானே வந்து எய்தும் என்பது திண்ணம்.
---------------
'கற்பார் இராம பிரானையல்லால் மற்றுங் கற்பரோ!' என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இராமனைப் பற்றிப் பேசுவதும் கேட்பதும் எழுதுவதும் புனிதத் தன்மை வாய்ந்த செயலாகும். தன்னை வெட்டுகின்ற கோடரிக்கும் மணத்தைக் கொடுக்கும் இயல்பு வாய்ந்தது சந்தன மரம் என் று சொல்வார்கள். அதனைப்போல இராமனைப் பற்றிப் பேசுகின்ற எவரும் பெருமை பெறுவர். எனவே தான் யானும் துணிந்து காகுத்தன் கான்முளை குறித்துத் தங்கள் முன்னர்ப் பேசத் துணிந்தேன்.
'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்று போற்றப்படும் கவிச்சக்கர-வர்த்தி கம்பன் வழி. நின்று, கிட்கிந்தா ராமனின் சிறப்புக்களை நோக்குவோம். அறிவியலில், அதுவும் சிறப்பாக இயற்பியல் விரவிய வேதியியலில் (Physical Chemistry) வாயுக்களின் சம எடைரை (Equivalant weight) ஆக்ஸிஜன் அடிப்படையில் கணித்துத்தான் கூறுவர். எனவே நாமும் தமிழகத்தில் இராமனைப் பற்றிப் பல்வேறு இலக்கியங்களிலும், நூல்களிலும், செவிவழிச் செய்திகளிலும் குறிப்புக்கள் இருந்தாலும் துல்லியமான அளவுகருவியாகிய கம்பனின் இராமாவதாரத்தைக் கொண்டே மதிப்பிடுவோம்.
கம்பனுடைய தனித்தன்மை அவனுடைய பாத்திரப் படைப்பிலும், கட்டுக் கோப்புத் திறனிலும்தான் மிகுதியாக விளங்குகிறது என்று கூறலாம். பாலகாண்டத்தில் தாடகை வதைப்படலம்; ஆரணிய காண்டத்தில் விராதன் வதைப்படலம், மாரீசன் வதைப்படலம்; கிட்கிந்தா காண்டத்தில் வாலிவதைப் படலம் ; யுத்த காண்டத்தில் கும்ப கருணன் வதைப்படலம், இராவணன் வதைப் படலம் என்று அமைத்து, ஒவ்வொன்றிலும் வளர்ச்சி நிலை காட்டுகின்றார் கம்பர். பால காண்டத்தில் தாடகையின் இருப்பிடம், தோற்றம், வருகை, செயல் ஆகியவற்றைக் கண்ட பின்னும் இராமன் அஞ்சியதாகத் தெரியவில்லை. அவளைக் கொல்வதற்குச் சற்றுத் தயங்கினான். ஆசிரியர் விசுவாமித்திரர், பொது நலம் கருதித் திருமாலும் இந்திரனும் பெண்ணை அழித்ததனால் சிறுமையுறாமல் மேலும் சிறப்புப் பெற்றனர் என்பதை எடுத்துக் கூறிய பின்னர், இராமனும், அவளை அம்பொன்றினால் எய்து ஆட் கொண்டான் என்று பாடினார் கம்பர். அம்பு எய்யப்பட்ட அளவில் தாடகை வீழ்ந்தாள் என்றும்,
ஆரணிய காண்டத்தில் விராதன், இராமனின் அம்பிற் கிரையாகி நற்கதி பெற்று வழிபாடே இயற்றுகின்றான். மாரீசன், பால காண்டத்தில் ஒருமுறை இராகவனின் அம்பு பட்டு மனத்தூய்மை பெற்றுச் சூழலால் இராவணனிடத்துத் தங்கிப் பின்னர் 'அறம் பிறழ்ந்தவன் கையால் மாள்வதை விட அறத்திற்கே நாயகனான இராமன் எய்யும் கணைபட்டு உய்தி பெறுவது மேல்' என்று கருதி மாயமான் உருக்கொண்டு, சக்கரவர்த்தித் திருமகனை நெடுந்தொலைவு கொண்டு சென்று இறுதியில் அண்ண லிட்ட அம்புபட்டுப் புனிதம் அடைந்து உயிர் துறக்கின்றான்.
கிட்கிந்தா காண்டத்தில் வாலியை இராமன் வதை செய்கின்றான். வாலி வதையில் தான் கம்பரின் கட்டுக் கோப்புத் திறன் முழுமையாக வெளிப்படுவதைக் காண்கின்றோம். வாலி அரக்கனல்லன்; அவனோர் வானரம். ஆழ்ந்து நோக்கின் இரகவணனின் படைப்புக்கு இணையான ஓர் படைப்பாகும். இராவணனும் வாலியும் சிறந்த சிவ பக்தர்கள். இருவரும் வரம்பிலா வரத்தினர். பிறன் மனை நோக்கியமை-யால்தான் இருவருக்கும் இறுதி கிட்டியது. ஆற்றலில் இராவணனையே விஞ்சியவன் வாலி என்பதற்கும் போதிய குறிப்புகள் உள்ளன. இவ்வாறு பொதுத் தன்மைகள் பல காட்டி நுட்பமான வேறுபாடமைத்துப் பாத்திரப் படைப்பை உயர்த்துவதில் கம்பனுக்கு இணை கம்பனே. வாலி, இராமனுடைய அம்பு பட்ட அளவில் சினக்கின்றானேயன்றி இறுதியில், 'தீயன பொறுத்தி' என வேண்டி வரங்கள் இரண்டைப் பெற்றுப் பரமபதம் அடைகின்றான். இராவணன் மட்டுமே இராமனை வணங்கியதாகக் கம்பர் உரைத்தாரில்லை. அவன் எதிர் நிலைத் தலைவனாதலால் அவ்வாறு செய்யவில்லை. இராமனுடைய வீரத்தினையும் ஆற்றலையும் வியக்கின்றான்; ஆனால் அம்பு பட்ட அளவில் இராமனைத் துதிக்கவோ, வாழ்த்தவோ இல்லை என்பது குறிக்சத் தக்கது. தாடகை தொடங்கி இராவணன் இறுதியாக அனைவரும் இராமனுடைய அம்பிற்கு இலக்கானவர்களே. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்திற்காக வதைக்க வேண்டிய கட்டாயம் இராமனுக்கு வந்துற்றது. எந்த வகையிலும் இராமனுடைய புகழ் குன்றவில்லை. என்பதே கம்பர் தம் கருத்து.
கம்பனுடைய காவியம் உயர் நிலை பெற்றுத் திகழ்வதற்கு அடிப்படைக் காரணமே கிட்கிந்தா காண்டம் என்று கூறினால் மிகையாகாது. வாலிவதை பற்றி அறிஞர்கள் பலர் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளனர். அது பற்றிப் பேசுவதே ஒரு தனித்தகுதி எனக் கருதுகின்ற பெருமக்கள் மிகுதி. கம்பனின் பாலராமன், அயாத்தியா ராமன், ஆரண்ய ராமன், சுந்தர ராமன், செயராமன் ஆகியோர் ஐயப்பாட்டிற் கிடமின்றிப் பாராட்டப்படும் போது, கிட்கிந்தா ராமன் மட்டுமே பிரச்சினைக்குரியவன் போல் தோன்றுகின்றான். எனவே இக்காண்டத்தினைப் பிரச்சினைக்குரிய காண்டம் (Problem Canto) என்று கூறலாம்.
ஆட்சிப் பொறுப்பினையும் மனைவியையும் விதியின் வலிமையால் பிரிந்த நிலையில் இருந்த இராமன் சுக்கிரீவனுக்கு வாலியினிடமிருந்து இரண்டையும் மீட்டுத் தருவதாக உறுதியளிக்கின்றான். இராமனிடத்தில் ஒத்த வுணர்வும், ஒட்ட வுணர்வும் (Sympathy and Empathy) ஒருங்கே அமைந்திருந்ததால்தான் உடனே உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. 'பிறிதின் நோய் தன்னோய் போல்' போற்றும் தகைமை கிட்கிந்தா ராமனிடம் காணப் படுவது கண்கூடு. எவரையும் பார்த்த அளவில் அவர் தம் பண்பாட்டைக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன் இராமன் என்பது இந்தக் காண்டத்தில்-தான் தெளிவுறுகின்றது எனலாம். பரதனைச் சேணுயர் தருமத்தின் தெய்வம் என்று கூறினானேயெனில் தம்பியைப் பற்றி அறிவதற்குத் தனித்த ஆற்றல் வேண்டுமோ? அனுமனைக் கண்ட அளவிலேயே,
இராமனைக் குறை கூறுவதாகப் பேசும் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவர்கள் மந்தரை, பரசுராமன், வாலி, இராவணன் ஆகியோராவர்.
பரசுராமன் 'ஊனவில் இறுத்த மொய்ம்பு' என்று மட்டும் குறிக்கின்றான் நேரிடையாக. மந்தரை, 'ஆடவர் நகையும், ஆண்மை மாசுற, தாடகையெனும் அத்தைய லாள்பட' என்று கைகேயியிடம் இராமனைக் குறைத்துப் பேசுகின்றாள். இராவணன் அனுமனிடமும் அங்கதனிடமும் கும்பகருணனிடம் குறைத்துப் பேசுகின்றான். ஆயின் வாலி ஒருவன் தான் இராமனை நேருக்கு நேராக மனம் போன வழிக் குறைத்துப் பேசுகின்றான்.
வாலியை மறைந்திருந்து கொல்லலாமா? காலங்காலமாகக் கேட்கப்பட்டுவருங் கேள்வி! பலரும் கேள்விக்குக் கொடுக்கின்ற சிறப்பிடத்தை விடையிறுப்பதற்குக் கொடுப் பதில்லை " என்ன இருந்தாலும் அது தப்புத்தானே?" என்று கூறுபவர்களின் எண்ணிக்கைதான் இன்றளவும் மிகுதி! தீர்க்கமுடியாத, கூடாத ஒரு சிக்கலாகவே இஃது இருக்க வேண்டும் என்பதுதான் பலருடைய விருப்பம் போலும்! ஒரு செஷன்ஸ் நீதிபதியென்று நம்மைக் கருதிக் கொண்டு ஆராய்ந்தால் ஓரளவு உண்மை புலப்படும். வாலியை இராமன் கொன்றதை யாரும் மறுக்கவில்லை. எனவே கொல்லப்பட வேண்டியவன் அவன் என்பது உறுதியாகிறது. கொல்லும் உரிமை இராமனுக்கு இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர். அந்தவகையில் இன்றைய காவல் துறை உயர் அதிகாரிபோல் இராமன் விளங்குகிறான். இராமனைப் பொறுத்த அளவில் வாலியைக் கொல்வதற்குச் சொந்த காரணமோ பல நாள் பகையோ கிடையாது (no personal enmity). எனவே உள் நோக்கமோ நீண்ட நாள் திட்டமோ கிடையாது (no personal motive nor any plan). மேலும் வாலி சட்டத்தையும் சமுதாயத்தையும் மதித்து நடப்பவனும் அல்லது (He is not a law abiding being). பயிராக இருக்க வேண்டியவன் களையாக மாறியிருக்கின்றான். மேலும் தனக்குக் கிடைத்த வரங்களையெல்லாம் பொது நலத்திற்குப் பயன் படுத்தாமல் தன்னலத்திற்காகவே பயன்படுத்தினான் (misuse of power and Penance for personal gains). சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவனே அவற்றைத் தகர்த்தெறிந்தான். பிறன்மனை நோக்குதல் என்ற பெருங் குற்றத்தைப் புரிந்தான். சுக்குரீவனுடைய நிலப்பரப்பைப் பிடுங்கிக் கொண்ட தோடமையாமல் அவனை உயிர் வாழக் கூட அனுமதிக்காமல் துரத்தித் துரத்தியடித்தான். எனவே கிட்கிந்தையில் பொதுவாக எவருடைய உயிர்க்கும் உடை மைக்கும் பாதுகாப்பில்லாத சூழ் நிலை உருவாகியது (There is no security for life at Kishkindai). இந்தக் குற்றங்களிலிருந்து வாலி விடுபட முடியாது.
செருக்கினர் வலியராகி நெறி நின்றார் சிதைவராயின்"
உலகம் தழைக்குமாறெங்ஙனம். இது நாட்டிற்கும் வீட்டிற்கும் என்றென்றும் தவறல்லவா? வாலியைக் காட்டிலும் வலிமை படைத்தவர்கள் அவனைக் கொல்ல முடியும். அஃது இராமனைத் தவிர வேறு எவரும் இருக்க வியலாது.
ஆற்றலில் இராமன் வாலியைவிடப் பன்மடங்குயர்ந்தவன். அவதாரச் சிறப்புடைய பரசுராமனின் வலிமையையே அடக்கியவன். எவரும் தொடக்கூட அஞ்சிய வில்லினை ஒடித்தவன். கூற்றன்ன கைகேயியையே தாயாகக் கருதித் தன் பெருமையை உணர்த்தியவன். தோல்வி யென்ற சொல்லையே, அறியாதவன். எனவே அவன் தன் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடவியலாது. இராவணனை வாலியால் வெல்ல முடிந்தது; ஆனால் கொல்லமுடிய வில்லை. அந்த ஆற்றல் இராமனிடமே இருந்தது. எனவே வாலியை விட இராமன் உயர்ந்த ஆற்றல் படைத்தவன் என்பது வெளிப்படை!
மற்றுமோர் உண்மையை மறந்து விடலாகாது. மரா மரங்கள் ஏழினையும் ஒரே அம்பால் துளைக்கக் கூடிய ஒருவன் தான் வாலியைக் கொல்லும் தகுதி பெற்றவனா வான்! அந்த வகையில் இராமன் ஒருவனே அதனைக் கொண்டவன் என்பது யாவரும் அறிந்த செய்தி.
நேருக்கு நேராகப் போரிடுவதற்குரிய உத்தியைக் கையாள முடியாத அளவிற்கு வரங்களைப் பெற்றவன் வாலி. எதிரே போரிடுபவர்களின் வலிமையில் பாதியைப் பெற்றுக் கொள்ளும் வரத்தைப் பெற்றவன். அத்துடன் தன் வலிமையையும் சேர்த்து எவரையும் எளிதில் வெல்லக் கூடிய இயல்பினனாகவே விளங்கி இருக்கின்றான். அந்த வரத்தைக் கொண்டு தீயவர்களை அழித்திருந்தால் நன்மை பெற்றிருப்பான்; ஆனால் நல்லவர்களை அழிக்க முற்பட்ட போது தான் அவன் அழிவை அவனே தேடிக் கொண்டான். போரிடுவோரின் வலிமையில் பாதி தனக்கு வந்துவிடும் என்பதை அவன் தன் மனைவி தாரையிடம் உரையாடும் போது கூறியதாகக் கம்பர், பாடலை அமைந்திருக்கிறார்.
மிக அண்மைக்காலம் வரையில் கொடுமையான குற்றம் புரிந்தவர்கள் சட்டப் பாதுகாப்புக்குட் படாதவர்கள் (outlaws) என்றும், அவர்களை யார் வேண்டும் மானாலும் கொல்லலாம் என்றும், அவ்வாறு கொல்பவர்கள் புனிதமான செயலைச் செய்தவர்கள் என்றும் கருதப் பட்டு வந்தனர். கம்பனுடைய கண்ணோட்டத்தில் கூட வாலி ஒரு 'outlaw' தான். எனவே சட்டப்படி இராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றது சரியே!
சட்டப்படி சரியாக இருந்தாலும் தர்மத்தின் அடிப்படையில் சரியா என்றொரு வினா எழும். சுக்கிரீவன், இராமனிடம் அடைக்கலம் என்று முதலில் புகுந்து தன்னைக் காக்க வேண்டும் என்று முறையிட்டான். இராமன் மராமரங்கள் ஏழினையும் ஒரே அம்பால் துளைத்தபோழ்து கூட வாலி இராமனைக் காண வர வில்லை. அது மட்டுமாலாமல் இராமனுடைய ஆற்றலை உணர்ந்திருந்தும் பொருட்படுத்தவில்லை. வரத்தின் வலிமையையே நம்பியிருந்துவிட்டான். சட்டத்துறையில் (Petition priority) அதாவது மனுக் கொடுப்பதில் முதன்மை என்பார்கள். அவ்வாறு கொடுப்பவர்களுக்கு ஓரளவு சலுகை கட்டாயம் உண்டு. சுக்கிரீவன் நேராக வந்து முறையாக மனுவினைக் கொடுத்துத் தன் கட்சியின் நியாயத்தை எடுத்துரைத்தான். வாலியின் போக்கும், துந்துபி என்ற அரக்கன் கொல்லப்பட்ட முறைமையும், முனிவரின் சீற்றத்தையும் அறிந்து தெளிந்த இராமன் அரச நீதியினைச் செலுத்த முடிவு செய்தான்! பரந்து பட்ட பல்வேறு கோணங்களில் சாட்சியம் (Preponderance of Evidence) இருப்பதை அறிந்து தெளிந்த பின்னரே இராமன் யோசித்து முடிவுக்கு வந்தான்.
தன்னுடைய உள்ளம் தூய்மையாக இருப்பதால் சீதை கன்னியாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றான். அப்பெருந்தகையின் சிந்தனை எப்பொழுதும் சீரிதாகவே இருக்கும் என்பதைக் கம்பர் பால காண்டத்தில் இராமன் கூற்றாகவே ஒரு பாடலை அமைத் இருக்கின்றார்.
தாடகையைக் கொல்லத் தயங்கினான். பரசுராமனைச் கொல்லலாகாதென விடுத்தான். விராதன் பக்தி நிலை கொண்டு திருந்தித் துறக்கம் புகச் செய்தான். வாலியை மறைந்திருந்து கொல்வதால் பழியுண்டாகுமெனத் தெரிந்தால் கொல்வானா? எல்லாவகைப் பயிற்சியும் இளமையிலேயே பெற்ற இராமன் தனக்கு மாசு நேரும் படியானதொரு செயலைச் செய்யத் துணிந்திருப்பானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
இலக்குவன் மறுமொழி கேட்ட வாலியும் மீண்டும் மீண்டும் கேள்விக் கணைகளைத் தொடுப்பதை விடுத்து இராமனை வணங்கினான் என்றே உரைக்கின்றார் கம்பர்:
சுக்கிரீவனுடைய துன்பத்தைத் துடைத்த பின்னர் தான் இராமன் தன் துணை இருக்குமிடத்தைத் தேடும்படி கூறினான் என்றால், அவனுடைய பொது நோக்கும் புலப் படுகின்றதன்றோ ?
மனைவியைப் பிரிந்து வருந் தும் கணவனாக இராமனை நம்மனோர்க்குணர்த்தவே கார்காலப் படலத் தைக் கம்பர் படைத்தார் போலும்!
வாலியைக் கொல்ல இராமனால் இயலுமோ என்று ஐயுற்ற சுக்கிரீவன் கிட்கிந்தையின் அரசனான பின்னர்ப் பரதனைப் போன்று பக்தியுடையவனாகத் திகழ்ந்தான் என்ற பாடலைப் படிக்கும்போழ்து படிப்பவர்களின் உள்ளம் நெகிழ்கிறது. (கிட்கிந்தைப் படலம் 125 எண் பாடல்.) வைணவ சம்பிரதாயப்படி, சுக்கிரீவன் என்றழைக்காமல் 'மகாராஜர்' என்று அழைக்கவேண்டும். "சுக்ரீவாக்ஞை "யினை மீற முடியாது. அத்தகைய பெருந்தகையால் வணங்கப்படும் தகைமையாளன் இராமன் என்பதை யுணர்த்தவே கம்பர் மேற்குறித்த பாடலை அமைத்திருக்கின்றார்.
யுத்த காண்டம், மாயாசீதைப் படலத்தில் அனுமனை மாலியவான்,
ஜடாயு என்ற கழுகரசனின் உடன் பிறந்தவனான சம்பாதியின் சிறகுகள் இராமனின் பெயரை வானவர்கள் உச்சரித்த அளவில் மீண்டும் முளைத்தன என்றால் இராமன் பெயருக்குள்ள ஆற்றல் புலப்படும். இராவணன் சீதையைச் சிறை வைத்த இடத்தைச் சம்பாதிதான் தெளிவு படுத்துகின்றான். பிறருக்குகுதவுவதையே தன் நோக்கமாகக் கொண்ட இராமன் தன்னிடத்துள்ள வரம் பிலாற்றலைத் தன்னலத்திற்காக ஒரு போழ்தும் பயன் படுத்தவில்லை. அதனால்தான் அவன் தொடர்ந்து யாவ ராலும் மதிக்கப்படுகின்றான்.
மனைவியைப் பிரிந்து வருந்தும் நிலையிலுள்ள இராமனின் சிந்தனையைக் கிட்கிந்தையின்பால் திருப்பி முறைமை பிறழ்ந்த வாலியை அழித்து அதன் மூலம் தன் ஆற்றலை மேலும் உறுதிப்படுத்தி வாழ்வில் நம்பிக்கை ஒளி பெற்றுத் தேறியிருக்-கின்றான் இராமன். ஒருவில், ஒரு சொல், ஓரில் என்ற கொள்கையைத் தளரவிடாமல் தொடர்ந்து பெரு மிதம் உள்ளவனாகவே காட்சியளிக்கின்றான். சொன்ன காலத்தில் சுக்கிரீவன் வாராதபோழ்தும் சினந்தானே யன்றிச் சீறிச் சாபமிடவில்லை .
சுக்கிரீவன் அணிகல முடிப்பைக் கொடுத்த போழ்து இராமன் எல்லா மனிதர்களைப் போலவும் மூர்ச்சையுற்று வீழ்ந்தான். அவனைத் தேற்றிய பெருமை சுக்கிரீவனுக்குத் தான் உண்டு. ஏனெனில், அவனும் மனைவியைப் பிரிந் தவனாயிற்றே! கம்பருடைய தனித்தன்மை இங்கும் ஒளிர் வதைக் காணலாம்.
கிட்கிந்தா காண்டத்து இராமன் தொடக்கம் முதல் இறுதிவரை மனிதனாகவே காட்சிதந்து செயற்கருஞ் செயல் புரிந்து, அறம் வெல்லவும் பாவந் தோற்கவும் தன்னால் இயன்றதையெல்லாம் செய்தான். தனித்திருக்கும் போழ்து சீதையின் பிரிவுக்கு வருந்தினானேயன்றிப் பிறரி டம் தன் கதையைக் கூறி ஓலமிடவுமில்லை, தன் துயரையே நினைத்துப் பிறர்க்குதவாமலும் இல்லை என்பது வெள்ளிடை மலை.
------------------
பழந்தமிழர் இயற்கையோடியைந்த இன்ப வாழ்வு வாழ்ந்தவர்கள். இயற்கையின் இனிய சூழலில் அவர்கள் வாழ்வு துலங்கியது. முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிய தொல்காப்பியனார் முதற்பொருள் என்று நிலத் தையும் பொழுதையுமே கொண்டார். வாழ்வின் முதலாக, வாழ்க்கைக்கு முதலாக இருப்பன நிலமும் பொழுதுமே அல்லவா! முதற்பொருளின் பின்னணியில் கருப்பொருள் களின் சூழலில் உரிப்பொருளின் வாழ்வு பொலிவுற்றது.
பழந்தமிழர்கள் நிலங்களுக்குப் பெயரிட்டமையும், பொழுதுகளுக்குப் பெயரிட்டமையும் அவர் தம் கூர்த்த மதி நிலத்தைப் பறைசாற்றும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குன்றத்தில் பூக்கும் மலர் குறிஞ்சியாகும். அத்தகு சிறப்புடைக் குறிஞ்சி பூத்தலின் அந்நிலம் 'குறிஞ்சி'யாயிற்று. கார்காலக் கவினை மிகுதிப்படுத்திக் காட்டில் மலரும் முல்லை மலர், தான் மலரும் நிலத்திற்குப் பெயர் தந்தது. மருத நிலத்தில் மருதப் பூக்கள் மிகுதி யாகப் பூத்தலின் அந்நிலத்திற்கு அப்பெயர் வந்தது. கடலோரப் பகுதிகளில் நெய்தற் பூக்கள் மலர்தலின் அப்பகுதிக்கு நெய்தல் எனப் பெயர் வழங்கிற்று. முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்பான வளத்திற்குறைவுபட்டு மழையின்மை காரணமாக வளங்குறைந்தது, பாலையெனும் நிலமாகத் திரியும். அந்நிலத்திற் பூக்கும் பூ பாலைப்பூ. எனவே அந் நிலம் பாலை எனப்பட்டது. இவ்வாறு நிலத்திற்கு மலர்களால் பெயர் அமைந்திருப்பது தமிழர் தம் இயற்கை பரவும் இனிய பண்பாட்டினை நுவலும்.
அடுத்து, நிலத்தில் வீசும் காற்றுக்கு அவர்கள் வழங்கியுள்ள பெயர்களும் அவர்தம் மதிநுட்பத்தினை மேலும் நுவலக் காணலாம். வடக்கேயிருந்து வீசும் காற்றினை 'வாடை' என்றனர். தெற்கே யிருந்து வரும் காற்று 'தென்றல்' எனப்பட்டது. மேற்குக் காற்று 'கோடை' என்ற பெயரால் வழங்கப்பட்டது. 'கொண்டல்' என்பது கிழக்கேயிருந்து வீசும் காற்றின் பெயராகும். ஆக இவ்வாறு அவர்கள் காற்றுக்குப் பெயர் வழங்கியுள்ள திறம் உன்னி மகிழ்தற்குரியது.
பரிபாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகும். அந் நூல், செல்வேள் மாண்பினையும், திருமால் சிறப்பினையும், மதுரை அழகினையும் கிளத்துகின்றது. ஆசிரியர் நல்லந்துவனார் செவ்வேளைப் பற்றிப் பாடி யுள்ள பரிபாடலில், 'பரங்குன்று இமயக் குன்ற நிகர்க்கும்' எனப் போற்றப்பட்டுள்ளது. இத்தகு பெருமைக்குரிய திருப்பரங்குன்றத்திலிருந்து தென்றல் புறப்பட்டு வரும் சிறப்பினைப் பின்வருமாறு ஆசிரியர் நல்லந்துவனார் குறிப்பிடுகின்றார்.
அகநானூற்றிலே, தென்றல் குறித்து இரண்டு அழகோவியங்கள் காணக் கிடக்கின்றன. காவன் முல்லைப் பூதனார் பாடியுள்ள பாலைத்திணைப் பாடலொன்றில் பாலை வழிச் செல்லும் மன்னர்க்குத் தென்றல் செய்யும் தொண்டு சுட்டப்படுகின்றது.
வலம்சுரிந்த பூங்கொத்துக்கள் மெல்லென மலர்கின்ற அழகிய கொம்புகள், அப் பூக்களை இழந்தனவாக வருந்து மாறு, வல்லவன் ஒருவன் அக்கொம்புகளை அடித்து உதிர்த்துவிட விளங்கும் கொம்பு எவ்வாறு இருக்குமோ அதுபோல, மராமரத்தை, அதன் மலர்கள் முற்றும் உதிரு மாறு தாக்கி வருத்தும் தன்மை வாய்ந்ததும், மணத்தைத் தன்னிடத்தே கொண்டதுமான தென்றற் காற்று, பாலை வழியிலே செல்லும் மள்ளர்களது குழன்ற மயிரிலே அம் மலர்களைச் சொரியா நிற்கும் என்று தென்றற்காற்றின் சீரிய பணி சுட்டப்படுகின்றது.
செங்கழு நீர், சேதாம்பல், முழுவதும் இதழ் விரிந்த குவளை, அரும்பு அற மலர்ந்த தாமரை, வயற்பூக்கள், பிறவான பூக்கள், சிறப்புப் பெருந்திய தாழையின் விரிந்த வெண்ணிறப் பூவிதழ்கள், சண்பகச் சோலையில் மாலை போலப் பூத்துக் கிடக்கும் மலர்கள் ஆகியவற்றின் தாதுக் களையெல்லாம் தேடிச்சென்று, வாரியுண்டு ஒளிபொருந்திய முகங்கொண்ட மாதரின் சுருண்ட கூந்தலிலேயிருந்து வரும் மணத்தையும் பெறுவதற்கு வழி காணாமல் சுழன்று சுழன்று திரியும் வண்டுகளுடன் தென்றலும் வந்து, அழகுடைய சாளரத்தின் வழியே புகுந்து அவ்வீட்டி னுள்ளே நுழைந்தது. கோவலன் கண்ணகியர் இருவரும் தென்றலின் வரவால் பெரு மகிழ்வு எய்தினர்.
ஊர்காண் காதையில் மாலை போலப் பூக்கும் மாதவி யானது கொடிவீசிப் படவும், சோலையும் காடும் நறுமலர்களை ஏந்தவும், தென்னவன் பொதிகை மலையின் தென்றலோடு, அம் மன்னவனின் கூடலிற் புகுந்து, தாம் மகிழும் துணைகளைத் தழுவுவிக்கும் இனிய இளவேனிலான் வேறு எங்கேயுள்ளான்?' என்று மதுரைக் காட்சியை வருணிக்கு முகத்தான் இளவேனிற காலத்து இன்பத் தென்றலைக் குறிப்பிட்டுள்ளார்.
'காணி நிலம் வேண்டும்' என்ற இனிய பாட்டில் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி'தான் விரும்பும் இனிய வாழ்க்கையினை எடுத்து மொழியும் பொழுது 'இளந் தென்றலை' மறவாது குறிப்பிட்டுள்ளமையினைப் பின் வரும் பாடலிற் காணலாம்.
------------------
முன்னுரை
ஆங்கிலத்தில் ஜான் பனியன் அவர்கள் செய்த, 'திருப்பயணியின் முன்னேற்றம்' (Pilgrim's Progress) என்ற நூலின் வழி நூலாகிய இந்நூல், சிறந்த இலக்கியம் எவ்வாறு இலங்குதல் வேண்டும் என்று வழிகாட்டும் நூலாக விளங்குகிறது. எச்சமயத்தார் ஆயினும் விருப்புடன் ஏற்றுக் கற்குமாறு செய்யவல்ல சுவைகள் அனைத்தும் ஒருங்கு கொண்டு, ஒப்பற்ற இலக்கியமாகத் திகழும் இவ் 'இரட்சணிய யாத்திரிக'த்தின் சிறப்புகளைக் காண்போம்.
இலக்கியப் பொருள்
"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே" என்பது நன்னூல். சிறந்த இலக்கியம், கற்பாரை அறமும், பொருளும், இன்பமும், வீடும் அடையுமாறு செய்வித்தல் வேண்டும் இன்பது இதன் பொருளாகும். பாவி ஒருவனின் மோட்ச வீடு நோக்கிய பயணம் பற்றிய பெருங்காப்பியமாகும் இந்நூல். பாவத்தின் காரணமாக என்றும் அழிவுக் குரியதே உலகம் என்பதை உணர்ந்த கிறித்தவன் ஒருவன், நாச உலகத்தினின்றும் தப்பிப் பேரின்ப உலகை அடைய விழைகிறான். நல்லூழால் பேரின்ப நாடு செல்லும் நெறியினை, நற் குருவால் உணர்த்தப்பெற்ற அவன், இடையில் அடையும் சோதனைகள் பலப்பல. நம்பிக்கை இழவு என்னும் உளையைக் கடந்து, இலெளகிகனுடைய சூழ்ச்சியிலிருந்து மீண்டு, சிலுவைக் குன்றில் தன் பாவக் கொடுஞ்சுமையை இறக்கி, திருப்பயணத்தைத் தடை செய்ய வரும் அழிம்பன் என்னும் காலனுடன் போரிட்டு வென்று, மாயாபுரியில் சத்தியத்தை விளக்கியதால் சிறைப்பட்டுப் பின் மீண்டு, விடாத கண்டன், கார் வண்ணன், அறிவீனன், நிலைகேடன். ஆதியர் ஆகியோரின் குறுக்கீடுகளை எல்லாம் வென்று, இறுதியாக, தர்மசேத்திரம் சென்றடைந்து மரண ஆற்றையும் கடந்து முக்தி நகரை அடையும் அவனுடைய திருப்பயணத்தை விவரிக்கிறது இக்காவியம். குருவழி காட்ட, நிதானியும், நம்பிக்கையும் வழித்துணையாய் வர, மோட்சப் பயணத்தில் கிறித்தவன் வெற்றி அடைவதாக இக்காவியம் செய்யப்பட்டிருக்கிறது.
இலக்கியச் சிறப்புகள்
உயர் பொருள் பற்றிய உணர்ச்சி உந்துதலால் எழும் இலக்கியம், கற்பனை வளத்துடன், உருவகம், உவமை போன்ற சிறந்த இலக்கியக் கூறுகளையும் கொண்டு, கற்பாரை மனம் மகிழவும், நெகிழவும் செய்வதாகும். உருவக, உவமை அணிகளும் கற்பனையும் இக்காவியத்துள் சிறப்புற அமைந்திருப்பதை முதற்கண் காண்போம்.
உருவகச் சிறப்பு
இக் காவியத்தை முற்றுருவகப் பெருங்காப்பியம் என்றும், தமிழ் மொழியில் உள்ள முற்றுருவகப் பெருங் காப்பியம் இஃதொன்றே என்றும் கூறுவர். உலகம் 'நாச தேசம்' என்று உருவகிக்கப்பட்டுள்ளது. வன்னெஞ்சன், மென்னெஞ்சன், சகாயன், காமமோகிதன், பிரபஞ்சன் அழிம்பன், நிதானி, தூர்த்தன், நம்பிக்கை விடாத கண்டன், கார்வண்ணன், விமலன், அறிவீனன், நிலை கேடன், அறப்பகை, கண்ணிலி, நன்றிலி, குரோதி, காமி, வீணன், துணிகரன், வம்பன், விரோதி, சழக்கன், நிட்டூரன், இருட்பிரியன், முழுப்பொய்யன், விவேகி, யூகி, பக்தி சிநேகி எனவரும் பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் பண்பு உருவகப் பெயர்களே. நம்பிக்கை இழவு உளையாகவும் மரணம் ஆறாகவும் துன்பமும் அறமும் மலைகளாகவும் தாழ்வு பள்ளத்தாக்காகவும் உருவகிக்கப் பட்டுள்ளன. மாயாபுரி, சோகபுரி, தர்மசேத்திரம் முதலானவும் உருவகங்களே.
மனத்தில் நன்மை, தீமைக் கூறுகளே நல்ல மாந்தராகவும், தீய மாத்தராகவும் இக் காவியத்தில் உருவாகமாகப் படைக்கப்பட்டுள்ளன. கிறித்தவன், அழிம்பனோடு செய்யும் போர், ஓர் உருவகப் போரே. கடுமுகம், கார்முகம்: வசை, அன்பு, ஆசி ஆகியன கிறித்தவன் எய்யும் எதிர் அம்புகளாகவும் கூறப்பட்டுள்ள யாவும், உருவக அணியின் பாற்படும். அழிம்பன் மார்பில் வாளைப் பாய்ச்சி ஆன்மிகன் வெல்வது, தீய மனத்தை நன் மனம் வெற்றி கொள்வதாகும்.
உவமைச் சிறப்பு
இலக்கிய ஆசிரியனின் உணர்த்தும் திறனை அவன் கையாண்டுள்ள உவமைகளாலே எளிதில் அறிந்து கொள்ள முடியும். சிறந்த உவமைகள் எண்ணிறந்த அளவில் இக் காவியத்தை அழகு செய்கின்றன்.
மோட்ச நாட்டிற்குச் செல்லும் வழியறியாது ஆன் மிகன் இருதலைக் கொள்ளி இடையுற்ற எறும்பெனத். திகைத்து, கடுங்காற்றில் சிக்கிய சருகெனச் சுழல்கின்றான்' (பாடல் எண். 6). உன்னத புண்ணிய நகர் வாழ்வை நாடாது, நாசநகரில் வாடுவது உலர்ந்த என்பை நாய் நச்சுவது போலாகும். (பாடல் எண். 10.)
அறிவற்றவர்க்குக் கூறும் அறிவுரையால் பயன் இல்லை என்பதை,
அழிம்பன் ஆன்மிகனுக்குத் தருவதாகக் கூறும் சுகம், நாய் சிங்கத்திற்குத் தரும் அரசாக உவமிக்கப்பட்டுள்ளது (பா.எ. 422). அழிம்பன், விட்ட வசைக் கணைகள், அறவோரிடம் கொடியவர் தீவினை அழிவது போல் அழிந்து பட்டன (பா. எ. 439).
ஆசிரியரின் சிறந்த உவமைத் தொடர்களை எடுத்துக் காட்டுவது, இவ்விலக்கியச் சிறப்பை உள்ளங்கை நெல்லிக் கனியென விளக்குவதாகும்.
கற்பனை, காவியத்தை கற்பவர் கண்முன் நிகழ்ச்சிகளைக் கொண்டு நிறுத்தவல்ல பேராற்றல் வாய்ந்ததாகும்; தன்குறிப்பு தோன்றவும், உயர்வு நவிற்சியாகவும் இலக்கிய ஆசிரியன் படைக்கும் கற்பனை, காவியத்தைக் கற்பவரைப் பெரிதும் மகிழ வைக்கும். அத்தகு கற்பனைகளும் சிறப்புற இரட்சணிய யாத்திரிகத்தில் அமைந்துள.
இயல்பாக மலர்களில் தேன்சொரியும் காட்சியினை, ஆசிரியர், இயேசு பெருமான் பெறவிருக்கும் துன்பத்தை எண்ணி அவை அழுவதாகக் கற்பனை செய்வது கற்கையில் இன்பம் செய்கிறது, அப் பாடல் வருமாறு:
என்பதாகும்.
மாலையில் சூரியன் இயல்பாக மறையும் நிகழ்ச்சி மேல், ஆசிரியர் தம் குறிப்பை ஏற்றிக் கற்பனை செய்கிறார்; இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொடுமை காணப் பொறுக்காமல் கதிரவன் மறைந்தான் எனக் கூறியுள்ளார்.
தமிழ்ச்சுவை நிரம்பிய கிறித்தவ இலக்கியம்
தமிழ் இலக்கியங்களில் கற்றுத் தேர்ந்த சிறப்புடையவரான கிருஷ்ணபிள்ளை அவர்கள் இரட்சணிய யாத்திரிகத்தைத் தமிழ்க் காப்பியமாகவே செய்துள்ளார். குறள்களை எடுத்தாண்டிருப்பதும், கம்பராமாயண, தேவார, மற்றும் கலிங்கத்துப்பரணி இலக்கியங்களை அடியொற்றியிருப்பதும் இரட்சணிய யாத்திரிகத்திற்குச் சிறப்புச் செய்கின்றன.
ஆசிரியர் தாமே கூறியுள்ள உரையொன்றில் கம்ப ராமாயணத்தை அடியொற்றியே இக் காவியத்தைச் செய்திருப்பது தெளிவாகும். கம்பராமாயணத்தின் மூன்றாவது காண்டமாகிய ஆரணிய காண்டத்தின் பெயரையே, தம் காவியத்தின் மூன்றாவது காண்டத்திற்கும் பெயராக இட்டிருக்கிறார்.
இயேசுவின் மறைவு குறித்த மக்களின் புலம்பல் முழுதும், இராமனின் பிரிவு குறித்த மக்களின் புலம்பலே ஆகும். இராவணன், தன் பால் தூது வந்த அங்கதனிடம் அவனுக்கு அரசு தருவதாக ஆசைகாட்ட, அங்கதன்,
இக் காவியத்தில் அழிம்பனிடம் ஆன்மிகன்,
இக்காவியத்துள் இடை இடையே வரும் தேவாரப் பாடல்கள், நாயன்மார்களின் தேவாரப் பாடல்களை அடி யொற்றிச் செய்தனவே ஆகும்.
முடிவுரை
தமிழ் மரபைத் தழுவியதாய், முன்னோர் பொன் கருத்துக்களை ஏற்றதாய், கற்பனை வளத்துடன், உருவக உவமை அணிச் சிறப்புகளோடு மேலாகிய மோட்சம் நோக்கிய ஆன்மிகனின் அரிய பயணம் குறித்த இரட்சணிய யாத்திரிக இலக்கியம் போன்ற சிறந்த இலக்கியம், தமிழ் இலக்கியங்களுள் அத்தி பூப்பதாய்க் காண்பது அரிதாகும்.
--------------
சி. பாலசுப்ரமணியன்
தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபுரமும் திருவண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இடங்கள். பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரிப் பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி ஏ. ஆனர்சு. அங்கு முதல் வகுப்பில் தேறிய முதல்வர் 'குறுந்தொகை' பற்றிய ஆய்வுரைக்கு 1963-ல் எம்.லிட்., பட்டமும் 'சேர நாட்டு செந்தமிழ் இலக்கியங்கள்' பற்றிய ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள். நல்ல நடை கொண்ட இந்த நாகரீக பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிறார். முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாளர்.
முப்பத்தைந்து நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், 'தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றே சான்று'. அண்மையில் வந்துள்ள அணி கலன். சங்க இலக்கியம் சில் பார்வைகள் ஆங்கிலத்தில் ஒரு நூல். 'சங்ககால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி' 'இலக்கிய அணிகள்' என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் ரூபா முதல் பரிசை பெற்றது. படித்து பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்கள் : புலவரேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்சொற்புலவர் (தமிழ்நாடு நல்வழி நிலையம்) சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்).
பெருந்தகை மு. வ வின் செல்லப்பிள்ளை சி. பா. அவர் புகழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி, அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி ! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி ;
சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடுபடு!
- மா.செ.
------------------------
ஆசிரியரின் பிற நூல்கள் :
The Status of Womeu in Tamilnadu during the Sangam Age
A Study of the Literature of the Chera Country
அச்சிட்டோர் :
ஸ்ரீ வெங்கடேஸ்வரா அச்சகம், 7/40, கிழக்கு செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை - 16.
--------------
இலக்கியக் காட்சிகள்
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.
தமிழ் மொழித்துறைத் தலைவர் சென்னைப் பல்கலைக் கழகம்
நறுமலர்ப் பதிப்பகம்
சென்னை -29
முதற் பதிப்பு : 1980 இரண்டாம் பதிப்பு : 1983
மூன்றாம் பதிப்பு : 1988 நான்காம் பதிப்பு : 1994
விலை : ரூ. 20-00
விற்பனை உரிமை : பாரி நிலையம் 184, பிரகாசம் சாலை, சென்னை - 600 108
-----------
முன்னுரை
புறக்கண்ணால் காணத்தக்க காட்சிகள், இயற்கைக் காட்சிகள்; அகக் கண்ணால் கண்டு களிக்கத் தக்க காட்சிகள் இலக்கியக் காட்சிகள். புறத்தே காணும் காட்சியினும், இலக்கியம் வழங்கும் இனிய காட்சிகள் நெஞ்சில் நிழலாடி நிலைத்த இன்பம் வழங்கத்தகும் நீர்மையுடை யனவாகும். 'செஞ்சொற் கவி இன்பம்' என்று கம்ப நாடர் பாராட்டுவது இக் கவிஞர் இலக்கிய இன்பத்தையே யன்றோ !
பல்வேறு சமயங்களில், பல்வேறு சூழல்களில், பல்வேறு கட்டாயத்தின் பேரில் இக்கட்டுரைகள் உருப்பெற்றன. 'இலக்கியத்தின் நோக்கங்கள்' என்னுங் கட்டுரை என் கல்லூரி மாணவப் பருவத்தில் கருக் கொண்டதாகும். 'கடலும் கலமும்' என்னுங் கட்டுரை சென்னையில் நடை பெற்ற இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் கருத்தரங்கிற் படிக்கப் பெற்றது. இதுபோன்றே அண்ணாமலை நகரில் நிகழ்ந்த மேற்காணும் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரையே 'வெறியாட்டு' என்பதாகும். 'கலித்தொகை காட்டும் கற்பு நெறி' எனுங் கட்டுரையும் இவ்வகையில் முகிழ்த்ததே-யாகும். கோவையிலிருந்து மலர்ந்த நாடக விழா மலரில் 'நாடக இலக்கியம்'இடம் பெற்றது. 'சைனரும் தமிழ்நாடும்'தமிழ்நாடு அரசாங்க மலரொன்றுக்கு எழுதப் பெற்றது. 'பழந்தமிழரின் உலக நோக்கு'தனிக் கட்டுரை. மதுரைத் தமிழ்ச் சங்க மலரில் இடம் பெற்றது 'இசைத் தமிழின் மறுமலர்ச்சி." எங்கெழிலென் ஞாயிறு எமக்கு'தருமபுர ஆதீன 'ஞான சம்பந்தத்தில்'ஒளிர்ந்ததாகும். சென்னைக் கம்பர் கழக ஆண்டு விழாப் பேச்சு, 'கிட்கிந்தா ராமன்' எனும் கட்டுரையாக வடிவு பெற்றது. 'தென்றல் வரவு"இளந் தென்றல்' எனும் திங்களிதழில் வந்தது. 'இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நடத்திய கவியரசர் கிருட்டினப் பிள்ளையின் 150வது ஆண்டு விழாச் சொற்பொழிவின் கட்டுரை யாக்கமாகும்.
இலக்கிய ஆர்வம் மிகுந்த தமிழுலகம் என் முயற்சியினை வரவேற்கும் என்னும் துணிவுடையேன்.
சி. பா.
------------------
உள்ளுறை
-
1. இலக்கியத்தின் நோக்கங்கள்
2. கடலும் கலமும்
3. வெறியாட்டு
4. கலித்தொகை காட்டும் மகளிர் கற்பு நெறி
5. நாடக இலக்கியம்
6. சைனரும் தமிழ்நாடும்
7. பழந்தமிழரின் உலக நோக்கு
8. இசைத்தமிழின் மறுமலர்ச்சி
9. எங்கெழிலென் ஞாயிறு எமக்கு?
10. கிட்கிந்தா ராமன்
11. தென்றல் வரவு
12. இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு
------------
இலக்கியக் காட்சிகள்
1. இலக்கியத்தின் நோக்கங்கள்
அறிஞர்தம் அறிவுத் தெளிவிலிருந்து, சிந்தனைச் சுடரிலிருந்து, கருத்து அலைகளினின்று வெளிப்போந்த அமர காவியங்களே இலக்கியங்கள். இந்த இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையினின்றும் முகிழ்த்தெழுந்த வாழ்க்கை வெளிப்பாடுகளும் காலத்தின் சுவடுகளும் எனலாம். வாழ்க்கையின், காலத்தின் பிரதிபலிப்புக்களான இவற்றின் நோக்கங்கள் பற்றிக் காண்போம்.
இலக்கியத்தின் நோக்கங்கள்
அறிவு வளர்ந்து கொண்டு போனால் மட்டும் அவனி உய்ந்துவிட முடியாது. சிறந்த மராத்தி நாவலாசிரியர் காண்டேகர், 'அறிவைக் கொண்டு வாழுபவனின் வாழ்க்கை வேலமரம் போன்றது; அஃது அருகில் வருபவருக்கு நிழல் தராது. அம்மட்டோடு இல்லை; அதனுடைய கூரிய முட்கள் நிழலுக்கு வருபவனின் காலில் எப்போது தைக்குமோ அதனையும் சொல்ல முடியாது' என்கின்றார். எனவே அறிவுமட்டும் வளர்ந்தால் நெஞ்சம் நிலை திரிந்து பல நீசச் செயல்கள் நித்தமும் நிலையில்லா இவ்வுலகத்தில் நிகழ ஏதுவாகும். அறிவும் நெஞ்சமும் இரு புகை வண்டித் தண்டவாளங்களைப் போன்றன . எங்கேயாகிலும் தனது நிலையினின்று சிறிது விலகினாலும் அதன்மேல் ஊர்ந்து செல்லும் புகைவண்டி கவிழ்ந்து போவது திண்ணம். எனவே, இலக்கியத்தின் நோக்கம் அன்புருவான நெஞ்சினை வளர்ப்பதே ஆகும். காட்டாக, ஏழையின் வாழ்வுப் படப்பிடிப்பை முதலாளியும், மண் குடிசையிலே மக்கள் அலமருவதை மாளிகை வாசிகளு ம், முதலாளியின் வாழ்வைத் தொழிலாளியும் எப்படி அறியமுடியும்? கொலைப் பாவத்தின் கொடுமையைச் சித்திரிக்காவிடில் கொலையாளியின் நெஞ்சம் சீர்திருந்துவது எவ்வாறு? கொடுமையைத் தங்கள் வடிவாகக் கொண்ட கல் நெஞ்சர்கள் மடிமை தொலைந்து மக்கள் மன்றத்திலே மதிப்புப் பெற்ற மானமுள்ள வாழ்வு வாழ்வது எவ்வாறு? என்றெல்லாம் இலக்கியம் நாட்டு நீதியை, நடைமுறை வாழ்க்கையை, நன்கு படம் பிடித்துக் காட்டி நல்வழி நடக்க வகை செய்கிறது. இவ்வாறு வாழ்க்கை உண்மைகளை எடுத்துக்காட்டுவதும், எடுத்துக் காட்டித் தம்மைப் பயிலுவோர் நெஞ்சங்களை நெறிப் படுத்துவதுமே இலக்கியங்களின் தலையாய நோக்கங்களாகும்.
வாழ்வும் இலக்கியமும்
வாழ்க்கையினின்றும் உயிர்பெற்றன ஆதலின், இலக்கியங்கள் வாழ்க்கை உண்மைகளை உள்ளது உள்ளவாறே படம் பிடிக்கின்றன. வீட்டு வாழ்விற்கு விளக்கமாகத் திகழ்கின்றவள் மனைவி. அதுபோல், நாட்டு வாழ்விற்கு அணிகலனாகத் துலங்குபவன் ஆடவன், இந்த உண்மையை,
-
மனைக்கு விளக் காகிய வாணுதல் கணவன்
முனைக்குவரம் பாகிய வென்மேல் நெடுந்தகை
-
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிர். (குறுந். 135; 1-2)
-
செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை ............................. (அகம். 33 : 14-18.)
மற்றுமொரு காட்சி : பொருள்வயிற் பிரிந்து சென்றான் திண்தோளனாகிய தலைமகன். கார்காலத்தில் திரும்பி வருவதாக வாக்களித்து விட்டுத் தலைவியிடம் விடை பெற்றுச் செல்கின்றான் அவன். கார்காலமோ நெருங்கிறது. தலைவியோ தூண்டிற் புழுவெனத் துடிக்கிறாள்.
'தலைவனோ கார்காலம் வருவது உணர்கிறான் ஆயினும் அவன் மேற்கொண்ட செயல் முடியவில்லை. செய்வன இருந்தச் செய்யும் தன்னிகரற்ற தலைவனன்றோ, அவன்! எனவே காலம் தாழ்க்கிறது. கார்ப்பருவமும் வந்துவிட் டது. வேங்கை விரிமலர்களும் முல்லையும் பூக்கத் தொடங்கிவிட்டன. ஆனாலும் தலைவி தன் தலைவன் சொன்ன சொல் தவறமாட்டான்; கார்ப்பருவம் பொய்க் கோலம் புனைந்து நிற்கிறது எனத் தேறி நிற்கின்றாள். இத்தகு அருமையான வீட்டு வாழ்க்கையினைக் கவிஞன் இலக்கியத்தில் அமைக்கின்றான். இதனால் ஒப்புயர்வற்ற தலைவியின் நெஞ்சமும் அவன் தலைவன் மாட்டுக் கொண்ட பெரு நம்பிக்கையும் ஒருங்கே புலப்படக் காண் கின்றோம்.
தலைமகன் திரும்பிக் 'கறங்குமணி ஒலிக்கும்' தேரில் விரைந்து வருகிறான். தேரை ஓட்டும் பாகனோ மிகவும் திறனுடையவன். பாரதப் போரில் பஞ்சவரில் நடுவணான பார்த்தனுக்குத் தேரோட்டிய பார்த்தசாரதியோ எனவும் ஐயறுகின்ற அளவுக்கு விரைந்து வயப்புரவிகளைச் செலுத்துகின்றான். ஆனாலும் தலைவனின் நினைவு காடு மலை தாண்டித் தலைவியை அடைந்துவிட்டது, திடீரெனத் திரும்பி, தேர் செல்லும் பாதையின் மருங்கே நோக்கினான் தலைமகன். புதர்களில் மலர்களில் மது உண்ண வந்த மது கரங்கள் மருட்சியடைந்து இங்கும் அங்கும் எழுந்து பறக்கின்றன. இதனைக் கண்டான் தலைமகன். நெஞ்சம் எரியுற்ற இழுதென இரங்கிற்று. பாகனை விளித்துத் தேரை நிறுத்தச் சொன்னான. தேரின் மணி ஒலித்த ஒலியினால் கிலியடைந்த வண்டுக்கு இரங்குவான் போல், மணியின் நாக்குகளை எல்லாம் கட்டிவிட்டு அமைதியாகத் தேரைச் செலுத்தச் சொன்னான் தலைவன். இந்தச் சீரிய சித்திரத்திலே அந்நாளைய மக்களின் அருள் நெஞ்சம் காட்டப் படுகிறதன்றோ ?
-
குரங்குளைப் பொலித்த கொய்சுவற் புரவி
மரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையோடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்! (அகம். 4:8-13)
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த காதலனும் காதலியும் வாழ்வில் ஒன்றுபட்டனர். அவர்கள் தாய் தந்தையர் யார் யாரோ? என்று கூறுமளவிற்கு இருந்தாலும், செம்மண் பூமியில் பெய்த நீர் போல் ஒன்று கலந்து இணைந்துவிட்ட இரு நெஞ்சங்களை,
-
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே (குறுந். 40:4-5)
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தினை இயற்றிய இளங்கோவடிகள் தம் நூல் எழுந்ததற்கான காரணங்களைப் பதிகத்தில் தெளிவாகக் கூறுகின்றார் :
-
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாக
…….. …………… ………….. ….
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் (சிலம்பு; பதிகம் : 55- 60)
-
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுக என்னாயுள்
(சிலம்பு; வழக்குரை காதை : 76-77)
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்! (சிலம்பு; வழக்குரை காதை : 80)
என்று கூறித் தன் உயிர்கொண்டு அவனுயிர் தேடினள் போல உயிர்விட்டாள். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்' என்ற உண்மையைப் பாண்டியன் மூலம் உணர்த்துகின்றார் ஆசிரியர்.
அடுத்து, 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' என்ற உண்மையைக் கண்ணகி வாழ்வின் மூலம் அறிவுறுத்துகின்றார். உரைசால் பத்தினியாகிய கண்ணகி, 'தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்' என இளங்கோவடிகளால் பாராட்டப் பெற்றவள். கற்பின் மிக்கொழுந்த ஆற்றலால் மதுரை நகரை எரியுண்ண வைத்தாள். பாண்டியன் தன் பதி நீங்கிச் சேர நாடு சென்று அங்கிருந்தும் வானோர் உலகு போனாள். இவள் வரலாற்றினைக் குன்றக் குறவர்கள் வாயிலாக உணர்ந்து, சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்குரிய படிமம் சமைக்க இமயத்தினின்றும் கல் கொணர்ந்து அதனைத் தன்னை இகழ்ந்த கனக விசயர் முடிமேல் ஏற்றித் தன் நாட்டில் ஒரு கோயில் எடுத்து விழாச் செய்வித்தான். இலங்கைக் கயவாகுவும் கோயில் கட்டிக் கண்ணகியாம் கற்புத் தெய்வத்தை வழி பட்டான்.
ஊழ்வினையாலே கொல்லப்பட்டான் கோவலன். கண்ணகியை விட்டு அன்புச் செல்வியாம் மாதவிபால் அன்பு பூண்டு வாழ்த்து வந்தான். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிற்று. 'மாயப்பொய் பல கூட்டும் மாதவி' என மயங்கி, யாழிசைமேல் வந்து விதி வலியுறுத்த, அவளை விட்டும் நீங்கினாள். அவனைப் பிரிந்த மாதவி, 'மாலை வாராராயினும் காலை காண்குவம்' என நம்பி னாள். வரவில்லை அவன். இப்படிச் செல்கிறது கதை. ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதை இதன் மூலம் தெளிவுறுத்துகின்றார் ஆசிரியர்
-
ஓரி னெய்தல் கறங்க வோரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பனிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி லாளன் (புறம்; 194 : 1-5)
-
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை யுண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே (திருமந்திரம் : 192)
இப்படிச் சில வாழ்க்கை உண்மைகளைக் காட்டி வாழ்க்கையை விளக்குவதோடு மட்டும் அமைந்து விடாமல், அவ் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வழிகளைக் கூறிச் செல்லும் சிறப்பினையும் இலக்கியங்கள் பெற்றுத் துலங்குகின்றன.
இலக்கியமும் நெறிப்படுத்துதலும்
ஒவ்வொரு காலத்தில் தோன்றிய இலக்கியங்களும் வாழ்க்கையை நெறிப்படுத்துகின்ற வகையிலேதான் அமைந்து காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் புற நானூற்றுப் பாடல்கள் சில அறங்களை நேரடியாக உணர்த்திச் செல்கின்றன. அகப்பாடல்கள் நேரடியாக நெறிப்படுத்துவனவாக அமையவில்லை. ஆனால் அவை, தம்மைச் சுவைக்கும் சுவைஞர்கள் நெறிப்படுகின்ற வகையில் சீர்மையுடன் துலங்குகின்றன.
-
ஒன்றன் கூறாடை யுடுப்பவரே யாயினும்
ஓன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை (கலி; 18: 10 -11)
-
அன்புடைக் கணவர் அழிதகச் செயினும்
பெண்பிறந் தார்க்குப் பொறையே பெருமை (பெருங்கதை)
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி (குறுந். 397 : 6-8):
துன்பந் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு (கலி; 6 : 10-11)
.................................. அவர் நமக்கு
அன்னையு மத்தனு மல்லரோ
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே (குறுந்; 93 : 3- 4)
-
அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணிபோற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையோடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர! (நற்; 10 : 1- 4)
-
ஈன்று புறந் தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம்: 312)
இன்று காட்டுத் தீப்போலத் பொதுவுடைமைக் கொள்கை உலகம் முழுதும் பரவி வருகிறது. புரட்சி விதையை விதைத்துவிட்டுச் சென்ற அறிஞர் காரல் மார்க்ஸ், அத் தருவினைத் தண்ணீர் விட்டுப் பட்டுப் போகாமல் பாதுகாத்த லெனின் போன்றோர்கள் நாட் டிலே 'புரட்சியிலே புரட்சியிலே பூப்பதுவாம் இவ்வுலகம்' என்னும் பொருளுக்கு அழகு தரும் பூலோக சொர்க்கமாய் விளங்கும் உருசியாவின் கொள்கையை ஆயிரம் ஆண்டு சுளுக்கு முன்னரே ஒரு கவிஞன் பாடிச் சென்றார், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று. வாழ்தலை இனிமையாகவும் கொள்ளாமல் ஓர் வெறுப்பு வந்தவிடத்து இனிமை யற்றுக் கொடுமை உடையதாகவும் கருதாமல் சமநோக்கோடு கருதி நம் கடப்பாட்டினைச் செவ்வனே ஆற்ற வேண்டும் என்ற பண்பாட்டு மன அமைதியினைப் பூங்குன்றனார்.
-
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
பகுத்துண்டு பல்லுயிரோம்புதலை வாழ்க்கையின் கட மைகளுள் ஒன்றாகக் கொள்ள வேண்டும்.
-
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் ; 216}
-
உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே (புறம்; 182 : 1:3)
-
நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும் பசி தீர யாழநின்,
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்று எண்ணாது
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே (புறம்; 163)
ஈயென இரத்தலின் இழிவினையும், கொள்ளெனக் கொடுத்தலின் உயர்வினையும்,
-
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றால் அதனினும் உயர்ந்தன்று (புறம்; 204 : 1-4)
-
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே (புறம்; 34 : 5-7)
அடுத்துத் திருக்குறளுக்கு வருவோம்.
-
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள்:45)
-
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள்; 391)
-
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (குறள்; 504)
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று (குறள்; 157)
-
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் (குறள் ; 314)
-
தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர் பிழையை
மன்னியும் என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல்
வள்ளுவரின் 'அறத்துப்பால்' மக்களின் அற வாழ்க்கைக்கும், 'பொருட்பால்’ பெரும்பான்மை அரசியல் வாழ்க்கைக்கும், 'காமத்துப்பால்' இலக்கியச் சுவைக்கும் பெரிதும் பயன்படுவனவாகும்,
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்: உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்ற மூன்று உண்மைகளைக் கூற வந்த இளங்கோவடிகளும், நூலின் இறுதியில்,
-
தெளிவுறக் கேட்ட திருத்தகு நலலீர்!
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்:
தெய்வந் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானஞ் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட் பிகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்
அறவோ ரவைக்களாம் அகலா தணுகுமின்;
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்
கள்ளுங் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்
(சிலம்பு ; வரந்தருகாதை : 185 - 202)
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் (கானல் வரி 32 : 3- 4)
என்ற இரண்டு அடிகளில் எத்துணை அருமையான நீதியை நம்முன் வைக்கின்றார்.
அடுத்துத் தோன்றிய மணிமேகலை உணர்த்தும் அறங்கள் பல.
-
முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில்
கடியப் பட்டன வைந்தும் அவற்றில்
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளா தாகும் காமந் தம்பால்
ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோரென
நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள்
நீங்கா ரன்றே நீணில வேந்தே
தாங்கா நரகந் தன்னிடை யுழப்போர் (மணிமேகலை 22 : 169-176)
அறமே வாழ்க்கைக்கு மிக்க விழுத்துணையாவது என்பதை,
-
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது (மணிமேகலை 22 : 135-138)
ஆற்றா மாக்களின் அரும்பசி களைந்து வாழும் மெய்ந் நெறி வாழ்க்கையே உயர்த்த வாழ்க்கை என்பதை,
-
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே (மணிமேகலை 11 : 95-96)
'கல்வியிற் பெரியனாம் கம்பன்' இராமாயணம் என்னும் காவியக் கோயிலைக் கட்டினான். 'அவன் (தொடாதது ஒன்றும் இல்லை; தொட்டதை அழகுபடுத் நாமல் விட்டதில்லை' என்று அறிஞர் ஜான்சனைப் பற்றிக் கோல்ட்ஸ்மித் கூறும் கூற்றினை நாம் கம்பர்மேல் ஏற்றிச் சொன்னால் மிகையாகாது.
-
வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரைஇ லாமையால்
ஒண்மை இல்லைபல் கேள்வி ஒங்கலால் (கம்பராமாயணம்)
-
இழிப்புறு நெஞ்சினள் ஆயினும்
பழிப்புறம் போகாப் பண்பினள் (கம்பராமாயணம்)
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் நிரலில் முதலில் நிற்பவர் பாரதி. அவர் ஓர் உலகக் கவி! புரட்சிக்கவி.
-
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத தேசம் : 5)
-
இனியொரு விதி செய்வோம் அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் (பாரத சமுதாயம் : 21)
கவிஞர்கள், மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டுச் சட்டமன்றத்தில் சட்டமியற்றாவிட்டாலும் தம் மன உலகில் சிந்தித்து நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்ல சட்டத்தை இயற்றுகிறார்கள். சான்றாகப் பாரதி தாசனின் புரட்சிக் கருத்துகள் சிலவற்றைக் கூறலாம்.
சமுதாயத்தில் புரையோடிப்போன உள்ளங்களுக்குப் புனித மருந்து போடும் தொழிலில் அவர் இறங்கியுள்ளார். விதவைத் திருமணத்தை வலியுறுத்து முகத்தான்.
-
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்; மணவாளன்
இறந்தால் பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ ?
பெண்கள் குடித்தனம் பேணுவதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், உலகினை உணர்ந்து கொள்வதற்கும், கல்வியைப் போற்றுதற்கும் பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்று கூறுகின்றார்.
-
கல்வியில் லாத பெண்கள் களர்நிலம் அந் நிலத்தில்
புல் விளைந் திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி, அங்கே
நல்லறி வுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்
(குடும்ப விளக்கு, இரண்டாம் பகுதி)
-
சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கி நடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதலினால் துரும்புபோல் அலக்கழிப்போம் பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்திடுவோம்!
முடிவுரை
'காலத்தின் இடையிடையே ஹோமர், ஷேக்ஸ்பியர், மில்டன் முதலிய கவிஞர்கள் தோன்றியிருக்காவிட்டால் உலகம் அழிந்திருக்கும்' என்கிறார் ஷெல்லி. ஆம்; இது தான் உண்மை . உலகைக் கட்டிக் காக்கும் பொறுப் பினைப் பெரும்பான்மையும் கவிஞர்கள் ஆக்கும் காவியங்களே பெற்றுத் திகழ்கின்றன. உடலுக்கு உரத்தை விஞ்ஞானம் தரலாம். ஆனால் உள்ளம் பண்பட இலக்கியம் பெரிதும் பயன்படுகிறது. 'முதன்முதலில், இலக் கியத்தைப் படிக்கும் பொழுது நமது மூளை தூங்குகிறது. நமது மனமும் அமைதி அடைகிறது. பின்னர் அந்த இலக்கிய உலகிலே தமது நுண்ணுடல் செல்கிறது. அங்கு நிகழும் இன்ப துன்ப உணர்ச்சிகளை மனம் அடைகிறது. ஆனால் அதனால் நமது பருவுடல் துன்பமடைவதில்லை' என்பர் டாக்டர் மு. வரதராசனார். இதுவே இலக்கியத்தின் குறிக்கோளாகும்.
இலக்கியம் செம்மையான மனத்தினை நமக்குத் தருகிறது. பணம் எவ்வளவுதான் இருந்தாலும் மன அமைதி கிட்டி விடாது. அமைதியைக் கொடுக்கக்கூடிய அரு மருந்து இலக்கியமே ஆகும். அமைதியை இலக்கியம் தவிர வேறெந்தப் பொருளும் வழங்கிவிட முடியாது. அமைதியே - அன்பே வாழ்வின் நிறையுடைமையை எடுத்தியம்பும். அமைதி! அமைதி! அமைதி! எனத் தவம் இயற்றும் தவசி கள்கூட அமைதி பெற்றுவிட முடியாது. ஆனால் அதே நேரத்தில் இலக்கியத்திலேயே தனது வாழ்நாளினைக் கழிக்கும் ஒரு பெரியார் அமைதியினை எளிதாகப் பெற்று விடுவர். இதனாலன்றோ நீற்றறையில் தவமுனியாம் திருநாவுக்கரசர்,
-
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
'அலைகள் ஓயாமல் மோதும் கற்பாறை போன்று இரு; அது அலைகளின் வேகத்தை அடக்கிவிடும்' என்கிறார் மேலை நாட்டு அறிஞர் மார்க் ஒளரேலியன். அந்த அமைதி இலக்கியத் தேர்ச்சியினால், இலக்கியம் அளிக்கும் வற்றாத இன்பத்தினால் வருவதொன்றாகும். வற்றாத வளம் சுரக்கும், வளமாகக் காவிரி பாயும் புண்ணிய பூமியில் இருந்தால்கூட அமைதியற்று அல்ல லுற்று மிடிமிகப் பெற்ற இன்னல் நிறைந்த வாழ்வினை வாழும் எண்ணற்றோரை நாம் காண்கின்றோம். அவர்கள் பணம் சேர்க்கப் பாடுபட்டார்களேயொழிய வாழ்வின் அமைதிக்கு - நெஞ்ச நிறைவுக்கு - நினைவின் இன்பத்திற்கு பண்பட்ட வாழ்க்கையின்பாற்பட்டுப் பகலோன் போல் ஒளிவீசித் திகழப் பாடுபடவில்லை. எனவே இலக்கியம் இத்துணை அருமையான ஒரு செயலினை மக்களிடையே என்றும் செய்து கொண்டு வருகிறது. எனவே மேலை நாட்டு இலக்கியமாயினும் சரி, நந்தமிழ் நாட்டு இலக்கியமாயினும் சரி, நாம் ஆழ்ந்து படித்து, அதன் இனிமையில் திளைத்து, அமைதி பெற்று, நெஞ்சினை வளர்த்து, அதே நேரத்தில் உடல் நலமும் பேணி விழுமிய வாழ்க்கையை இலக்கிய ஆசிரியர்கள் சொல்லிச் சென்றிருக்கும் சொல்லின் வழியே நடத்து வோமாக!
--------------
2. கடலும் கலமும்
-
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி
-
சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை'[1]
கிறித்துவுக்கு முன்
கிறித்து நாதர் பிறப்பிற்கு முன்னரே தமிழர் திரை கடலோடியும் திரவியந் தேடினர்; கி. மு. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் என்னும் கிரேக்க அரசனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் வாயிலாக மயில்தோகை: யானைத் தந்தம், மணப் பொருள்கள் முதலியன சென்றன. மயிலைக் குறிப்பிடும் 'தோகை' என்ற தமிழ்ச் சொல் ஈப்ரூ மொழியில் 'துகி' என்று வழங்குவதாயிற்று. அம் மொழியில் 'அகல்' என்பது மணப்பொருளாம் அகிலைக் குறிப்பதாகும். பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் திமில் உடைய எருதுகள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சேர நாட்டு மிளகினைப் பொலீசிரியர்கள் விரும்பி வாங்கித் தம் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். 'யவனப் பிரியா' என்றே மிளகு வழங்கப் பெற்றது. தமிழ் நாட்டு வணிகர் கொண்டு சென்ற பொருள்களை ஏடன் துறை முகத்தில் அரேபியர்கள் பெற்று ஆப்பிரிக்கருக்கு விற்றனர் [2]. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அனுப்பி வைக்கப்பெற்ற அரிசி, மயில், சந்தனம் முதலிய பொருள்களின் பெயர்கள் திராவிட மொழிப் பெயர்களாகவே அமைந்திருப்பதனைக் காணும் பொழுது பண்டைத் தமிழர்தம் கடல் வாணிகச் சிறிப்புத் தெற்றெனப் புலப்படும் [3].
புலவர் பெயர்கள்
மேலும் பழந்தமிழ்ப் புலவர் பலர் வாணிகத்தில் மேம்பட்டிருந்ததனை அவர் தம் பெயர் கொண்டே அறியலாம். மதுரைச் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார். மதுரைப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தங் கொற்றனார் முதலி யோரின் பெயர்கள் இவ்வுண்மையை உணர்த்தும்.
முந்நீர் வழக்கம்
தொல்காப்பியனர் கடற்பயணத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
'முந்நீர் வழக்கம் மகடுவோ டில்லை '[4] என்று அவர் கடற் பயணத்திற்குப் பெண்களை உடனழைத்துச் செல்லக் கூடாது என்று விதி கூறியிருப்பது கொண்டு தமிழர் தம் கடற் செலவினைக் குறித்து அறியலாம். மேலும் தமிழர் கடற்பயிற்சி மிக்கிருந்த காரணத்தால், ஆர்கலி, ஆழி, .ணரி, முந்நீர், பவ்வம், பரவை, கடல் முதலான பல சொற்கள் கடலைக் குறிக்க ஏற்பட்டன. மேலும், கலங் களைக் குறிக்கும் ஓடம், பரிசல், புணை, தோணி, அம்பி, திமில், படகு, கலன், கப்பல், நாவாய், வங்கம் முதலான பெயர்களும் தமிழர் தம் க ட ல் வாணிபச் சிறப்பை யுணர்த்தும்.
-
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட வுரவோன் மருக'[5]
உள் நாட்டு வாணிபத்திற்கு உறுதுணையாயிருந்த ஓடம், 'பஃறி' என வழங்கப்பட்டது. பட்டினப்பாலையில் இத்தகைய பஃறியைப் பற்றிப் பின்வருமாறு சொல்லப் பட்டுள்ளது. 'வெள்ளை உப்பின் விலையைச் சொல்லி விற்றுப் பண்டமாற்றாக நெல்லைக் கொண்டு வந்தவை; குதிரைச் சாலையிலே நிற்கும். குதிரைகளைப் பிணிக்கு மாறு போலக் கழிசூழ்ந்த பக்கத்திலே தறிகளிற் கட்டப் பட்டுள.'
-
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லோடு வந்த வல்வாய்ப் பஃறி
பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்கும்
கழிசூழ் படப்பைக் கலியாணர். [6]
-
கலந் தந்த பொற் பரிசம்
கழித் தோணியாற் கரைசேர்க்குந்து.[7]
-
உழுத்தத ருண்ட வோய் நடைப் புரவி
கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ [8]
-
கடல் பாடவிந்து தோணி நீங்கி
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும் [9]
அறத்துறை அம்பிகள் என்று கூறப்பட்ட ஓடங்கள் பெரியோராயினும் சிறியோராயினும் ஆற்றைக் கடக்க வருவோரை ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு அழைத்துச் சென்று விடும்.
-
உறுவரும் சிறுவரும் ஊழ்மா றுய்க்கும்
அறத்துறை யம்பியின் மான [10]
யானையை யொத்திருக்கும்,
-
வடிக்கதிர் திரித்த வன்ஞாட் பெருவலை
இடிக்குரற் புணரிப் பௌவத்து இடுமார்
நிறையப் பெய்த வம்பி காழோர்
சிறையறுங் களிற்றிற் பரதவ ரொய்யும். [11]
பெருங்கடலில் செம்மாந்து திரியும் ஓடுகலம் நாவாய் எனப்பட்டது. புகார்த் துறைகளில் நாவாய்கள் நிற்கும் நிலையினைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கம்பத்தினை அசைக்கும் யானையின் செயலுக்கு ஒப்பிட் டுள்ளார்.
-
வெளிவிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
முசைச்கூம்பி னசைக் கொடியும் [12]
-
நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்
வாலுளைப் புரவியோடு வடவளந் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை. [13]
-
கொடும்புணரி விலங்கு போலக்
கடுங்காலொடு கரைசேர நெ
டுங்கொடிமிசை யிதையெடுத்து
இன்னிசைய முரசமுழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய். [14]
-
விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும் [15]
இழையணிகளைத் தூரதேயங்களுக்குக் கொண்டு விற்றுவிட்டு இரவு நேரத்தில் இருங்கழியை யடையும் வங்கங்களில் வந்திறங்கிக் கரையைச் சேரும் வணிகரைப் பற்றி மதுரைக் காஞ்சி பின்வருமாறு அழகு பட விவரிக்கின்றது:
-
வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லெ னிமிழிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்தப் புலவுத்திரை யோதம்
இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து. [16]
-
அருங்கலந் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கந் திசைதிரிந் தாங்கு. [17]
-
உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ. [18]
இருங்கழி யிழிதரு மார்கலி வங்கம். [19]
கலங்கரை விளக்கம்
நடுக்கடலில் இரவு நேரத்தில் வழங்கும் கலங்கள் திசைதடுமாறாது கரை வந்தடைதற்குத் துணையாகக் கடற்கரைப் பட்டினங்களில் அக்காலத்தில் கலங்கரை விளக்கங்கள் அமைந்திருந்தன. இத்தகு கலங்கரை விளக்கங்களைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
-
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறைபிறக் கொழியப் போகி. [20]
எட்டுத் தொகை நூல்களில் கப்பல்கள் 'கலம்' என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளன. குறுந்தொகைப் பாட்டொன்றில் கடலும் கலமும் சுட்டப்படுகின்றன.
-
...................... தெண்டிரைக்
கடலாழ் கலத்தில் தோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே. [21]
சங்குகள் கரையின்கண்ணே திரிய, கடல் எழுந்து ஆரவாரிக்கும் ஒலிபரந்த குளிர்ந்த துறைக்கண் கலங் களைப் பரதவர் செலுத்துவர் என்று ஐங்குறுநூறு குறிப்பிடும்:
-
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழங்கப்
பாடிமிழ் பனித்துறை யோடுகல முகைக்கும். [22]
-
கடலே, கால் தந்த கலனெண் ணுவோர்
கானற் புன்னைச் சினை நிலைக்குந்து. [23]
(1) புகார்
பண்டைத் தமிழகத்தே சோழ நாட்டில் காவிரிப்பூம் பட்டினமும், சேர நாட்டில் முசிறியும் பாண்டிய நாட்டில் கொற்கையும் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில், காவிரி கடலொடு கலக்கும் இடத்தில், காவிரியாறு அகலமும் ஆழமும் நிறைந்து விளங்கிய காரணத்தால், பாரம் ஏற்றிய கப்பல்கள் பாய்சுருக்காது சென்று அதன் கரைகளில் வெளி நாட்டிலிருந்து வந்த பண்டங்களைச் சொரிவனவாகும்:
-
....................... கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகார்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே. [24]
மீன்களை விற்று அதன் விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவியல்களும், வீடும் தோணியும் பிரித்தறிய வாராதபடி காண்பாரை மயக்கச் செய்யும் மனையிடத்தே குவிக்கப் பெற்ற மிளகுப் பொதிகளும், மரக்கலங்கள் தந்த பொன்னாலாகிய பொருள்களும், கழிகளில் இயங்கும் தோணிகளால் கரைசேர்க்கப்பெற்ற மலைபடு பொருள்களும், கடல்படு பொருள்களும் முசிறித் துறைமுகத்தில் நெருங்கிக் கிடந்தன.
-
மீனொடுத்து நெற்குவைஇ
மிசையம்பியின் மனை மறுக்குந்து
மனைக்குவைஇய கறிமுடையாற்
கலிச்சும்மைய கரைகலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
மலைத்தாரமுங் கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும். [25]
-
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும். [26]
சிறுபாணாற்றுப் படையும், [27] மதுரைக்காஞ்சியும் [28] கொற்கைத் துறைமுகத்தே நடந்த முத்து வாணிகத்தினை வளமுறக் குறிப்பிடுகின்றன. முத்தால் மாட்சிமையுற்றது கொற்கை என அகநானூறு நவிலும்.
-
மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன.[29]
வணிகர் சால்பு
இத்தகு வணிகத்தினை மேற்கொண்டிருந்த பெரு மக்கள் உண்மையே பேசும் நற்பண்பு மிக்கவர். தமக்குக் கிடைக்கும் இலாபத்தை வெளிப்படையாகக் குறிப்பிடுவர்; பிறர் பொருளை மிகுதியாகக் கொள்ளாமலும், தாம் விற்கும் பண்டங்களைக் குறைத்துக் கொடாமலும் நடுவு நிலைமை சான்ற நெஞ்சுடன் வாணிகம் செய்வர். இவ்வாறு வணிகரைப் பற்றிப் பட்டினப்பாலை சிறப்பாகக் குறிப்பிடுகின்றது.
-
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்நெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகை கொளாது
கொடுப்பதுதூஉங் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும். [30]
-
'அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி . '[31]
-
வேறுபல் நாட்டுக் கால்தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் [32]
-
வேறுபல் நாட்டுக் கால் தர வந்த
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை [33]
-
கடல் மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர்கொள் பலகை போல [34]
இதுகாறும் கூறியவற்றால் பண்டைக் காலத்தே தமிழர் கலம் செலுத்தி வாணிகம் போற்றி வளம் பல சேர்த்து வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்ற செய்தி விளக்கமுறக் காணலாம்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின் [35]
என்ற பொய்யாமொழியின் கூற்றிற்கிணங்கத் தமிழ் வணிகர் அறநெறி போற்றிய மேம்படு வாழ்க்கை வாழ்ந் தனர் என்பதும் புலப்படும்.
--------
[1]. திருக்குறள் 1031
[2]. பி.டி. சீனிவாச ஐயங்கார்; தமிழர் வரலாறு; பக்கங்கள் 129-134.
[3]. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி; தென்னிந்திய வரலாறு. பக்கங்கள் 76-78.
[4]. தொல்காப்பியம்; அகத்திணையியல்; நூற்பா : 37
[5]. புறநானூறு 66 : 1-2
[6]. பட்டினப்பாலை : 29-32
[7]. புறநானூறு : 343: 5-6
[8]. புறநானூறு : 299 : 2:3
[9]. அகநானூறு : 50: 1-2
[10]. புறநானூறு : 381; 23-24
[11]. நற்றிணை : 74 : 1-4
[12]. பட்டினப்பாலை : 172-175,
[13]. பெரும்பாணாற்றுப்படை : 319-321.
[14]. மதுரைக் காஞ்சி : 77-83
[15]. மதுரைக் காஞ்சி : 321-323
[16]. மதுரைக் காஞ்சி : 536-541
[17]. பதிற்றுப்பத்து : 52 : 3-4
[18]. அகநானூறு : 255 : 1-2
[19]. புறநானூறு : 400: 20
[20]. பெரும்பாணாற்றுப்படை 346-351
[21]. குறுந்தொகை : 240
[22]. ஐங்குறுநூறு : 192: 1-2
[23]. புறநானூறு : 386 : 14-15
[24]. புறநானூறு : 30 : 10-14.
[25]. புறநானூறு : 343 : 1-8
[26]. அகநானூறு : 149 : 9-10
[27]. சிறுபாணாற்றுப்படை : 56-58
[28]. மதுரைக் காஞ்சி 135-138
[29]. அகநானூறு : 27 : 8-9.
[30]. பட்டினப் பாலை : 2016-211
[31]. மதுரைக் காஞ்சி : 500
[32]. நற்றிணை : 31 : 8-9
[33]. நற்றிணை : 295 : 5-6
[34]. நற்றிணை : 30:8-9.
[35]. திருக்குறள் : 120
-------
3. வெறியாட்டு
மனிதனின் வாழ்க்கைக் கூறுகளில் சமயத்திற்குத் தனியானதோர் இடம் உண்டு. மனிதனைப் பக்குவப் படுத்தும் நெறிக்குச் சமயம் என்று பெயர். மக்கள் உயரிய குறிக்கோளோடு விழுமிய வழியில் செல்லச் சமயம் உதவுகின்றது. தமிழர்க்குக் கடவுள் நம்பிக்கையும் அதனால் கடவுள் வழிபாட்டு நிலையும் இருந்தனவாக அறிகிறோம். பின்னாளில் தென்னாடு போந்த ஆரியர் வருகைக்கு முன்பே தமிழர் தம் சமயவாழ்க்கை ஒரு தனிமையான பண்போடு திகழ்ந்ததாகக் கூறுவர்.[3]
தொடக்கக் காலத்தில் ஒருவித அச்சத்தோடு கடவுள் வழிபாடு தொடங்கியிருக்கக் கூடும். 'மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப'[4] என்ற கபிலர் பாடல் இக் கருத்தினை வலியுறுத்தும். வரலாற்றுக்கு எட்டாத பழங்காலத்தில் தெய்வத்தை வழுத்தி வழிபடும் முறைகள் இயற்கையோடு வாழ்வு இயைந்த முறையில் அமைந்திருந்தன.
மலையும் மலையைச் சார்ந்ததுமான குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்த மக்கள், 'வெறியாட்டு முதலிய விழாக்களினால் தெய்வங்களை வழுத்தி மகிழ்விக்கும் அளவிலேயே தமிழர் சமயம் அமைத்திருந்தல் கூடும்' என்றும், 'காலஞ்செல்லச் செல்லத் தமிழருக்கே சிறப்பான வெறி யாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும், ஆரியருக்குரிய கிரியை முதலியவற்றால் மறைக்கப்பட்டு ஒழிந்தன' என்றும் பேராசிரியர் டாக்டர் சு. வித்தியானந்தம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.[5]
சங்க காலத்தே குறிஞ்சி நில மக்களிடத்தே வெறியாட்டு என்னும் வெறிக் கூத்து மிகப் பெரிதும் பரவியிருந்தது 'வெறி' என்னும் சொல் தெய்வத்தைக் குறிப்பதாகும்.[6] தெய்வம் மக்கள் மீது வந்து ஆடுவதை 'வெறியாட்டு' என்று வழங்குவர். முருகனுக்கு இயல்பாய நறுமணத்தை 'வெறி' என உரைப்பர்.[7] இது குறித்தே சங்க காலப் புலமைச் சான்றோராகிய நக்கீரனாரும் திருமுருகனைக் குறிப்பிட வந்த விடத்து 'மணங்கமழ் தெய்வத்திள நலம் காட்டி' என்று குறிப்பிட்டுள்ளார்[8]. தெய்வம் மக்கள் மீது வந்து ஆடுவதை வெறியாட்டென்று வழங்குவர். சங்க இலக்கியங்களில் முருகவழிபாடு கூறப் படும் இடங்களிலெல்லாம் 'வெறியாட்டு' எனப்படும் இத்தகைய கூத்துகள் வருணிக்கப் பட்டுள்ளன. வழி படுவோர் தெய்வம் தம்மிலே வந்து வெளிப்படும் என்னும் நம்பிக்கையுடன் கூத்தாடினர்.
தொல்காப்பியனார் கூறும் இலக்கணம்
தொல்காப்பியனார் தம் பொருளதிகாரத்தில்,
-
வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும்[9]
நச்சினார்க்கினியர் நவிலும் விளக்கம்
-
”செவ்வேள் வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேல னென்றார். காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென்றார். வேலனைக் கூறினமையிற் கணிகாரியையுங் கொள்க.
காந்தளை யுடைமையானும், பனந்தோடுடைமையானும், மகளிரை வருத்துதலானும், வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனாலும் வேலன் ஆடுதலே பெரும்பான்மை ; ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுணர்க.” [10]
-
அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத்
தமரகத்துத் தன்மறந் தாடுங்- குமரன் முன்
கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையா
ரேர்க்காடுங் காளை யிவன்.
-
அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங்
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்
இதுவென அறியா மறுவரற் பொழுதில்
படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய்க் கூறக்
களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்
துருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள் ......
ஆர நாற வருவிடர்த் தகைந்த
சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்
களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல
நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத்
தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப
இன்னுயிர் குழைய முயங்கு தொறு மெய்ம்மலிந்து
நக்கென னல்லெனோ யானே யெய்த்த
நோய்தணி காதலர் வரவீண்
டேதில் வேலற் குலந்தமை கண்டே . [11]
மேற்காணும் பாடலைக் கூர்ந்து விளக்கம் பெற்றால் வெறியாடல் ஏன் மேற்கொள்ளப் பெறுகின்றது என்பதும் அதன் அகப்பொருள் அமைதியும் நன்கு தெரிய வரும்.
வெறியாட்டு நிகழும் சூழ்நிலை
தலைவன் மாட்டுத் தன் நெஞ்சம் நெகிழ்ந்து அவனிடத்து ஆராக்காதல் கொண்டு வாழும் தலைவி, சில நாள்களில் தலைவனைச் சந்தித்துப் பேச முடியாது போயின் கவல்வாள்; தலைவனைப் பிரிந்திருக்க முடியாத தலைவி உடல் மெலிவாள். தலைவியின் மேனியிலே தோற்றிய வேறுபாடு கண்டதாய் முதலியோர் அவ் வேறுபாடு எதனால் ஏற்பட்டதென்று ஆராயப் புகுவர். நெல்லை முறத்தில் வைத்துக் குறி பார்ப்பவளாகிய கட்டுவித்தியை அழைத்து வந்து கட்டுப் பார்ப்பர். 'கட்டுப் பார்த்தலாவது ஒரு முறத்தில் நெல்லை வைத்து அதை எண்ணிப் பார்த்து அவ்வெண்ணின் வழியே அறிந்த செய்திகளைக் கூறல்' என்பதாகும்.[12] இவ்வாறு நிமித்தம் பார்ப்பவள் அகவன் மகள் என வழங்கப்படுவாள். அவ்வாறு அவள் தெய்வங்களைப் பாடி அழைத்து நிமித்தம் பார்க்கும் பொழுது, தலைவி, தலைவனிடத்துக் கொண்டு காதலை எவ்வாறேனும் தாய்க்கு அறிவித்துவிட வேண்டும் என்று எண்ணங் கொண்ட தோழி அவ் அகவன் மகளை அணுகுகின்றாள். அவள் ஒவ்வொரு மலையாக வருணித்துப் பாடிவிட்டு, தலைவன் வாழும் குன்றத்தையும் பாடி முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை தலைவனின் குன்றத்தையே பாட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறாள். இதனால் தாயர் முதலியோருக்குத் தலைவியின் காதல் நெஞ்சமும் வாழ்வும் தெரிய வருகின்றன. அப் பாட்டு வருமாறு:
-
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே யவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே, [13]
வேலன் வெறியாட்டயர்தல்
தலைவியின் உடலில் வேறுபாடு கண்ட தலைவியின் தாய் முருககோயிற் பூசாரி படிமத்தான் எனப்படும் வேலனை அழைத்துத் தலைவியின் நோய்க்குரிய காரணத்தை வினவுவாள். வேலன், குறிஞ்சி நிலத்தெய்வம் முருகனேயாதலால் இது முருகனாலாயதென்று கூறுவான். முருகனுக்குப் பலி கொடுத்துப் பூசனை புரியின் தலைவியின் நோய் நீங்குமென்பான். முருகனை விளையாட்டயர வேலன் புனையும் வெறியயர்களம் மிகவும் அழகுறப் புனையப் பெறும். குறுந்தொகையில் இருபாடல்களில்[14] இவ் வெறியயர் களம் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கக் காணலாம். 'மணற் பரப்பிலே புன்க மலர்கள் உதிர்ந்து பரவிக் கிடத்தல், முருகன் வெறியர் களந்தொறும் செந்நெல் வான்பொரி சிதறினாற் போல உள்ளது, [15] என்றும், 'விளங்கிய கடற் பரப்பிலே நல்ல மணங்கமழும் ஞாழல் மலருடன் புன்னை மலரும் பரவி வெறியயர் களம் போலத் தோன்றும்[16] என்றும் வெறியயர்களம் பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது.
மதுரைக் காஞ்சியில் வெறியாடு களம்
தலைவியின் உடல் மெலிவிற்குக் காரணம் முருகனே என்று கூறி, வேலன் முருகனைப் பரவி வழிபட்டுக் கூத்தாடுவான். 'அரிய அச்சத்தைத் தோற்றுவிக்கும் வேலன் தலைவிக்கு வந்துள்ள இடுக்கண் முருகனால் விளைந்தது என்று கூறி, கேட்டோரை வளைத்துக் கொண்டு, அரித்தெழும் ஓசையையுடைய இனிய வாத்தியங்கள் ஒலிக்க, கார்காலத்தே மலரும் மலராகிய குறிஞ்சியைச் சூடி, கடப்ப மாலையணிந்த முருகனைச் செவ்விதாகத் தன் மெய்க்கண்ணே நிறுத்தி வழிபட மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து மன்றுகள் தோறும் நின்று குரவைக் கூத்து அயர்வர். '[17]
திருமுருகாற்றுப்படையின் வெறியயர் களம்
'கோழிக் கொடியுடன் திருமுருகனைக் களத்திற்கு எழுந்தருள் வித்து, நெய்யுடன் வெண்சிறு கடுகையும் மெய்யில் அப்பிக் கொண்டு, வழிபடும் மந்திரத்தை உச்சரித்தபடி, சிவந்த நூலைக் கையிலே காப்பாகக் கட்டிக்கொண்டு வெண்பொரியைத் தூவி, ஆட்டின் குருதியுடன் பிசைந்த தூய வெள்ளிய அரிசியைச் சிறுபலியாக இட்டு, மஞ்சள் நீருடன் நறுமணஞ் சான்ற சந்தனம் முதலியவற்றைத் தெளித்து, செவ்வலரி முதலிய பூக்களை மாலையாகச் தொங்கவிட்டு, ஊரெங்கும் பசியும் பிணியும் நீங்குக வென்று வாழ்த்தி, நறிய புகை யூட்டி, குறிஞ்சித் தீம் பண்ணைப் பாடி, இன்னிசைக் கருவிகள் பலவும் அருவி யென ஒலிக்க, பலவகைச் செந்நிறப் பூக்களைத் தூவிச் செந்தினை பரப்பி, வெறியயர் களத்தைப் புனைந்து, ஆர வாரம் எழும்பப் பாடி மணியசைத்து வழிபடுவர்' என்ற செய்தி, குறமகள் வெறியயர்ந்தாள் என்ற நிலையில் திருமுருகாற்றுப்படையாற் பெறப்படுகின்றது.[18]
அகநானூற்றில் ஆடுகளம்
'மலைநாட்டுத் தலைவன் மார்பு செய்த காதல் நோயினைத் தாய் அறியாதவளாகித் தலைவியின் வளை நெகிழ்ந்த தன்மையைப் பார்த்துச் செயலற்ற உள்ளத் தினளாய்க் கட்டுவிச்சியை வினவ, அவள் பிரப்பரிசியைப் பரப்பி வைத்து, இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம் என்ற கூற, அதனை வாய்மையாகக் கருதி, ஓவியத்தை யொத்த அழகு புனையப்பெற்ற நல்ல மனையில், தன் மகளின், பலராலும் போற்றப்பட்ட பண்டைய அழகு முன்போற் சிறப்புற வேண்டுமென்று தெய்வத்தைப் பரவ நினைந்தாள். இணைந்த பலவாய இனிய இசைக்கருவிகள் இசைந்து ஒலிக்க, வெறியாடும் களனை இயற்றி, ஆடுதற் கமைந்த அழகிய அகன்ற பெரிய பந்தலில், வெள்ளிய பனந்தோட்டினைக் கடப்ப மலரோடு சூடி, தாளத்தோடு பொருந்த முருகக் கடவுளின் பெரும் புகழினைத் துதித்து வேலன் வெறியாடு களத்தில் கூத்தயர்ந்தான்.[19]
இச் செய்தியினை வெறிபாடிய காமக் கண்ணியார் நவில்கிறார். வெறியாட்டுப் பற்றிய சிறந்த பாடல்களைப் பாடிய சிறப்பால் இப் புலவர் இச் சிறப்பினைப் பொருத்த
முறப் பெற்றுள்ளார்.
வெறியாட்டில் வேலன்
ஐந்குறுநூற்றில் அமைந்துள்ள வெறிப்பத்து[20] என்னும் பகுதியில், தலைவியின் பொலிவற்ற தோற்றத் திற்கு முருகனே காரணம் எனக் கூறி வேலன் முருகனைப் பரவுவான்' என்றும்,[21] குறுந்தொகையில், 'மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் முருகக் கடவுளால் வந்தது என்று வேலன் கூறி விழாவயர்வான்' என்றும்[22] கூறப்படுகின்ற செய்திகளால் வேலனின் செயல்கள் விளக்க முறுகின்றன வெறியாடும்பொழுது வேலன் கழற்காயை உடம்பில் அணிந்து கொண்டு படிமக்கலத்தைத் தூக்கிக் கொண்டு முருகணங்கின் குறையென வேலன் மொழி வான்[23]. வெறியாட்டில் ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையையுடைய பிரப்பை வைத்து வழிபடுவர். [24]
சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியை அறுத்து வேலலைப் பரவுவதும் உண்டு.[25] பலவாக நிறம் வேறுபட்ட சோற்றை உடைய பலியுடன் சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று தலைவன் மார்பு செய் நோய் உள்ள பெண்ணின் நறிய நெற்றியைத் தடவி, முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பான் வேலன் என்பது குறுந்தொகைப் பாட்டொன்றால் நாம் பெறுகின்ற செய்தியாகும்.[26] இவ் வெறியாட்டில் தெய்வம் ஏறப்பெற்று அசைகின்ற அசைவு, உலாவி அசைந்து ஆடுகின்ற விறலியின் ஆட்டத்திற்கும், அரிய மணியை உடைய பாம்பின் ஆட்டத்திற்கும் ஒப்பிடப்பட்டுள்ளது. [27] ஆடுகளத்தில் மகளிர் ஆடுகின்ற ஆட்டம், தெய்வத்திற்குப் பலியாக இட்ட செழுமையாக தினைக்கதிரைத் தெரியாமல் உண்ட மயில் வெம்மையுற்று நடுங்கி ஆடுதற்கு ஒப்பிடப் படுவதும் உண்டு[28]. குறுந்தொகை,[29] அகநானூறு,[30] பட்டினப்பாலை,[31] முதலியவற்றில் வெறியாட்டம் மேவிய மகளிரின் தோற்றப் பொலிவைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.
வெறியாட்டுக் குறித்து இளம்பூரணர்
முன் குறிப்பிடப்பெற்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு இளம்பூரணர் காட்டும் உரையால் வெறியாடல் பற்றிய மேலும் சில கருத்துக்கள் விளக்கமுறுகின்றன.
'காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்க மாகிய வெறியும், அந் நிலத்துள்ளார் (குறிஞ்சி நிலம்) வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இந் நிலத்திற்குச் சிறந்தது' என்பர் இளம்பூரணர்.
-
வெய்ய நெடிதுயிரா வெற்பன் அளிநினையா
ஐய நனி நீங்க ஆடினாள் - மையல்
அயன்மனைப் பெண்டிரோடு அன்னைசொல் அஞ்சி
வியன்மனையுள் ஆடும் வெறி[32]
முடிவுரை
தெய்வங்கள், பரவி வழுபடுவார் மீது தோன்றித் தான் கூறவேண்டுவனவற்றைக் கூறும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டிலும் ஈழத்து வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் மக்களிடையே இன்றும் நிலவுவதாக அறிகிறோம்.[33] பழங்காலத்தில் மக்கள் கூத்தாட்டு நிகழும் பொழுது முருகன், வழிபடும் பூசாரியின் மேல் வந்து வெளிப்பட்டுத் தான் கூற வேண்டியவற்றைக் கூறுவான் என நம்பினர். சமய நம்பிக்கையினை ஒருவாறு உரைக்கும் இவ் வழக்கு, பண்டைய காதல் ஒழுக்கத்தின் ஒரு துறையினையும் ஒளியாமல் வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம். தோழி வெறியாட்டு எடுக்கும் பொழுதும், தலைவி மெலிந்து வாடி வேறுபட்ட நிலையில் தாய் ஐயுறும் பொழுதும், தமர் தலைவனுக்கு வரைவு மறுக்கும் பொழுதும், நொது மலர் வரைவின்போதும், கட்டுக்காணிய நின்றவிடத்தும், கூட்டம் உண்மையினைத் தாய் அறிந்தவிடத்தும் முன்னிலைப் புறமொழிகளால் அறத்தொடு நிற்பாள். எனவே, வெறியாட்டு என்பது தோழி அறத்தொடு நிற்றலுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது என்றும், தலைவி மாட்டுத் தலைவன் கொண்ட காதலைச் சத்துவம் தோன்றத் தெரிவிப்பதற்கு ஒரு வாயிலாக அமைகிறது என்றும் கூறலாம். சுருங்கக் கூறின், பண்டைத் தமிழ் மக்களின் அகத்திணை ஒழுகலாற்றின் ஒரு கூற்றினை வெறியாட்டு விளங்கவுரைத்து நிற்கிறது எனலாம்.
---------------
[1]. "The language is a mirror of their (People) minds-"Pillstleury and Meader- The Psychology of Language, P. 290
[2]. The language is the vehicle of thought.
[3]. டாக்டர் சு. வித்தியானந்தம்; தமிழர் சால்பு ப. 106.
[4]. குறுந்தொகை : 87 : 1-2.
[5]. தமிழர் சால்பு : ப, 106, 107.
[6]. தமிழ்க் கலக்களஞ்சியம்: தொகுதி 6; பக்கம் 505.
[7]. நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை - அக நானூறு உரை, கழகப் பதிப்பு: ப. 231.
[8]. திருமுருகாற்றுப்படை, அடி 290.
[9]. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை யியல்; நூற்பா 60.
[10]. தொல்: பொருள் . நூற்பா 60. நச்சி. உரை.
[11]. அகநானூறு : 22
[12]. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் : குறுந்தொகை உரை: நூலாராய்ச்சி ப. 79.
[13]. குறுந்தொகை : 23
[14]. குறுந்தொகை 53, 318
[15].
- "........................... முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி யன்ன." (குறுந்தொகை : 53)
- எறிசுறாக் கலித்த விலங்கு நீர்ப் பரப்பின்
நறிவீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறியயர் களத்தினிற் றோன்றும்." - குறுந்தொகை : 318
- அருங்கடி வேலன் முருகொடு வளை இ
அரிக்கூட் டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேள் பேணித் தரூஉப் பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை. - மதுரைக் காஞ்சி; 613-615
[19]. அகநானூறு : 5-19
[20]. ஐங்குறுநூறு - 241-250
[21]. ஐங்குறுநூறு - 249-1-2
[22]. குறுந்தொகை : 111: 1-2
[23]. ஐங்குறுநூறு : 245 : 1-3
[24]. மறிக்குர வறுத்துத் தனைப்பிரப் பிரீஇ - குறுந்தொகை : 263 : 1
[25]. சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து - திருமுருகாற்றுப்படை: 218
[26]. குறுந்தொகை : 362 : 3-5
[27]. பதிற்றுப்பத்து : 51: 10-13
[28]. குறுந்தொகை : 105 : 2-4
[29]. குறுந்தொகை : 366,
[30]. அகநானூறு : 370 : 14
[31]. பட்டினப்பாலை : 154 : 155
[32]. புறப்பொருள் வெண்பாமாலை, இருபாற் பெருந்திணை : 10.
[33]. டாக்டர் சு. வித்தியானந்தம், தமிழர் சால்பு : பக்கம் 111.
------------
4. கலித்தொகை காட்டும் மகளிர் கற்பு நெறி
சங்க நூல்களில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான கலித்தொகை, 'கற்றறிந்தா ரேத்துங் கலி' என்று ஆன்றோராற் பாராட்டப்பெறும் பெருமையுடைய தாகும். கலிப்பா வகையுட் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாடல்களைத் தன்னகத்தே கொண்டது இந்த நூல். "இச் செந்தமிழ்ப் பெருநூல் தேன்செறிந்த மொழிகளாலும் தெள்ளிய உருவகங்களாலும் இயன்ற கற்போருள்ளத்தைக் கவருந் தகைமைத்தாம். மக்கள் தம் நால்வாழ்விற்கு வேண்டிய நன்னெறிகள் பலவற்றை இடையிடையே தொகுத்தும் விரித்துஞ் சுட்டிச் செல்வதும் இந் நூலின் சிறப்புக்களில் ஒன்றாம்"[1] என்பர்.
பிற்றைநாட் புலவர்களாலும் கலித்தொகை போற்றப் பட்டது என்பதனைப் பின்வரும்
பாடல் கொண்டு அறியலாம்.
-
திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்
விருத்தக்க கவிவளமும் வேண்டேம் - திருக்குறளோ
கொங்குவேள் மாக்கதையோ கொள்ளேம் நனியார்வேம்
பொங்குகலி யின்பப் பொருள்.
இனி, கலித்தொகை காட்டும் மகளிர் கற்பு நெறியினைக் காண்போம்.
முதலாவதாகக் கற்பு எனப்படுவது யாதென்று நோக்குவோம். உரையாசிரியர் என்றே பெருமையுடன் அழைக்கப்பெறும் இளம்பூரணர், 'கற்பு என்பது - மகளிர்க்கு மாந்தர் மாட்டும் நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது' என்று பொருள் விரித்துள்ளார்[2]. இளம்பூரணரே பிறிதோரிடத்தில், 'கொடுப்பக் கொள்வது கற்பு என்றமையால், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும், களவு வெளிப்படாத வழி யும், மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளப் புணர்ச்சியான் உரிமை பூண்ட வழியும் கொள்ளப்பெறும் எனக் கொள்க' என்று குறிப்பிட்டுள்ளார்.[3] நச்சினார்க்கினியர் கற்பின் இலக்கணத்தை விரிக்குமிடத்து, 'அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுக வெனவும் இதுமுது குரவர் கற்பித்தலானும், 'அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும், 'ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்' (தொல். பொ. 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின்கண் ஓரையும் நாளுந் தீதென்று அதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது ஒத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக்கொண்டு துறவறத்திற் செல்லுந்துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று" என்று நயம்படக் கிளத்தியுள்ளார்.[4] கற்பியவில் இவ்வாறு பொருள் உரைத்த நச்சினார்க்கினியர், பொருளியலில், 'கற்பாவது, தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள்' என்று குறிப்பிட்டுள்ளார்.[5]
தொல்காப்பியனார் கற்பைப்பற்றிக் கூறுவனவற்றைத் தொகுத்துப் பேராசிரியர் மு. இராகவைங்கார் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்[6]:
"கற்பாவது - கொள்ளுதற்குரிய தலைவன், வேள்விச் சடங்கொடு கூடத் தலைவியை அவள் பெற்றோர் கொடுப்பக் கொள்ளுதலாம்." (142)
கொண்டானிற் சிறந்த தெய்வமின்றெனவும், அவனை இன்னவாறு வழிபடுக எனவும், இருமுது குரவர் (பெற்றோர்) கற்பித்தலாலும், அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் கடவுளர் - இவர்களிடத்து ஒழுகும் ஒழுக்கத்தைத் தலைமகன் கற்பித்தலாலும், வேதத்தும் சடங்கினும் விதித்த சிறப் பிலக்கணங்களைக் கற்பித்துக் கொண்டு, துறவறத்துச் செல்லுந்துணையும் இல்லற நிகழ்த்துதலாலும், கொண்ட தலைவனை இன்னவாறு பாதுகாப்பா யென்றும், அவற்கு நீ இன்னவாறு குற்றேவல் செய்தொழுகென்றும் அங்கியங்கடவுள் சான்றாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலாலும் 'கற்பு' எனப் படுவதாயிற்று' என்பர்.
பாலைக் கலியின் முதற்பாடலிலேயே மகளிர் தம் கற்புச் சிறப்பு சுட்டப்படுவதனைக் காணலாம்[7]. பொருள் தேடும் முயற்சி மேற்கொண்டு பிரியக் கருதிய தலை மகனைத் தோழி அவன் தலைமகளை விட்டுப் பிரியா திருப்பதற்கு ஏதுக்கள் சிலவற்றைக் காட்டி நிற்கிறாள். 'மறப்பரும் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந் தனீர்' என்று சாடுகின்றாள். 'தம் கைப் பொருள்களைப் பிறர்க்கு ஈந்து தீர்த்துவிட்டுத் தாம் வந்து நம் பால் இரந்து நிற்பவர் சிலர்; அத்தகையோர்க்கு நாம் இல்லையெனச் சொல்லி வழங்காமற் போவது இழிவன்றோ?' என்று எண்ணி, மலை பல கடந்து செல்லவும் ஒருப்பட்டனை. அவ்வாறு மலை பல கடந்து தேடிவரும் பொருள் தான், பொருளால் பெறும் பயனை உனக்குத் தருமோ? நிலை பெற்ற கற்பினையுடையவளான இவள், நீ பிரிந்தால் உயிர் வாழாது இறந்தொழிவாளே . இவள் மார்பைத் தழுவியபடியே இவளை வாழச்செய்து பிரியாதிருத்தலன்றோ உண்மையான செல்வம் ஆகும்" என்று தலைமகனைத் தெருட்டினாள் தோழி,
-
தொலைவாகி இரந்தோர்க்கொன் றீயாமை இழிவென
நிலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ
நிலை இய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்
முலையாகம் பிரியாமை பொருளாயின் அல்லதை.[8]
தலைவனின் துன்பத்திற்குத் துணையாக நிற்கத் தலைவி பெரிதும் விருப்புகின்றாள். எனவே,
-
துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு[11]
இடைச்சுரத்திடை முக்கோற்பகவரைக் கண்டு, உடன் போக்கு ஒருப்பட்டுச் சென்ற தலைவி குறித்துச் செவிலித் தாய் உசாவிய போதும், முக்கோற்பகவர், தனைவி இறந்த கற்பினாள் '[12] என்றும், அவளுக்கு ஏதும் துன்பம் விளைவிக்காதீர்கள்' என்றும் குறிப்பிட்டிருக்கக் காணலாம்.
'உலகமே வறட்சியால் துயருற்ற காலத்தும், மழையைப் பெய்விக்கும் கற்புச் சக்தி யுடையவளான இவன் மனைவி' என்று கலித்தொகை காட்டும் தலைவி ஒருத்தி விளங்குகின்றாள்:
'வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்.'[13]
மேலும் தலைவனும் தலைவியும் இளமைச் செவ்வியும் காமவிருப்பமும் ஒருங்கே பெற்றவர்களாதலின், சாதாரணப் பொருட் செல்வத்தினை விரும்பி இவற்றைத் துறத்தல் கூடாது என்றும், வாழ்நாள் வரையிலும் இணைந்தும் பிணைந்தும் நிற்றலே வாழ்வாவது என்றும், வறுமை காரணமாக ஒரு துண்டு ஆடையே உடுப்பவராக வாழ்ந் தாலும், அதனைப் பொருட்படுத்திக் கவலையில் ஆழாது, ஒன்றிக் கலந்து வாழ்பவரின் வாழ்க்கையே சிறந்த இன்ப வாழ்க்கையாகும் என்றும், காரணம், கழிந்துபோன இளமையை மீட்டுத் தருவதென்பது எவருக்கும் அரிதான செயலாகும் என்றும் தோழி பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவனிடம் கூறி, இல்வாழ்க்கையின் கற்புநெறியின் இனிய பெற்றியினை எடுத்துரைக்கின்றாள் :
-
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ ? உளநாள்
ஒரோ ஒகை தம்முள் தழீஇ ஒரோஓகை
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ
சென்ற இளமை தரற்கு.[14]
-
சிறுகுடி யீரே சிறு குடியீரே
வள்ளிகீழ் வீழா; வரைமிசைத் தேன்தொடா
கொல்லை குரல் வாங்கி ஈனா மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்.[15]
-
காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்.[16]
"நல்ல பெண்கள் நாணத்தால் தலை கவிழ்வது போலத் தினைக்கதிர்கள் முற்றித் தலை சாய்ந்துள்ளன' என்கிறார் கபிலர் :
-
............................. அமர்க்கண்
நகைமொழி நல்ல வர்நாணும் நிலைபோல்
தகை கொண்ட ஏனல். [17]
-
.................... நம்ந கர்
அருங்கடி நீவா மை கூறின் நன்றென
நின்னொடு சூழ்வல் தோழி நயம்புரிந்து
இன்ன து செய்தாள் இவளென.
மன்னா வுலகத்து மன்னுவது புரைமே,[18]
மருதனிள நாகனார் ஊடியும் கூடியும் தலைவன் தலைவியர் போகம் நுகரும் மருதத்திணை யொழுக்கத்தைப் பாட வருகின்றார். காதலரிருவரும் விரும்பும் திருமண நாளன்றிரவு, தலைவி ஆடைக்குள் ஒடுங்கியவளாக, காதல் கொண்ட, மருண்ட மான் நோக்கினை யுடையவளாக விளங்குகின்றாள். வேதம் வல்ல அந்தணன், இருவரையும் எரியை வலம் வருமாறு சொல்ல, தலைவனும், தலை கவிழ்ந்தவாறு தலைவியும் வலம் வருவர்' என்று கற்பு நெறியில் தலைப்படும் காதலர் காட்சியின் மாட்சியினை விளக்கிக் காட்டுவர்:
-
காதல் கொள் வதுவைநாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர்கொள் மான்நோக்கின் மடந்தைதன் துணையாக
ஓத்துடை அந்தணன் எரிவலம் செய் வான்போல் [19]
-
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்குப் பெயல் போல் யான்
செலின் நந்திச் செறின்சாம்பும் இவன் என்னும் தகையோதான். [20]
-
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்புக்
கலங்கினர் பலர். [21]
-
பயிலிதழ் மலர் உண்கண்
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்துற்றுத்
தாதெரு மன்றத்து அயர்வர் தழுஉ
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள் [22]
-
விலைவேண்டார் எம்மினத் தாயர் மகளிர்
கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின்
முலையிடைப் போலப் புகின் [23]
'அதோ ஏற்றின்மீது கிடக்கின்ற அவ் ஆயன் இவள் தன் தோளின் மீது கிடப்பான். அக் கபிலையைத் தழுவுகின்றான் இக் காரிகையை உறுதியாகக் கூடுவான். அச்செவ்-வேற்றினத் தழுவலுறுகின்றான், இத் தலைவியின் மூங்கிற்றோள்களில் துயிலப் பெறுவான்" என்று பல படித்தாகவெல்லாம் ஆயர் மகளிர் தமக்குள்ளே பேசிக் கொள்வர்:
-
அவ்வழி முள்ளெயிற்று ஏர் இவளைப்பெறும் இதோர்
வெள்ளேற்று எருத்து அடக்குவான்.
ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும் வைமருப்பின்
காரி கதனஞ்சான் கொள்பவன் - ஈரரி
வெரூஉப்பிணை மான்நோக்கின் நல்லாள் பெறூஉம்; இக்
குரூஉக்கண் கொலையேறு கொள்வான் - வரிக்குழை
வேயுறழ் மென்றோள் துயில் பெறும் வெந்துப்பின்
சேஎய் சினனஞ்சான் சார்பவன் - என்றாங்கு
அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால்
நாள்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி. [24]
-
நேரிழாய் கோளரிதாக நிறுத்த கொலையேற்றுக்
காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
ஆர்வுற்று எமர்கொடை நேர்ந்தார் அலரெடுத்த
ஊராரை யுச்சி மிதித்து.[25]
’ஆயமகன் கொண்ட காதல் தவறாது அன்னையால் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில் ஆயமகளின் தாயும் அவ்வாறான காதல் நெஞ்சம் வாய்ந்தவளே' என்று உரைக்கின்றாள் தோழி:
-
ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்
நின்வெய்ய னாயின் அவன்வெய்யை நீயாயின்
நின்னைநோ தக்கதோ இல்லைமன் நின்நெஞ்சம்
அன்னைநெஞ் சாகப் பெறின்.[26]
-
வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணந் தான் அறியும் ஆயின் எனைத்துந்
தெருமரல் கைவிட்டிருக்கோ அலர்ந்த
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே.[27]
தலைவன் பிரிவால் கலங்கித் தவிக்கும் தலைவி, 'இல்லத்திலுள்ள நீர் கலங்கியிருந்தால் அது இருக்கும் பாத்திரத்துள், சிறிது தேற்றாவின் விதையைத் தேய்த் ததும், அந்நீர் தெளிந்து விடுவது போல், மார்பழகு நிறைந்த மாண்பார் தலைவனைச் சேர்ந்ததும் தெளிவுற்று நலம் பெற்றுவிடுகிறாள் என்பதும் நெய்தற் கலிப்பாடல் ஒன்று கூறும் செய்தியாகும்.
-
கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளிந்து நலம் பெற்றாள்
நல்லெழில் மார்பனைச் சார்ந்து.[28]
-----
[1]. கலித்தொகை; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு ; பதிப்புரை. ப. 5, 6.
[2]. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; இளம்பூரண ம்; பொருளியல். நூற்பா, 51 உரை
[3]. தொல்காப்பியம்; பொருளதிகாரம்: இளம்பூரணம்; கற்பியல்; நூற்பா 1, உரை.
[4]. தொல்காப்பியம்; பொருளதிகாரம். நச்சினார்க் கினியம்; கற்பியல், நூற்பா 1, உரை
[5]. தொல்காப்பியம்; பொருளதிகாரம்: நச்சினார்க் கினியம்; பொருளியல், நூற்பா 52, உரை
[6]. தொல்காப்பியம்; பொருளதிகார ஆராய்ச்சி : ப. 84.
[7]. பாலைக்கலி; 1 : 9-10.
[8]. கலித்தொகை; பாலைக்கலி; 1: 11-14
[9]. கலித்தொகை; பாலைக்கலி; 1: 17.
[10]. கலித்தொகை; பாலைக்கலி; 1 : 21.
[11]. கலித்தொகை; பாலைக்கலி; 5: 10-11.
[12]. கலித்தொகை; பாலைக்கலி; 8 . 22.
[13]. கலித்தொகை; பாலைக்கலி; 16.20.
[14]. கலித்தொகை; 17 : 5-22
[15]. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 3 : 11-14.
[16]. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 3 : 15-19.
[17]. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 4 : 1-3.
[18]. கலித்தொகை; குறிஞ்சிக்கலி; 18 ; 16-20.
[19]. கலித்தொகை; மருதக்கலி; 4 : 3-5.
[20]. கலித்தைாகை; மருதக்கலி: 13 :19-20.
[21]. கலித்தொகை; முல்லைக்கலி; 2:21-24
[22]. கலித்தொகை; முல்லைக்கலி; 3 : 60-64
[23]. கலித்தொகை; முல்லைக்கலி; 3 ; 71-73
[24]. கலித்தொகை; முல்லைக்கலி; 4:18. 28.
[25]. கலித்தொகை; முல்லைக்கலி; 4; 73.76.
[26]. கலித்தொகை; முல்லைக்கலி;7: 20-23
[27]. கலித்தொகை; முல்லைக்கலி; 14; 15-21.
[28]. கலித்தொகை; நெய்தற்கலி ; 25; 64-66.
-------------------
5. நாடக இலக்கியம்
-
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று. (திருக்குறள் ; 332)
சங்க காலத்தில்
சங்க காலத்தில் நாடகத் தமிழ் நல்ல நிலையில் இருந்தது. இயல் இசை ஆகிய இரண்டன் சேர்க்கையால் உண்டாகும் நாடகத் தமிழில் ஈடுபட்ட கலைஞர்கள் 'கூத்தர்' என வழங்கப்பெற்றனர். ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறவந்த தொல்காப்பியனார்,
-
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும். (தொல். பொருள்; 88 : 3-6)
-
யானறி குவனது கொள்ளு மாறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே" (புறநானூறு ; 109, 14-18:)
மேலும், குறிஞ்சிக்கலியின் பாடல்கள் பல நாடக நயம் நிறைந்து காணப்படுகின்றன.
-
'கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்'
-
'காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்'
-
'சுடர்த்தொடீ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலிற் சிதையா'
-
'திருந்திழாய் கேளாய் நம் ஊர்க்கெல்லாஞ் சாலும்"
சிலப்பதிகார காலத்தில்
சிலப்பதிகாரம் தமிழின் முதற்பெரும் - தனிப்பெரும் காப்பியமாகும். இது 'முத்தமிக் காப்பியம்' என்றும் வழங்கப்பெறும், சிலப்பதிகாரத்தின் கலைச்செல்வி, 'நாடக மடந்தை' என்று குறிப்பிடப்படுகிறாள்.
எனவே, சிலப்பதிகார காலத்தில் நாடகம் என்ற சொல் நாட்டியத்தையும் குறித்து நின்றதனை அறியலாம். சிலப் பதிக்கார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தம் உரையில், 'நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலிய தொன்னூல்களும் இறந்தன. பின்னும் முறுவல். சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்' என்று மறைந்த நாடகத் தமிழ் நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடியார்க்கு நல்லார் தம்முடைய காலத்தில் வழங்கிவந்த நூல்களாகத் தெரிவித்துள்ள இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரத சேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலியனவுங்கூட இக்காலத்துக் கிடைக்கவில்லை.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பெறும் 'நாடக மடந்தையர் ஆடரங்கு' ஒரு முக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்னும் முத்திறத்தவான திரைச் சீலைகள், தூண் நிழல் அரங்கினுள் விழுந்து நாடகத்தில் பங்கு கொள்வோரை மறைத்து விடாமலிருக்க விளக்குகளை அமைத்தல் முதலிய செய்திகள் எல்லாம், நாடகக் கலை சிலப்பதிகார காலத்தில் சிறப்புற்றிருந்த நிலையினைக் காட்டும். கூத்தச் சாக்கையன் ஆடிய கூத்தினை,
-
திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படு பறை ஆர்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது மணிக்குழ லவிழாது
உமையவ ளொருதிற னாக வோங்கிய
இமையவ னாடிய கொட்டிச் சேதம்"
(சிலப்பதிகாரம், நடுகற்காதை : 67-75.)
இடைக் காலத்தில்
'நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து' என்று மணிவாசகப் பெருந்தகையார் தம் திருவாசகத்தில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இங்கு 'நாடகம்' என்ற சொல், நடித்தல், விளையாட்டு என்ற பொருளில் வந்துள்ளது. சீவகசிந்தாமணியில்,
-
பண்கனியப்பரு கிப்பயன் நாடகம்
கண்கனியக் கவர்ந்துண்டு (சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம்-230.)
மேலும், உரையாசிரியர் என வழங்கப்பெறும் இளம் பூரண அடிகள், 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்' என்னும் நூற்பாவிற்கு உரை விரிக்கும்பொழுது,
”நாடக வழக்காவது, சுவைபடவருவனவெல் லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத்தாலும், குலத் தாலும், ஒழுக்கத்தாலும், அன்பினாலும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப் பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவன வெல்லாம் ஒருங்குவந்தனவாகக் கூறுதல்"
என்று குறிப்பிட்டுள்ளமை நாடக வழக்கின் நயத்தினை நன்கு காட்டும் .
ஆயினும், இக்காலத்தே நாடகங்கள் மிகப் பலவாக வழங்காமல் அருகியே போயிருக்க வேண்டும். காரணம், இக்காலத் தொழுந்த நாடக நூல்கள் ஒன்றேனும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் படிப்பதற்கென்று நாடகங்கள் எழுதப் பெறவில்லை என்பது தெரியவருகிறது. நடிப்பதற்கென்றே நாடகங்கள் எழுதப்பெற்று, அவையும் நாடகக் குழுவினர் மட்டுமே எழுதிப் படித்துக் கொள்ளும் நிலையில் இருந்தன என்பதனை உணரலாம்.
பிற்காலச் சோழர் காலத்தில்
இடைக்காலத்தே நலிந்து போன நாடகக் கலைக்குப் பிற்காலச் சோழ மன்னர்கள் புத்துயிரூட்டிப் புரந்தனர். திருக்கோயில்களில் திருவிழாக் காலங்களில் நாடகங்கள் நடிக்கப் பெற்றனவாக நாம் அறிய வருகிறோம். முதலாம் இராஜராஜ சோழ மன்னன் காலத்தே தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் இராஜராஜேசுர நாடகத்தை ஆட ஏற்பாடு செய்தான் என்று கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. அக் கல்வெட்டுப் பகுதி வருமாறு:
"............. உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வர முடையார் கோயிலிலே ராஜராஜேசுவர நாடக மாட நித்தம் நெல்லுத் தூணியாக நிவந்தஞ் செய்த நம்வாய்க் கேழ்விப்படி சாந்திக்கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றனான விஜய ராஜேந்திர ஆசார்யனுக்கு இவன் வமிசத்தாருக்கும் காணியாகக் கொடுந்தோமென்று ஸ்ரீ காரியக் கண்காணி செய்வார்க்கும் கரணத்தர்களுக்கும் திருவாய் மொழிந்தருளி திருமந்திர ஓலை ......... வந்தமை யிலும், கல்வெட்டியது. திருவாலந் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆ சா ரி ய ன் உடையார் வைய்கா சிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேசுவர நாடகமாட, இவனுக்கும் இவன் வம்சத்தாக்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கும் இராஜகேசரியோடொக்கும் ஆடவலானென்னும் மரக்காலால் நீத்த நெல்லுத் தூணியாக நூற் றிருபதின் கலநெல்லும் ஆண்டாண்டுதோறும் தேவர் பண்டாரத்தெய் பெறச் சந்திரா தித்தவற் கல்வெட்டித்து."
இந் நாடகம் நெடுங்காலம் நஞ்சைத் தரணியிற் நடை பெற்று வந்ததென்றும், தஞ்சையை மராட்டியர் கைப் பற்றி ஆளத் தொடங்கிய காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டது என்றும் வரலாற்றாராச்சி அறிஞர்கள் குறிப்பிடுவர்.
முதலாம் குலோத்துங்க சோழன் காலத்துத் திருப் பாதிரிப்புலியூரில் உள்ள பாடலிபுரீசுவரம் கோயிற் கல்வெட்டு 'பூம்புலியூர் நாடகம்' அக்கோயிலில் நடைபெற்று வந்த செய்தியினை எடுத்துரைக்கின்றது. இவ்வாறான இன்னும் பல செய்திகளைக் கொண்டு பிற்காலச் சோழர்கள் காலத்தில் நாடகக் கலை பெற்றிருந்த நல்ல நிலையினை அறியலாம்.
பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்
சீகாழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், என்னயினாப் பிள்ளையின் முக்கூடற்பள்ளு நாடகம், திரி கூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய நந்தன் சரித்திரம், மாரிமுத்துப் பிள்ளையின் நொண்டி நாடகம் முதலியன நாடக நயஞ்சான்ற தமிழ் நாடக நூல்களாம்.
பெங்களூர் அப்பாவு பிள்ளை இயற்றிய சத்திய பாஷா அரிச்சந்திர விலாசம், காசி விசுவநாத முதலியார் இயற்றிய டம்பாச்சாரி விலாசம் முதலியன சென்ற நூற்றாண்டில் எழுந்த குறிப்பிடத்தக்க நாடகங்கள், பார்சி நாடகங்கள் நாடகத்துறையில் ஒரு நல்ல முன்னேற்றத்தினைத் தந்தன.
நாடகத்தமிழ் வளர்த்த நல்லவர்கள்
தமிழ் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள் (1867 -1922) திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து தம் இருபத்து நான்காவது வயதில் நாடகத்துறையிற் புகுந்து, வேடம் புனைந்து நடித்து, பின் துறவு மேற்கொண்டு, வண்ணம், சந்தம் முதலியன பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்து, பல சபாக்களில், நடிப்பாசிரியராக விளங்கி, ஓரிரவிலேயே நான்கு மணி நேரம் நடைபெறக்கூடிய நாடகம் முழுவதனையும் அடித்தல் திருத்தல் இன்றிப் பாடல்கள் வசனங்களோடு எழுதி முடிக்கும் திறன் பெற்றவராய் விளங் கினார். தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வங்கள் எனக் சொல்லத்தகும் நாடகங்கள் பலவற்றை இயற்றித் தமிழ் நாடகத் தலைமை-யாசிரியராகக் கொள்ளத் தக்கவராகின்றார். நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் நீதித்துறையில் உயர் பதவி வகித்தும், நாடகத் துறையில் ஈடுபட்டுத் தாமே மேடையேறி நடித்து 'கூத்தாடிகள்' என்று நாடகக் கலைஞர்கள் அழைக்கப்பட்ட இழிநிலையினைப் போக்கிச் சமுதாயத்தில் அவர்களுக்கு ஓர் உயர்ந்த தகுதியினைப் பெற்றுத் தந்தார். ஆங்கில நாடகங்கள் பலவற்றைத் தழுவித் தமிழில் நாடகங்கள் எழுதியும், தாமாகவே பல நாடகங்களை எழுதியும் நாடகப் பேராசிரியராக விளங்கினார் இவர். இவ்விருவரும் இந் நூற்றாண்டில் நாடக இலக்கியமும் கலையும் வளர்த்த நல்ல தமிழ்ச் சான்றோர்கள் ஆவர், இவர்கள் ஆற்றிய தொண்டின் வித்து முளைத்து, வளர்ந்து, ஆல்போல் தழைத்து, தமிழ் நாடகக் கலையாக நிறைந்தொளிர்கின்றது.
----------
6. சைனரும் தமிழ்நாடும்
சைவம், வைணவம் என்று இன்றளவும் தமிழ்நாட்டில் சிறப்புறத் துலங்கிவரும் சமயம் இந்நாட்டிலேயே தோன்றிக் கிளைத்து வளர்ந்து நின்று நிலவிவரும் பழம்பெரும் சமயங்கள் எனலாம். அவ்வாறின்றி வட நாட்டினின்றும் தென்னாடு போந்து நந்தமிழ் நாட்டில் புகுந்த சமயங்களாகச் சமணமும் பௌத்தமும் விளங்குகின்றன. புத்தர்பிரான் பொலிந்த காலத்திலும் அவர்க்குச் சற்று முன்பும் வாழ்ந்தவராகக் கருதப்படும் வர்த்தமானர், தமக்கு முன் அருக சுமயத் தலைவர்களாகத் திகழ்ந்த 23 தீர்த்தங்கரர்களின் சமயக் கோட்பாடுகளை விளக்குபவராகத் தம்மைக் கூறிக் கொண்டார். இவருடைய காலம் கி.மு. 559 - கி. மு. 527 என்பர். கி.மு. 776 இல் நிர்வாண நிலை எய்திய பார்சுவ நாதர் அருக சமயத்தின் ஆதி முதல்வர் என்பர். ஆயினும் வர்த்தமானர், பார்சுவநாதர் எனும் இப்பெரியார்களுக்கு முன்னரேயே இந்தியாவில் இருந்த பழஞ் சமயம் சமண சமயம் என்பது உறுதி. யசுர் வேதத்திலேயே இடப தேவர், அஜாத நாதர், அரிட்ட நேமி முதலான தீர்த்தங்கரர்களின் பெயர்கள் காணப்படுவதனால் இச்சமண சமயத்தின் பழமை அறியப்படும்.
பேராசிரியர் அ. சக்கரவர்த்தி நயினார் என்பவர், நீலகேசி நூலின் முன்னுரையில் வான்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்திலேயே இராமன் தென் திசைக்கண் போந்த போது சமண சமயத்தவர் வாழ்ந்த ஆசிரமங்களைக் கண்டான் என்று கூறப்பட்டிருப்பதனால், பத்திரபாகு முனிவருடன் சந்திர குப்த மெளரியன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் தென்னாடு புகுந்து மைசூரைச் சேர்ந்த சிரவண வேள் குளத்தில் தங்கி வடக்கிருந்து (சல்லேகனம்) உயிர் நீத்தான்; அதனால் அப்போது தான் சமண சமயம் தென்னாட்டில் புகுந்தது எனும் செய்தி தவறென்பர்.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி ஓச்சிய காங்க வமிச மன்னர்களும், தமிழ் இலக்கிய வரலாற்றில் - தமிழ் நாட்டு வரலாற்றில் இருண்ட காலப் பகுதியெனப் கூறப்படும் சங்க மருவிய காலத்தில் அரசாண்ட களப்பிர மன்னர்களும் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெரிதும் இச் சமயத்தை ஆதரித்தனர் என்றும் வரலாற்று வழியே அறிய முடிகின்றது.
சமண சமயத்தின் அடிப்படையான சில கொள்கைகள் இங்கு வாழ்ந்த தமிழர்கள் உள்ளத்தை இறுகப் பற்றின. முதலாவதாகச் சமணசமயம் உயிர்க் கொலையினை வெறுத்தது. தமிழ்நாட்டில் அக்காலையில் வேள்வி செய்தலும், வேள்வியில் உயிர்ப்பலி வழங்கலும் ஆரியர் கூட்டுறவால் நிலவிவந்தன. சமணர்கள் இதனைப் பலமாக எதிர்த்தனர். மேலும் பிறவுயிர்கட்குத் துன்பம் இழைக்கக் கூடாது என்றும், எவ்வுயிர்க்கும் அருள் காட்ட வேண்டும் என்றும், கொல்லாமையை நோன்பாகக் கொள்ள வேண்டும் என்றும், புலால் உண்ணுதல் எவ்வாற்றானும் போற்றப்பட வேண்டாத தீய பழக்கம் என்றும் சமணர்கள் போதித்தனர். இக் கொள்கைகள் எல்லாம் தமிழர்க்கு உவப்பாயமைந்தன.
மேலும் சமண முனிவர்கள் தீயன பயக்கும் பொய்யினைப் பேசக்கூடாது என்றும், பிறர் பொருளைக் கனவிலும் கருதலாகாது என்றும் பிறப்பிற்குப் பெருங் காரணமாக இருக்கும் அவாவினை அகற்ற வேண்டும் என்றும், மகளிர் மோகத்தை விழையாமை வேண்டும் என்றும், பிறரைப் பழித்தலும் பிறர்மாட்டுச் சினங் கொள்ளுதலும், கடுஞ்சொல் கூறுதலும் கடியப்பட வேண்டும் என்றும், நாவடக்கத்தினை நனிபோற்றி மேற் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.
இவ்வாறு நல்வாழ்விற்குரிய நல்ல பல கொள்கைகளைச் சமண சமயம் கொண்டிருந்ததனால் தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழர்களுக்கு இக்கொள்கைகளில் பிடிப்பும் பிணைப்பும் ஏற்பட்டன. மற்றொரு சிறப்பியல் பினையும் சமண சமயத்தாரிடம் காணலாம். எந்தெந்த நாட்டில் அவர்கள் புகுந்து கலந்து வாழ்ந்தார்களோ அவ்வந் நாட்டில் தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்புவதற்கு அவ்வந்நாட்டில் வழங்கிய மொழிகளையே கையாண்டனர். தமிழ்நாட்டிற் போந்த சமணர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டதோடு அமையாது அம்மொழியினை வாழ்வித்து வளப்படுத்தவும் முனைந்தனர் . முதற்கண் சமயப் பிரசார நோக்கத்திற்காகத் தமிழ் மொழியினைப் பயிலத் தொடங்கிய அவர்கள் பின்னர் அம்மொழியில் இலக்கிய இலக்கணம் முதலாய துறைகளில் நூல் பல எழுதத் தலைப்பட்டனர்.
இவர்கள் மக்களிடையே தொண்டு செய்து அவர்கள் நம்பிக்கையினையும் அன்பினையும் முதலாவதாகப் பெற்றனர். பிறப்பினால் இவர்கள் உயர்வு தாழ்வு பாராட்டாமல் எல்லா மக்களையும் சமமாக எண்ணித் தொண்டு செய்தனர், இரண்டாவது, அஞ்சியவர்க்கு அடைக்கலந் தந்து போற்றினர். தென்னார்க்காடு மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றின் தென்கரையில் ஜம்பை என்று இன்று வழங்கும் கிராமம், அந்நாளில் வீரராசேந்திரபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. அங்குச் சோழதுங்கன் ஆள வந்தான் அஞ்சினான் புகலிடம் என்றோர் அடைக்கலப் பள்ளி இருந்ததாகச் சாசனம் ஒன்று கூறுகின்றது. இது போன்றே வடார்க்காடு மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் உள்ள கீழ்மின்னல் கிராமத்திலும், போளூர் தாலுக்கா வடமகாதேவி மங்கலம் என்னும் ஊரிலும் காணப்படும் கல்வெட்டுகள் கொண்டு, அவ்வூர்களில் இத்தகைய 'அஞ்சினான் புகலிடங்கள்' இருந்தனவாக அறியலாம்.
மூன்றாவதாக, மக்கள் பிணி நீக்கும் பெரும் பணியிலும் சமணர் ஈடுபட்டனர். மருத்துவக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த இவர்கள் மருந்துத்தானமும் மக்கட்கு வழங்கினர். நான்காவதாகச் சாத்திர தானத்தினை மேற்கொண்டனர். கல்விக்கண் வழங்கும் திருப்பணியில் இவர்கள் ஈடுபட்ட னர். மேலும் ஈண்டொரு சிறப்புச் செய்தியினையும் குறிப்பிட வேண்டும். ஏடும் எழுத்தாணியுமே நிலவிய அந் நாளிற் செல்வம் படைத்த சமணர்கள் தங்கள் சமய நூல்களைப் பல படிகள் எழுதுவித்து அப்படிகளைத் தக்கார் பயிலத் தானம் செய்தனர் என அறிகிறோம். கி. பி. பத்தாம் நூற்றாண்டில் கன்னட நாட்டில் இருந்த சமண சமயத்தைச் சார்ந்த அந்திமுப்பெ என்னும் பெண்மணி, சாந்தி புராணம் எனும் சமண சமய நூலினைத் தம் செலவில் ஆயிரம் படிகள் எழுதுவித்துத் தானம் செய்ததாக ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 'சமணமும் தமிழும்' எனும் நூலில் (பக்கம்: 44) குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சமண முனிவர்கள் அந் நாளில் தமிழ் நாட்டு மக்களிடையே அவர்தம் பயன் கருதாத் தொண்டின் சிறப்பினால் ஓர் உயர்நிலை பெற்று வாழ்ந்தனர்.
இவர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் சிறப்புடையன என்பது முன்னமே குறிப்பிடப்பட்டது. தமிழின் முதல் இலக்கண நூல் தந்த தொல்காப்பியனாரே சைனர் என்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களது துணிபாகும், இக் கூற்றுத் தக்க காரணங்கள் காட்டப் பெற்று தமிழறிஞர் ஒரு சிலரால் அந்நாளிலும் பின்னாளிலும் மறுக்கப்பட்டது. ஆயினும், இந் நூலில் சமண சமயக் கொள்கைகள் சில காணப்படுகின்றன என்று காட்டுவர். உயிர்களை அறுவகையாகப் பிரித்துக் காணும் மரபியல் நூற்பாவினை எடுத்துக்காட்டாகவும் கூறுவர், திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறிச் சில சான்றுகளைக் காட்டுவர். இது போன்றே சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் கௌந்தியடிகள் வாயிலாக இளங் கோவடிகள் சமண சமயக் கொள்கைகளை விளக்குவதனால் சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் என்றும் ஒரு சிலர் கூறுவர். பதினெண் கீழ்க்கணக்கு நூலுள் ஒன்றாகிய நாலடியார் எண்ணாயிரம் சமண முனிவர்களின் படைப்பு எனக் கூறும் பழைய கதையும் உண்டு. எஞ்சிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு, ஏலாதி, சிறு பஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது, அறநெறிச் சாரம் முதலான நூல்கள் சமண சமயப் புலவரால் எழுதப் பட்டன என்பர். இந் நூல்களைப் பற்றிய விரிவான ஆய்வு ஈண்டு வேண்டப்படுவதில்லை. ஆயினும் இந்நூல்களில் சமண சமயக் கோட்பாடுகளின் எதிரொலி காணப்படு கின்றது என்பது மட்டும் உண்மையாகும்.
இனி, சைனப் பெருமக்கள் தமிழ்மொழிக்கு ஆற்றி யுள்ள தொண்டினைச் சற்று மேலோட்டமாகக் காண்போம்.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர் என்னும் சைன முனிவரால் இயற்றப் பட்டது. இச் சீரிய காப்பியம் நாமகள் இலம்பகம் முதலாக முத்தியிலம்பகம் ஈறாகப் பதின் மூன்று பிரிவுகளையும் 3145 பாக்களையும் கொண்டு உள்ளது. சமணர்கள் இந்நூலி னைப் பாராயணப் பனுவல் நூலாகக் கொள்வர். சீவகன் மகளிர் எண்மரை மணக்கும் செய்தி இந்நூலிற் கூறப்படு வதனால், இந் நூலினை மண நூல் என்றும் வழங்குவர்.
சான்றோர் தன்மைகளாக நாலடியார்,
-
கள்ளர் கள்ளுண்ணார் கடிவகடிந் தொரீஇ
எள்ளிப் பிறரை யிகழ்ந்துரையார்- தள்ளியும்
வாயிற் பொய்கூறார் வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர் (நாலடியார்; 157)
-
குழற்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவ னிருப்பமற்றோர்
நிழற்றிகழ் வேலினானை நேடிய நெடுங்கணாளும்
பிழைப்பிலாட் புறந்தானும் குரைவரப் பேணல் செய்யாது
இழுக்கினா ரிவர்கள் கண்டாய் இடும்பை நோய்க் கிரைகளாவார்.
(சீவகசிந்தாமணி 252)
நட்பிடைக் குய்யம்வைத்தான் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான்
கட்டழல் காமத்தீயின் கன்னியைக் கலக்கினானும்
அட்டுயி ருடலம் தின்றான் அமைச்சனா யரசுகொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முட் குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.
(சீவகசிந்தாமணி 253)
பெருங்கதை, பைசாச மொழியிற் குணாட்டியர் என்பவரால் இயற்றப்பட்ட பிருகத் கதை. வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அம்மொழியினின்று தமிழ்ப்படுத் தியவர் கொங்குநாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்த கொங்கு வேளிர் என்பவராவர். ஒன்பான் சுவையும் ஒருங்கே அமையப் பெற்றுப் பல சமண சமய வழக்கு களையும் தன்னகத்தே கொண்டுள்ள நூல் இஃதெனலாம்.
இலக்கணத் துறை சைனராலேயே பெரிதும் வளம் பெற்றதெனலாம். தொல்காப்பியனாரே சமணம் என்ற கூற்று, சரியோ தவறோ, நன்னூல் என்று பிற்காலத்துச் சிறந்ததோர் இலக்கண நூலினைத் தந்த பவணந்தியார் சைனரே என்பதில் தடையில்லை. மேலும் 'அகப்பொருள் வினக்கம்' இயற்றிய நாற்கவிராச நம்பி, யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை எனும் இரு சீரிய யாப்பிலக்கண நூல்களை இயற்றிய அமிதசாகரர் (யாப்பருங்கல விருந்தியினை இயற்றியவர் குணசாகரர் என்ற கருத்தும் நிலவுகிறது) நேமிநாதம் எனும் நூலை இயற்றிய குணவீர பண்டிதர், வெண்பாப்பாட்டியல் என வழங்கும் வச்சணந்தி மாலையினை இயற்றிய குண வீரபண்டிதர் முதலானோர் சைன சமயப் பெரியோர்களே ஆவர்.
மேலும், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட முதல் உரையாசிரியராம் இளம்பூரணரும், தமிழின் முதற் காப்பியமாம் சிலப்பதிகாரத்திற்கு உரைகண்ட அடியார்க்கு நல்லாரும் அமண் சமயத்தைச் சார்ந்தவர்களே ஆவர். மேலும் தமிழினில் நிகண்டு என்னும் புதிய துறையினைச் சைனர்களே தொடங்கி வாழ்வும் தந்தனர். சேந்தன் எனும் சிற்றரசன் வேண்டுகோட்கிணங்கத் திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டு, பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டு, வீரை மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு முதலான நிகண்டு நூல்கள் அந்நாளில் இக்காலத்துப் பேரகராதிகளின் தொண்டினைச் செய்து கல்விப் பயிர் வளர உரமூட்டின.
இவ்வாறு காப்பியம், சிறுகாப்பியம், சமய நூல்கள், நீதி நூல்கள், தனி நூல்கள், இலக்கணம், நிகண்டு முதலான பல்வேறு துறைகளிலும் பாங்குற நிலைத்த தொண்டாற்றியவர்கள் சைனர்கள் என்பது இக் கட்டுரையான் இனிது விளங்கும்.
தேவார காலத்தில் சமணர் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெளிவு. தேவாரப் பதிகங்களில் சமணர் ஒழுக்கம், செயல், நிலை குறித்த பல செய்திகளைக் காணலாம். அக்கால ஆட்சியாளரிடை இவர்கள் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கு பின்னாளில் சிதைந்தது. இதற்குத் தோற்றுவாய் செய்தவர் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தருமாவர். திருநாவுக்கரசர் மகேந்திரவர்ம பல்லவனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குத் திரும்பக் கொணர்ந்தார். அவன் சமணப் பாழிகளையும் கோட்டங்களையும் இடித்து அவ்விடங்களில் திருக்கோயில்களை எடுப்பித்தான். மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் வேண்டுகோட்படி பாண்டிய நாடு சென்று திருஞான சம்பந்தர் சமண முனிவர்களுடன் அனல்வாதம், புனல் வாதம் நிகழ்த்தி வெற்றிபெற்றுச் சமணர் பலரைக் கழுவேற்றினர் என்ப. கூன்பாண்டியன் எனப்படும் நின்றசீர் நெடுமாறனும் அமண் சமயத் தொடக்கொழிந்து, சைவ சமயத்திற்குத் திரும்பினான் என வரலாறு கூறும். இவற்றாலெல்லாம் இடைக்காலத்தில் சைனர்களின் அரசியல் செல்வாக்கு பாதிக்கப்பட்டாலும், அவர்களின் மொழித் தொண்டும், சமுதாயத்தொண்டும் தடைபடாது நிகழ்ந்து வந்தன. எனவேதான், தேவார காலத்திற்குப் பின்னர்ச் சைனர்களால் எழுதப்பட்ட பல்துறை நூல்களையும் காண்கிறோம். மேலும் அவர்கள் சோழ பாண்டியப் பெரு வேந்தர்கள் காலத்திலும் மக்கட்குச் சமூகப் பணி ஆற்றிய திறம் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது.
இதுகாறும் கூறியவற்றால் சைன சமயப் பெரியோர்களால் தமிழ் இலக்கிய இலக்கண நிகண்டுத் துறைகள் வளர்ந்து செழித்தன என்பதும், சைன சமயத்தின் சிறந்த கோட்பாடுகள் தமிழரால் போற்றி ஏற்றுக்கொள்ளப் பட்டன என்பதும், மக்கள் தொண்டினை மன நிறைவோடு சைன சமயத்துறவிகள் ஆற்றி வந்தனர் என்பதும், தமிழ் உள்ளவரையில் அமண் சமயத்தார் அம்மொழிக்கு ஆற்றிய தொண்டு நின்று நிலவும் என்பதும் ஒருவாறு உரைக்கப் பட்டன எனலாம்.
------------
7. பழந்தமிழரின் உலக நோக்கு
அமெரிக்க எழுத்தாளர் 'வெண்டல் வில்கி' என்பவர் 'ஒரே உலகம்' (One World) என்றதோர் நூலினை எழுதினார். அந்நூலில், 'எதிர்காலத்தில் நம் சிந்தனைகள் உலகை அளாவியதாக இருக்கவேண்டும்' (In future our thinking must be worldwide) என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்து உயர்வான தொன்று என்று கொண்டு அமெரிக்கர்கள் அவ்வாசிரியரைப் பெருமிதத்துடன் பாராட்டுகின்றனர். ஆனால் அவர்கள், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே பழந்தமிழ்ப் புலவர் ஒருவர்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று, உலக மக்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக எண்ணிப் பாடிய உண்மை-யினை அறிய வருவரேயாயின் எத்துணை மதிப்பினையும் சிறப்பினையும் தமிழர்பால் கொண்டு பாராட்டுவர் என்பதனை உன்னுதல் வேண்டும். கணியன் பூங்குன்றனார் புறநானூற்றுப் பாடல் ஒன்றிற் குறிப்பிட்டுள்ள இவ்வுலகந் தழுவும் உயர்நோக்கு, தமிழர் தம் தனிநோக்காக இருந்தது என்பது புலனாகக் காணலாம்.
கண்ணனிடம் பேரன்பு கொண்ட பாரதியார் காணுமிடம் எல்லாம், பார்க்கும் பொருளெல்லாம் கண்ணனாகவே கண்டார். 'உண்ணுஞ் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எங்கும் எம் கண்ணன்' என்று ஆழ்வார்கள் கண்டது போலவே, பாரதியாரும் காககைச் சிறகின் கரிய நிறத்தினிலும், பார்க்கும் மரங்களின் பச்சை நிறத்தினிலும், தீக்குள் விரலை வைத்தால் கிடைக்கும் தீண்டும் இன்பத்தினிலும் கண்ணனையே கண்டார். அதே பாரதியார்,
-
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
திருமுருகாற்றுப்படை,
-
உலகம் உவப்ப வலனேர்பு திரிதருப
லர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு
திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர் போன்றே சிலப்பதிகாரம் தந்த இளங்கோ-வடிகளும், உலகைக் காத்து நிற்கும் திங்களையும், ஞாயிற்றையும், மழையையும் போற்றித் தம் காப்பியத்தினைக் கவினுறத் தொடங்குகின்றார்.
-
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண்குடை போன்றிவ்
அங்கண் உலகு அளித்தலான்.
-
அகர முதல எழுத் தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே ஊலகு
-
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு (குறள்; 397)
-
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள் ; 215)
-
எவ்வது உறைவது உலகம்; உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு. (குறள் ; 426)
-
வாழ்க அந்தணர்; வானவர்; ஆனினம்;
வீழ்க தண்புனல் ; வேந்தனும் ஓங்குக ;
ஆழ்க தீயதெல்லாம் ; அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!
-
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே
-
காகமுறவு கலந்துண்ணக் கண்டீர்; அகண்டா காரசிவ
போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏகவுருவாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நா மினி எடுத்த
தேகம் விழு முன் புசிப்பதற்குச் சேர்வாரும் செகத்தீரே.
-
வயிற்றுக்குச் சோறிடவேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்தே - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்
இவ்வாறு காலந்தோறும் தமிழகத்தில் தோன்றிய சான்றோர் பெருமக்கள் பரந்துபட்ட உலக நோக்கிலே நின்று, சில வாழ்வியல் உண்மைகளை வலியுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பன்னெடுங்காலத்திற்கு முன்னரே உலகுயிர் அனைத்தையும் ஓரினமாகக் கண்டு, வாழ்வாங்கு வாழ்ந்த இனம் தமிழினமாகும். இன்றும் தமிழர் தாம் வாழும் அயலிடங்களையெல்லாம் தம் அன்பாலும் அறிவாலும், தொண்டாலும் முயற்சியாலும், பண்பாலும் பயனாலும் உயர்வித்து வருதல் கண்கூடு. எனவே நாமக்கல் கவிஞர் திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின்,
-
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தே அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்
-------------
8. இசைத்தமிழின் மறுமலர்ச்சி
அமிழ்தினும் இனிய நம் செந்தமிழ் மொழி, 'முத்தமிழ்' என முறையுடன் வழங்கப்பெறும். இயல், இசை, கூத்து எனப் பகுக்கப் பெறும் முத்தமிழில் நடுவானது இசைத் தமிழாகும். தமிழின் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், இசைத்தமிழ் நூல்கள் அது போது தமிழகத்தில் வழங்கின என்ற குறிப்புப் பெறப்படுகின்றது.
-
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.
(தொல்; எழுத்து, நூன்மரபு, நூற்பா, 33)
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலின் ஒவ்வொரு பாடலின் அடியிலும் அப் பாடலைப் பாடிய புலவரின் பெயரும், அப் பாடலுக்கு இசை அமைத்தவர் பெயரும், பண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறமகள் ஒருத்தி, குறிஞ்சி நிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாட, அது போது தினைக்கதிரை உண்ண வந்த யானை, தினையினை உண்ணாமலும், அவ்விடத்தை விட்டு நீங்காமலும், பாடும் குறிஞ்சிப் பண்ணால் கவரப் பட்டு மனமுருகி நின்று, பின்னர் உறங்கியும் விட்ட செய்தி, பின்வரும் அகநானூற்றுப் பாடலால் அறியப் படுகின்றது:
-
ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றெய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும் நாடன். (அகநானூறு ; 102 5-9)
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண் (திருக்குறள் : 573)
என்னும் திருக்குறளில், பண் பாடலோடு பொருந்தி வரவேண்டும் என்றும், கண் இரக்கங்காட்டும் குறிப்பை அருள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம்.
வளர்ச்சி
சிலப்பதிகாரம். முத்தமிழ்க் காப்பியம் என்றே வழங்கப்படும். கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை முதலிய காதை களில் இனிய இசைப்பாடல்கள் இலங்கக் காணலாம்.
-
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன். (நான்காம் திருமுறை; 1:6)
'பண்களாவன, பாலையாழ் முதலிய நூற்று மூன்று' என்பர், திருக்குறளின் உரையாசிரியர், பரிமேலழகர் - தேவாரத்தில் அமைந்துள்ள பண்கள், இருபத்து மூன்று என்பர். மேலும் தேவாரத் திருப்பாடல்களில் இடக்கை, உடுக்கை, கத்திரிக்கை, கல்லவடம், கல்லலகு, கிணை, குடமுழா, கொக்கரை, கொடுகொட்டி, சல்லரி, தக்கை, தகுணிச்சம், தண்ணுமை, பறை, பிடவம், முழவு, மொந்தை, முரவம் முதலான தோற்கருவிகளும், வேய்ங் குழல் முதலிய துளைக் கருவிகளும், யாழ், வீணை முதலான நரம்புக் கருவிகளும், தாளம் முதலிய கஞ்சக் கருவிகளும் இடம் பெற்றுள்ளன.
திருவாசகத்தில் அமைந்துள்ள திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல் முதலிய பாடல்கள் இசையோடு சார்த்திப் பாடப்பெற்றுவரும் பாடல்களாகும். மேலும்,
-
......... உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்த னை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ
(திருக்கோவையார்; 20; 2-3)
பிற்காலச் சோழர்கள் காலத்தில், திருப்பதிகங்கள். பண்முறையோடு பரம்பரையாக ஓதுவாமூர்த்திகளால் பயிலப் பெற்றுப் பாடப் பெற்று வந்தன என்ற செய்தி யினைக் க ல் வெட்டுக்கள் கொண்டு அறியலாம் . 'முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்,' என்று அருணகிரிநாதர், முருகப்பெருமான் முத்தமிழ்பாற் கொண்ட காதலைக் குறிப்பிடுவர்.
சீகாழி அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனை, திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி, என்னயினாப் பிள்ளையின் முக்கூடற்பள்ளு (ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்ற கருத்தும் உண்டு) மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சர்வசமயக் கீர்த்தனைகள், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா முதலியன, இசைத்தமிழ் உலகிற்குக் கிடைத்த கொடைப் பனுவல்களாகும்.
தமிழ்நாட்டில் தெலுங்குப் பாடல்கள் நுழைந்து கொண்டு, தமிழர்க்கெனத் தமிழ் இசைப்பாடல்களே கிடையா என்று வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு நிலைமை வளர்ந்துவிட்டது.
தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரும், "வித்துவான்கள் பழைய கீர்த்தனைகளைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளிலே பழம் பாட்டுக்களை மீண்டும் மீண்டும் பாடுதல் நியாயமில்லை . அதனால் நமது சாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்" என்று எச்சரிக்கை விடும் நிலை ஏற்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசனும்,
-
"பாடுவதென்றால் தமிழினில் பாடு
பாவையே உளமகிழ் வோடு
-
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா" (இசையமுது; தொகுதி 1, ப. 48)
மறுமலர்ச்சி
மீண்டும் இசைத் தமிழ் இருளிலிருந்து ஒளிக்கு வந்திட, இந்த நூற்றாண்டில் - வரலாற்றில் இடம் பெறத் தக்க தொண்டு செய்து, தமிழிசைக்குப் புத்துயிர் தந்து, ஒரு மறுமலர்ச்சி வாழ்விணை அளித்தவர், காலஞ் சென்ற செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களாவர். அவர்களின் அறிவாற்றலின் விளைவால் 1929 ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் தோன்றிய மீனாட்சி கல்லூரி, 1932 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது, இந்தியப் பெரு நாட்டில், இசைக் கலையினை நான்கு ஆண்டுகள் கற்பித்துப் பட்டம் வழங்குகின்ற முதற் பல்கலைக் கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகமேயாகும். 1936 ஆம் ஆண்டு, அரசர் அவர்களின் முயற்சியால் இசை மாநாடு கூட்டப் பெற்றது. 16-11-1940 ஆம் ஆண்டில் நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில், செட்டி நாட்டரசர் அவர்கள், தமிழிசை வளர்ச்சிக் கென ரூபாய் பதினாயிரம் நன்கொடையாக வழங்கினார் கள். அண்ணாமலை நகரிலேயே 14-8-1941 முதல் 17-8-1941 வரையில் நான்கு நாட்கள், முதல் தமிழ் இசை மாநாடு கூட்டப் பெற்றது. இசை மேதைகள் பலர் அம் மாநாட்டில் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளியில் 4-9-1941ல் பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்கள் தலைமையில் கூட்டப் பெற்ற மாபெரும் கூட்டத்தில், அப்போது குமார ராஜாவாக விளங்கிய டாக்டர் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்கள், தமிழ் இசை இயக்கத்தின் சீரிய நோக்கங்களைச் சிறப்புற எடுத்துரைத்தார்கள். 15-9-1941-ல் இசைக்கலைஞர் பலர் சேர்ந்து, தமிழ் இசை இயக்கத்திற்குத் தம் ஆதரவினைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள். 16-9-1941-இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில், தமிழ் இசை இயக்கத்தினை ஊக்குதலி தன் பொருட்டு ஆதரவுக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ் இசை பாடற் போட்டிகள் நிகழ்த்தப் பெற்றன. பெருங் கொடை வள்ளல், அண்ணாமலை அரசர் அவர்கள் தாம் சீருடனும் சிறப்புடனும் கொண்டாடிய அறுபதாம் ஆண்டுவிழாவில், தமிழ் இசை வளர்ச்சிக்கு இரண்டாவது முறையாக ரூபாய் பதினையாயிரம் வழங்கினார்கள். 1943 ஆம் ஆண்டில், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் தலைமையில், தமிழ் இசை ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப் பெற்றது. பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள், அக்குழுவிற்குச் செயலாளராக இருந்து பணியாற்றினார்கள்.
தேவகோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, குடந்தை, திருப்பத்தூர், திண்டுக்கல், வலம்புரி, ஐயம் பேட்டை, திருநெல்வேலி முதலிய தமிழ் நாட்டு நகரங்களில் இசை மாநாடுகள் நடைபெற்றன. இசைக் சங்கங்கள் தொடங்கப் பெற்றன.
சென்னைத் தமிழ் இசைச்சங்கம் 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில், செட்டி நாட்டரசர் அவர்களால், சென்னையில் நிறுவப்பெற்றது. 23-12-1943 முதல் 4-1-1944 வரை பெரியதொரு தமிழிசை மாநாடு சென்னையில் நடை பெற்றது. 23-1-1944ல் தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் தமிழ் இசைக் கல்லூரி ஒன்றும் தொடங்கப் பெற்றது. மேலும், தமிழ் இசை இயக்கத்திற்குத் தொடக்கப் நாட்களில் ராஜாஜி, டி கே.சி., சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் முதலிய பெருமக்களின் ஆதரவு கிடைத்தது, இசைக் கலைஞர்களில் பேரும் புகழும் பெற்ற மேதைகள் பலர், தமிழ் இசை வளர்ச்சிக்குத் தலை யாய தொண்டாற்றினர். 1950 ஆம் ஆண்டு தொடங்கிப் பண் ஆராய்ச்சிக் கூட்டங்களும் ஆண்டுதோறும் முறையாக நடைபெற்று வருகின்றன. செட்டி நாட்டரசர் ராஜ சர் முத்தைய செட்டியார் அவர்களும், தமிழ் இசைச் சங்கத் தலைவர் திரு. மு. நாராயண சாமிப்பிள்ளை அவர்களும், கெளரவச் செயலாளராக திரு. மு. அ. சிதம்பரம் செட்டியார் ஆகியோரும் தம் அயராத தொண்டால், தமிழ் இசைச் சங்கத்தினை வளர்த்து வருகின்றனர். மதுரையில் தொடங்கப் பெறும் தமிழ் இசைச் சங்கம், ஆலவாய் உறை அண்ணல் சொக்கேசர் அருளால், வளர்பிறையென வளர்ந்து தொண்டாற்றுவதாக.
------------------
9. எங்கெழிலென் ஞாயிறு எமக்கு?
சிலர் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வாழ்கிறார்கள்; பலர் எப்படியும் வாழலாம் என்று வாழ்கிறார்கள். முன்னவர் வாழ்க்கையை முன்னோர் சென்ற நெறியும் உயரிய கொள்கைகளும் வழிநடத்திச் செல்கின்றன; பின்னவர் வாழ்க்கை, குறிக்கோளிலாத வாழ்க்கையாய் அமைகிறது. குறிக்கோளும் கொள்கைகளும் இல்லாமல் வாழ்வு நடாத்திச் செல்வது, கடிவாளம் இல்லாத குதிரைமேல் 'சவாரி' செய்வதை ஒக்கும், நல்ல கொள்கைகள், சான்றோர் உணர்த்திவிட்டுச் சென்றநெறி நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும். இன்றேல் ஓட்டைப் படகில் பயணம் செய்து நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தவன் கதையாய்ப் போய் முடியும்.
உலகில் தோன்றும் உயிர்கள் இன்ப நாட்டம் உடையன. இன்பம் தான் அமர்ந்து மேவுகின்ற தன்மை வாய்ந்தது. மண், பெண், பொன் ஆகிய மூன்று ஆசைகளும் மனித மனத்தை அலைத்து அரித்துக் குலைப்பனவாகும். மனமெனும் குரங்கு இம் மூவாசைகளைப் பற்றினால் அதனால் விளையும் துன்பங்கள் கோடி கோடியாகும்.
ஆசைகள், பற்றுகள் பல வகையென நாம் முன்பே கண்டோம். 'ஆசையே அனைத்துலகத் துன்பங்களுக்கும் காரணம்' என்பர். எனவேதான்,
-
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (திருக்குறள் : 350)
-
மற்றுப் பற்றெனக் கின் றி நின்திருப்
பாதமே மனம் பாவித்தேன்
பெற்றாலும் பிறந்தேன் இனிப் பிறவாத
தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுதேத்தும் சீர்க்
கரையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சி வாயவே.
(ஏழாந்திருமுறை; திருப்பாண்டிக் கொடுமுடிப் பதிகம்)
எங்கெழிலென் ஞாயிறு எமக்கு?
-
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (திருக்குறள் : 10)
-
இறவாத இன்ப அன்பு
வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை யென்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ யாடும் போது உன்
அடியின்கீழ் இருக்க வென்றார்.
(பெரிய புராணம்; காரைக்காலம்மையார் புராணம் : 60)
ஒரு மனிதனை மதயானையொன்று துரத்தி வருகின்றது. அதன் தாக்குதலிலிருந்து தப்ப மனிதன் ஓடோடிச் செல்கிறான். இறுதியில் வ ழியில் பாழுங்கிணறு ஒன்றனைப் பார்க்கிறான். படிக்கட்டுகள் வழியே இறங்கிக் கொள்ள நினைக்கிறான். ஆனால் கிணற்றடியில் பட மெடுத்தாடும் பாம்பு சீறி நிற்கிறது. எனவே அதன் சீற்றத்திலிருந்து தப்பக் கிணற்றிற்குள் வெளியிலிருந்து வந்து உள்ளே தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகளைப்பற்றிக் கொண்டு தொங்குகிறான். அப்போது அவ்வழியே வந்த எலியொன்று அக்கொடிகளைத் தன் பற்களால் கடித்து அறுக்கின்றது. அந்நிலையில் கிணற்றங்கரையில் வளர்ந்திருந்த மரத்தில் தேனீக்களால் கட்டப்பட்டிருந்த தேன் கூடு அழிந்து அங்கிருந்து தேன் துளிகள் கீழே ஒழுகிக் கொண்டிருக்கின்றன. சூழ்நிலைகளை முற்றிலும் மறந்து விட்ட மனிதன் தன் நாக்கைத் தான் இருந்த இடத்திலிருந்தே நீட்டிச் சுவைக்க நினைக்கின்றான். இதுவே மனிதர் துய்க்கும் இன்பம் என்று கூறுகின்றது அச் செய்யுள். செய்யுளைக் காண்போம் :
-
ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி
நானவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தினை கொள்நீ.
(சூளாமணி ; துறவுச் சருக்கம் : 149.)
மனிதன் ஒருவன் நிறையச் செல்வம் திரட்டினான். அதனைத் துய்க்காமலும், பிறர்க்குத் தந்து அறந்தேடா மலும், செல்வத்தைப் பொன்னாக்கி, அப் பொன்னை உருண்டை-யாக்கித் தன் மனைவியிடம் கொடுத்துப் பாதுகாப்பாக வைத்திருந்தான். தான் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் பொழுது பொன் கொண்டு அறம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தான். ஆனால் திடீரென்று அவன் நா அடைத்துப் பேசமுடியாத நிலைக்கு ஆளாகி, யாக்கையின் உயிர் அகத்ததோ புறத்ததோ என்னும் நிலை வந்துற்றது. உறவினர்களெல்லாம் அவன் படுக்கையைச் சுற்றிக் கூடிவிட்டனர். அப்போது அச் செல்வன் தன் மனைவியைப் பார்த்துக் கைச்சாடையால் பொன்-முடிச்சைக் குறிப்பிட்டுக் கொண்டு வருமாறு பணித்தான். ஆனால் அவன் மனைவி அவன் செயலுக்குத் துணை நிற்கவில்லை. எனவே, அவன் எண்ணம் என்ன வென்பதனைப் பிறருக்குத் தெரியாமல் மறைப்பதற்காகப் பின் வருமாறு பேசத் தொடங்கினாள்: “ஐயோ! என் கணவர் இறுதி நேரத்தில் விளாம்பழத்தின் மீது ஆசைப்பட்டு விட்டாரே! விளாம்பழம் கிடைக்கும் பருவம் (Season) இஃதன்றே! இப்பொழுது என்ன செய்வேன்?" என்று கதறியழத் தொடங்கினாள் . கணவன்மேல் மிகுந்த அன்புகொண்டவள் போல் நடிக்கத் தொடங்கினாள். உறவினர்க்கெல்லாம் அக்குடும்பத் தலைவன் நினைத் திருந்த திட்டம் என்ன வென்பது தெரிய இயலாமற் போய் விட்டது. மனைவியின் வஞ்சக நாடகம் - பொன்னாசை காரணமாக ஏற்பட்டுவிட்ட மாயப்பேச்சு அறத்தை எங்கோ அடித்துத் துரத்திவிட்டது. எனவே பொன்னாசை, கணவன் விருப்பத்திற்கு எதிராக மனைவியை மாற்றி விட்டதைக் காண்கிறோம். திருத்தக்க தேவரின் தீந்தமிழ்ப் பாடலைக் காண்போம்:
-
கையாற் பொதித்துணையே காட்டக் .
கயற்கண்ணா ள தனைக் காட்டாள்
ஐயா விளாம்பழமே யென்கின்றீ
ராங்கதற்குப் பருவ மன்றென்
செய்கோ வெனச்சிறந்தாள் போற்சிறவாக்
கட்டுரையாற் குறித்த வெல்லாம்
பொய்யே பொருளுரையா முன்னே
கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்.
(சீவகசிந்தாமணி; கேமசரியாரிலம்பகம் : 142 )
-
........ யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
அறாளும் அன்பும் அறனு! மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே (பரிபாடல்; 5 : 78-81)
இவ்வாறு உய்யும் உயர்நெறி அறிந்துணர்ந்து தெளிந்த பெரியவர் திருவாசகம் தந்த மணிவாசகப் பெருந்தகையாவர். 'கல்லைப் பிசைந்து கனியாக்கும் விச்சை' யறிந்தவர். காசிவரை சென்று சைவ சமயம் பரப்பிய குருரகுருபரரும், கற்பனைக் களஞ்சியமாம் சிவப்பிரகாசரும், தாயுமான தயாபரரும், வடலூர் வள்ளற் பெருமானும், திருவாசகத்தில் தோய்த்த நெஞ்ச முடையவர்கள் என்பது அவர்கள் பாடியுள்ள பாடல்கள் பலவற்றால் அறியலாகும். கிறித்துவ சமயத்தினையே பரப்பத் தமிழ் நாடு போந்த டாக்டர் ஜி. யு. போப் என்னும் பாதிரியார், திருவாசகத்தில் நெஞ்சந் தோய்ந்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். திருவாசகத்தை ' என்புருக்கும் பாட்டு' (Bone-melting song) என்று குறிப்பிட்டார். திருவாசகத்தில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் அகவலில் வரும் 'இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்ற தொடருக்கு இணையான கருத்தை, இறைவனைக் குறித்து வெளிப் படுத்தும் மொழி உலகில் எங்கும் காணமுடியாது என்பர். மொழித்திறம் முட்டறுத்த மொழி நூற்புலவர்களும், ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசையின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும் குறிப்பிட்டு, தமிழ் பக்தியின் மொழி (Language of Devotion) என்று குறிப்பிடுவர். அளவிலும் சுவையிலும் தமிழில் எழுந்த பக்திப் பாடல்கள் போல் வேறு எம் மொழியிலும் காண முடியாது என்பர்.
மலங்கெடுத்து மனமுருக்கும் திருவாசகம் தோத்திர நூல்களில் தலைசிறந்ததாகும். 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்பது பழமொழி. திருவாசகத்திலும் அதன் ஒரு பகுதியாய் அமைந்துள்ள திருவெம்பாவை பக்தியுலகில் சீரியதோர் இடத்தினைப் பெறுகின்றது. திருப்பெருந்துறைப் புராணம்,
-
மலவிருளுற்று உறங்காமல் மன்னுபரி பாகரருள்
செல்முழுக வருகவெனச் செப்பல் திரு வெம்பாவை
அறிவு, அழகு, செல்வம், பண்பு, வயது, குடிப்பிறப்பு முதலிய பத்துவகை ஒப்புகளால் ஒத்த தலைவனும் தலைவியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்போது பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணை மணமகன் கையில் ஒப்படைக்கும் பொழுது, 'உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்று கூறிக் கொடுப்பர். கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி ஊழ்கூட்டத் தலைவனும் தலைவியும் ஒன்று சேர்வது பழைய காலத் திருமணமாக இருந்தது, களவின் வழிவந்த கற்பு இதுவாகும். திருமணத்தின் போது திருமண வீட்டிற் புதுமணல் பரப்பப்பட்டு, மாலைகள் தொங்கவிடப்பட்டு, விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்திரத்தைச் சேரும் நல்லோரையில், மங்கல மகளிர் நால்வர் முறையே கை மாற்றி வாங்கி, புதுக்குடத்தில் துலங்கும் நீரை மணையின் மீது அமர்ந்திருக்கும் மணமகளின் தலைமீது சாய்க்க, அக் குடத்திலிருந்து மங்கலப் பொருளாம் நெல்லும் மலரும் மணமகளின் நெறித்த கதுப்பில் வந்து தயங்கி நிற்கின்றன. கற்பினின்று நீங்காமல் நல்ல பல செயல்களுக்குக் கணவனோடு துணை நின்று, இன்று திருமணத்தில் உன்னைப் பெற்ற கணவன் எஞ்ஞான்றும் உவக்கும் வகையில் வகையுற நீ வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நிறைந்த நெஞ்சோடு வாழ்த்துகின்றார்கள். இதுவே பழந்தமிழர் திருமண முறை. நல்லாவூர் கிழார் பாடியுள்ள கீழ்வரும் அகப்பாடலொன்று தரும் செய்தி இது.
-
தண் பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடங்க
கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக்
கோள் கால் நீங்கிய கொடுவெண் திங்கட்
கேடில் விழுப்புகழ் நாள் தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவு முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினில் வழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த ஈரித ழலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடுந் தயங்க. (அகநானூறு ; 86 : 3-16)
-
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. (புறநானூறு; 187)
-
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. (குறுந்தொகை; 295 : 4-6)
-
ஒல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்
(சிறுபாணாற்றுப்படை ; 135-139)
"வறுமையுறுதலும் இயல்பென்றறியாது புறங் கூறுவோர் காண்டற்கு நாணித் தலைவாசலையடைத்து மிடியாற் கரிய பெரிய சுற்றத்தோடே கூடவிருந்து அடையத்தின்னும்" என்று 'உச்சிமேற் புலவர் கொள்'நச்சினார்க்கினியர் வரைந்த உரையால் விளங்கும்.
மேலும் ஆண்டுகள் பலவாகியும் நரையிலவாகுதலின் காரணத்தை உசாவிய மக்கட்குப் பிசிராந்தையார் 'மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்' என முதலாவது குணங்களால் பெருமை பொருந்திய மனைவியையே குறிப்பிட்டுள்ள து கொண்டு அறியலாம். தமிழ் மறையும்,
-
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (திருக்குறள் ; 53)
சங்க காலத் தலைவி, தாய் சினந்து சீறிக் குழந்தையினைக் கோல்கொண்டு ஓச்சியடிக்கும் பொழுது, 'அம்மா அம்மா' என்றே கதறியழுவதைப் போன்று தலைவன் இனிய செய்யினும் இன்னாதன செய்யினும் அவனையே அடைக்கலம் என நம்பி வாழும் பெற்றி வாய்ந்தவளாவாள்.
-
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்டு
அன்னா யென்னுங் குழவிபோல
இன்னா செயினு மினிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினள் என் தோழி
நின்னுறு விழுமம் களைஞரோ வீலளே . (குறுந்தொகை; 397-5-8)
-
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன்போல், மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா நீ
ஆளாவுன தருளே பார்ப்ப னடியேனே. (பெருமாள் திருமொழி; 5-4)
உலகில் தோன்றிய உயிர்கள் இறைவன் அருளால் தோன்றி, அவனருளால் அவன் தாள் வணங்கி வாழ்கின்றன. எனவே மீட்டும் இறைவனிடம், 'உங் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்ற சொல்லை மீண்டும் புதுப்பித்துக் கொள்வது மிகையாகும். எனவே மார்கழித் திங்களில் வைகறையில் எழுந்து நீராடிச் சிவனைச் சிந்தை யிற்கொண்டு பாடிப் பரவும் பெண்கள் பழஞ்சொற் புதுக்க அஞ்சுகின்றனர். ஆயினும் சிவபெருமானிடத்துப் பின்வருமாறு கூறிக்கொள்கின்றனர்.
' எங்கள் மார்பகங்கள் அடியாராய் அல்லாத பிறரின் தோள்களைச் சேரா; எங்கள் கைகள் உனக்கல்லாத பிறர்க்கு எப்பணியினையும் இயற்றா; எங்கள் கண்கள் இரவும் பகலும் வேறொன்றினையும் காணா; இந்தப் பரிசு ஒன்றினை மட்டும் எங்கள் தலைவராகிய நீவிர் எங்கட்கு வழங்கிவிட்டால், கிழக்கே தோன்றும் கதிரவன் எத்திசையில் எழுந்தாலும் எங்கட்கு ஒரு கவலையும் இல்லை'
என்கின்றனர்.
-
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போங்கேள் :
எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள்சேரற்க;
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க ;
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு? எமக்கேலோர் எம்பாவாய்!
(திருவெம்பாவை; 19)
-
வானம் துளங்கிலென்? மண் கம்ப மாகிலென்? மால்
தானம் துளங்கித் தலைதடு மாறிலென்? தண்கடலும்
மீனம் படிலென்? விரிசுடர் வீழிலென்?
ஊ னம் ஒன்றில்லா ஒருவனுக்கு ஆள்பட்ட உத்தமர்க்கே,
(நான்காம் திருமுறை; 112 ஆம் பதிகம்: 8.)
-
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள் (முல்லைக்கலி; 3, 63-64)
எனவே, நாம் அனைவரும் சிவநெறி மறவாத சிந்தையராய், ஞாலம் அவன் புகழே மிக, நம் நெஞ்சத்தை அவன் வாழும் திருக்கோயிலாக்கி, அன்பர் பணிக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டால், இன்பநிலை தானே வந்து எய்தும் என்பது திண்ணம்.
---------------
10. கிட்கிந்தா ராமன்
'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்று போற்றப்படும் கவிச்சக்கர-வர்த்தி கம்பன் வழி. நின்று, கிட்கிந்தா ராமனின் சிறப்புக்களை நோக்குவோம். அறிவியலில், அதுவும் சிறப்பாக இயற்பியல் விரவிய வேதியியலில் (Physical Chemistry) வாயுக்களின் சம எடைரை (Equivalant weight) ஆக்ஸிஜன் அடிப்படையில் கணித்துத்தான் கூறுவர். எனவே நாமும் தமிழகத்தில் இராமனைப் பற்றிப் பல்வேறு இலக்கியங்களிலும், நூல்களிலும், செவிவழிச் செய்திகளிலும் குறிப்புக்கள் இருந்தாலும் துல்லியமான அளவுகருவியாகிய கம்பனின் இராமாவதாரத்தைக் கொண்டே மதிப்பிடுவோம்.
கம்பனுடைய தனித்தன்மை அவனுடைய பாத்திரப் படைப்பிலும், கட்டுக் கோப்புத் திறனிலும்தான் மிகுதியாக விளங்குகிறது என்று கூறலாம். பாலகாண்டத்தில் தாடகை வதைப்படலம்; ஆரணிய காண்டத்தில் விராதன் வதைப்படலம், மாரீசன் வதைப்படலம்; கிட்கிந்தா காண்டத்தில் வாலிவதைப் படலம் ; யுத்த காண்டத்தில் கும்ப கருணன் வதைப்படலம், இராவணன் வதைப் படலம் என்று அமைத்து, ஒவ்வொன்றிலும் வளர்ச்சி நிலை காட்டுகின்றார் கம்பர். பால காண்டத்தில் தாடகையின் இருப்பிடம், தோற்றம், வருகை, செயல் ஆகியவற்றைக் கண்ட பின்னும் இராமன் அஞ்சியதாகத் தெரியவில்லை. அவளைக் கொல்வதற்குச் சற்றுத் தயங்கினான். ஆசிரியர் விசுவாமித்திரர், பொது நலம் கருதித் திருமாலும் இந்திரனும் பெண்ணை அழித்ததனால் சிறுமையுறாமல் மேலும் சிறப்புப் பெற்றனர் என்பதை எடுத்துக் கூறிய பின்னர், இராமனும், அவளை அம்பொன்றினால் எய்து ஆட் கொண்டான் என்று பாடினார் கம்பர். அம்பு எய்யப்பட்ட அளவில் தாடகை வீழ்ந்தாள் என்றும்,
-
கூசிவா ளரக்கர் தங்கள் குலத்துயிர் குடிக்க வஞ்சி
ஆசையாலுழலுங் கூற்றுஞ் சுவைசிறி தறிந்த தன்றே
-
............... விற்கொண்ட மழையனான்மேல்
பூமழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே'
(பாலகாண்டம்; தாடகை வதைப் படலம்; 72 இறுதிச் செய்யுள்)
-
மைவண்ணத் தரக்கி போரின் மழைவண்ணத் தண்ணலேயுன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
(பால காண்டம்; அகலிகைப் படலம்; 81)
ஆரணிய காண்டத்தில் விராதன், இராமனின் அம்பிற் கிரையாகி நற்கதி பெற்று வழிபாடே இயற்றுகின்றான். மாரீசன், பால காண்டத்தில் ஒருமுறை இராகவனின் அம்பு பட்டு மனத்தூய்மை பெற்றுச் சூழலால் இராவணனிடத்துத் தங்கிப் பின்னர் 'அறம் பிறழ்ந்தவன் கையால் மாள்வதை விட அறத்திற்கே நாயகனான இராமன் எய்யும் கணைபட்டு உய்தி பெறுவது மேல்' என்று கருதி மாயமான் உருக்கொண்டு, சக்கரவர்த்தித் திருமகனை நெடுந்தொலைவு கொண்டு சென்று இறுதியில் அண்ண லிட்ட அம்புபட்டுப் புனிதம் அடைந்து உயிர் துறக்கின்றான்.
கிட்கிந்தா காண்டத்தில் வாலியை இராமன் வதை செய்கின்றான். வாலி வதையில் தான் கம்பரின் கட்டுக் கோப்புத் திறன் முழுமையாக வெளிப்படுவதைக் காண்கின்றோம். வாலி அரக்கனல்லன்; அவனோர் வானரம். ஆழ்ந்து நோக்கின் இரகவணனின் படைப்புக்கு இணையான ஓர் படைப்பாகும். இராவணனும் வாலியும் சிறந்த சிவ பக்தர்கள். இருவரும் வரம்பிலா வரத்தினர். பிறன் மனை நோக்கியமை-யால்தான் இருவருக்கும் இறுதி கிட்டியது. ஆற்றலில் இராவணனையே விஞ்சியவன் வாலி என்பதற்கும் போதிய குறிப்புகள் உள்ளன. இவ்வாறு பொதுத் தன்மைகள் பல காட்டி நுட்பமான வேறுபாடமைத்துப் பாத்திரப் படைப்பை உயர்த்துவதில் கம்பனுக்கு இணை கம்பனே. வாலி, இராமனுடைய அம்பு பட்ட அளவில் சினக்கின்றானேயன்றி இறுதியில், 'தீயன பொறுத்தி' என வேண்டி வரங்கள் இரண்டைப் பெற்றுப் பரமபதம் அடைகின்றான். இராவணன் மட்டுமே இராமனை வணங்கியதாகக் கம்பர் உரைத்தாரில்லை. அவன் எதிர் நிலைத் தலைவனாதலால் அவ்வாறு செய்யவில்லை. இராமனுடைய வீரத்தினையும் ஆற்றலையும் வியக்கின்றான்; ஆனால் அம்பு பட்ட அளவில் இராமனைத் துதிக்கவோ, வாழ்த்தவோ இல்லை என்பது குறிக்சத் தக்கது. தாடகை தொடங்கி இராவணன் இறுதியாக அனைவரும் இராமனுடைய அம்பிற்கு இலக்கானவர்களே. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்திற்காக வதைக்க வேண்டிய கட்டாயம் இராமனுக்கு வந்துற்றது. எந்த வகையிலும் இராமனுடைய புகழ் குன்றவில்லை. என்பதே கம்பர் தம் கருத்து.
கம்பனுடைய காவியம் உயர் நிலை பெற்றுத் திகழ்வதற்கு அடிப்படைக் காரணமே கிட்கிந்தா காண்டம் என்று கூறினால் மிகையாகாது. வாலிவதை பற்றி அறிஞர்கள் பலர் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளனர். அது பற்றிப் பேசுவதே ஒரு தனித்தகுதி எனக் கருதுகின்ற பெருமக்கள் மிகுதி. கம்பனின் பாலராமன், அயாத்தியா ராமன், ஆரண்ய ராமன், சுந்தர ராமன், செயராமன் ஆகியோர் ஐயப்பாட்டிற் கிடமின்றிப் பாராட்டப்படும் போது, கிட்கிந்தா ராமன் மட்டுமே பிரச்சினைக்குரியவன் போல் தோன்றுகின்றான். எனவே இக்காண்டத்தினைப் பிரச்சினைக்குரிய காண்டம் (Problem Canto) என்று கூறலாம்.
ஆட்சிப் பொறுப்பினையும் மனைவியையும் விதியின் வலிமையால் பிரிந்த நிலையில் இருந்த இராமன் சுக்கிரீவனுக்கு வாலியினிடமிருந்து இரண்டையும் மீட்டுத் தருவதாக உறுதியளிக்கின்றான். இராமனிடத்தில் ஒத்த வுணர்வும், ஒட்ட வுணர்வும் (Sympathy and Empathy) ஒருங்கே அமைந்திருந்ததால்தான் உடனே உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. 'பிறிதின் நோய் தன்னோய் போல்' போற்றும் தகைமை கிட்கிந்தா ராமனிடம் காணப் படுவது கண்கூடு. எவரையும் பார்த்த அளவில் அவர் தம் பண்பாட்டைக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன் இராமன் என்பது இந்தக் காண்டத்தில்-தான் தெளிவுறுகின்றது எனலாம். பரதனைச் சேணுயர் தருமத்தின் தெய்வம் என்று கூறினானேயெனில் தம்பியைப் பற்றி அறிவதற்குத் தனித்த ஆற்றல் வேண்டுமோ? அனுமனைக் கண்ட அளவிலேயே,
-
இல்லாத வுலகத் தெங்கும் ஈங்கிவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே யென்னுங் காட்சி
சொல்லாலே தோன்றிற்றன்றே யார்கொலிச் சொல்லின் செல்வன்
வில்லார்தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவல் லானோ!
(கிட்; அனுமப்படலம் : 20)
இராமனைக் குறை கூறுவதாகப் பேசும் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவர்கள் மந்தரை, பரசுராமன், வாலி, இராவணன் ஆகியோராவர்.
பரசுராமன் 'ஊனவில் இறுத்த மொய்ம்பு' என்று மட்டும் குறிக்கின்றான் நேரிடையாக. மந்தரை, 'ஆடவர் நகையும், ஆண்மை மாசுற, தாடகையெனும் அத்தைய லாள்பட' என்று கைகேயியிடம் இராமனைக் குறைத்துப் பேசுகின்றாள். இராவணன் அனுமனிடமும் அங்கதனிடமும் கும்பகருணனிடம் குறைத்துப் பேசுகின்றான். ஆயின் வாலி ஒருவன் தான் இராமனை நேருக்கு நேராக மனம் போன வழிக் குறைத்துப் பேசுகின்றான்.
-
வாய்மையும் மரபுங் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே நீ பரதன்முன் தோன்றினாயே
(கிட்; வாலிவதைப் படலம் : 76 : 1-2)
-
தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலுஞ் செய்கை
(கிட்; வாலிவதைப்படலம் :78:4)
-
வலியவர் மெலிவு செய்தாற் புகழன்றி வுசையு முண்டோ
(கிட்; வாலிவதைப்படலம் : 80 : 4)
-
அத்தா இதுகேளென ஆரியன் கூறு வான் இப்
பித்தாய விலங்கின் ஒழுங்கினைப் பேச லாமோ
எத்தாயர் வயிற்றினும்பின் பிறந்தோர்கள் எல்லாம்
ஒத்தாற் பரதன் பெரிதுத்தமன் ஆதல் உண்டோ !
(கிட்; வாலிவதைப் படலம் : 3,4}
வாலியை மறைந்திருந்து கொல்லலாமா? காலங்காலமாகக் கேட்கப்பட்டுவருங் கேள்வி! பலரும் கேள்விக்குக் கொடுக்கின்ற சிறப்பிடத்தை விடையிறுப்பதற்குக் கொடுப் பதில்லை " என்ன இருந்தாலும் அது தப்புத்தானே?" என்று கூறுபவர்களின் எண்ணிக்கைதான் இன்றளவும் மிகுதி! தீர்க்கமுடியாத, கூடாத ஒரு சிக்கலாகவே இஃது இருக்க வேண்டும் என்பதுதான் பலருடைய விருப்பம் போலும்! ஒரு செஷன்ஸ் நீதிபதியென்று நம்மைக் கருதிக் கொண்டு ஆராய்ந்தால் ஓரளவு உண்மை புலப்படும். வாலியை இராமன் கொன்றதை யாரும் மறுக்கவில்லை. எனவே கொல்லப்பட வேண்டியவன் அவன் என்பது உறுதியாகிறது. கொல்லும் உரிமை இராமனுக்கு இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர். அந்தவகையில் இன்றைய காவல் துறை உயர் அதிகாரிபோல் இராமன் விளங்குகிறான். இராமனைப் பொறுத்த அளவில் வாலியைக் கொல்வதற்குச் சொந்த காரணமோ பல நாள் பகையோ கிடையாது (no personal enmity). எனவே உள் நோக்கமோ நீண்ட நாள் திட்டமோ கிடையாது (no personal motive nor any plan). மேலும் வாலி சட்டத்தையும் சமுதாயத்தையும் மதித்து நடப்பவனும் அல்லது (He is not a law abiding being). பயிராக இருக்க வேண்டியவன் களையாக மாறியிருக்கின்றான். மேலும் தனக்குக் கிடைத்த வரங்களையெல்லாம் பொது நலத்திற்குப் பயன் படுத்தாமல் தன்னலத்திற்காகவே பயன்படுத்தினான் (misuse of power and Penance for personal gains). சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவனே அவற்றைத் தகர்த்தெறிந்தான். பிறன்மனை நோக்குதல் என்ற பெருங் குற்றத்தைப் புரிந்தான். சுக்குரீவனுடைய நிலப்பரப்பைப் பிடுங்கிக் கொண்ட தோடமையாமல் அவனை உயிர் வாழக் கூட அனுமதிக்காமல் துரத்தித் துரத்தியடித்தான். எனவே கிட்கிந்தையில் பொதுவாக எவருடைய உயிர்க்கும் உடை மைக்கும் பாதுகாப்பில்லாத சூழ் நிலை உருவாகியது (There is no security for life at Kishkindai). இந்தக் குற்றங்களிலிருந்து வாலி விடுபட முடியாது.
செருக்கினர் வலியராகி நெறி நின்றார் சிதைவராயின்"
உலகம் தழைக்குமாறெங்ஙனம். இது நாட்டிற்கும் வீட்டிற்கும் என்றென்றும் தவறல்லவா? வாலியைக் காட்டிலும் வலிமை படைத்தவர்கள் அவனைக் கொல்ல முடியும். அஃது இராமனைத் தவிர வேறு எவரும் இருக்க வியலாது.
ஆற்றலில் இராமன் வாலியைவிடப் பன்மடங்குயர்ந்தவன். அவதாரச் சிறப்புடைய பரசுராமனின் வலிமையையே அடக்கியவன். எவரும் தொடக்கூட அஞ்சிய வில்லினை ஒடித்தவன். கூற்றன்ன கைகேயியையே தாயாகக் கருதித் தன் பெருமையை உணர்த்தியவன். தோல்வி யென்ற சொல்லையே, அறியாதவன். எனவே அவன் தன் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடவியலாது. இராவணனை வாலியால் வெல்ல முடிந்தது; ஆனால் கொல்லமுடிய வில்லை. அந்த ஆற்றல் இராமனிடமே இருந்தது. எனவே வாலியை விட இராமன் உயர்ந்த ஆற்றல் படைத்தவன் என்பது வெளிப்படை!
மற்றுமோர் உண்மையை மறந்து விடலாகாது. மரா மரங்கள் ஏழினையும் ஒரே அம்பால் துளைக்கக் கூடிய ஒருவன் தான் வாலியைக் கொல்லும் தகுதி பெற்றவனா வான்! அந்த வகையில் இராமன் ஒருவனே அதனைக் கொண்டவன் என்பது யாவரும் அறிந்த செய்தி.
நேருக்கு நேராகப் போரிடுவதற்குரிய உத்தியைக் கையாள முடியாத அளவிற்கு வரங்களைப் பெற்றவன் வாலி. எதிரே போரிடுபவர்களின் வலிமையில் பாதியைப் பெற்றுக் கொள்ளும் வரத்தைப் பெற்றவன். அத்துடன் தன் வலிமையையும் சேர்த்து எவரையும் எளிதில் வெல்லக் கூடிய இயல்பினனாகவே விளங்கி இருக்கின்றான். அந்த வரத்தைக் கொண்டு தீயவர்களை அழித்திருந்தால் நன்மை பெற்றிருப்பான்; ஆனால் நல்லவர்களை அழிக்க முற்பட்ட போது தான் அவன் அழிவை அவனே தேடிக் கொண்டான். போரிடுவோரின் வலிமையில் பாதி தனக்கு வந்துவிடும் என்பதை அவன் தன் மனைவி தாரையிடம் உரையாடும் போது கூறியதாகக் கம்பர், பாடலை அமைந்திருக்கிறார்.
-
"பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை
ஊதிய வரங்களும் உரமும் உள்ளதிற்
பாதியும் என்னதாற் பகைப்ப தெங்ஙனம்
நீதுயர் ஒழிகென நின்று கூறினான்"
(கிட்; வாலிவதைப் படலம் : 29)
மிக அண்மைக்காலம் வரையில் கொடுமையான குற்றம் புரிந்தவர்கள் சட்டப் பாதுகாப்புக்குட் படாதவர்கள் (outlaws) என்றும், அவர்களை யார் வேண்டும் மானாலும் கொல்லலாம் என்றும், அவ்வாறு கொல்பவர்கள் புனிதமான செயலைச் செய்தவர்கள் என்றும் கருதப் பட்டு வந்தனர். கம்பனுடைய கண்ணோட்டத்தில் கூட வாலி ஒரு 'outlaw' தான். எனவே சட்டப்படி இராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றது சரியே!
சட்டப்படி சரியாக இருந்தாலும் தர்மத்தின் அடிப்படையில் சரியா என்றொரு வினா எழும். சுக்கிரீவன், இராமனிடம் அடைக்கலம் என்று முதலில் புகுந்து தன்னைக் காக்க வேண்டும் என்று முறையிட்டான். இராமன் மராமரங்கள் ஏழினையும் ஒரே அம்பால் துளைத்தபோழ்து கூட வாலி இராமனைக் காண வர வில்லை. அது மட்டுமாலாமல் இராமனுடைய ஆற்றலை உணர்ந்திருந்தும் பொருட்படுத்தவில்லை. வரத்தின் வலிமையையே நம்பியிருந்துவிட்டான். சட்டத்துறையில் (Petition priority) அதாவது மனுக் கொடுப்பதில் முதன்மை என்பார்கள். அவ்வாறு கொடுப்பவர்களுக்கு ஓரளவு சலுகை கட்டாயம் உண்டு. சுக்கிரீவன் நேராக வந்து முறையாக மனுவினைக் கொடுத்துத் தன் கட்சியின் நியாயத்தை எடுத்துரைத்தான். வாலியின் போக்கும், துந்துபி என்ற அரக்கன் கொல்லப்பட்ட முறைமையும், முனிவரின் சீற்றத்தையும் அறிந்து தெளிந்த இராமன் அரச நீதியினைச் செலுத்த முடிவு செய்தான்! பரந்து பட்ட பல்வேறு கோணங்களில் சாட்சியம் (Preponderance of Evidence) இருப்பதை அறிந்து தெளிந்த பின்னரே இராமன் யோசித்து முடிவுக்கு வந்தான்.
தன்னுடைய உள்ளம் தூய்மையாக இருப்பதால் சீதை கன்னியாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றான். அப்பெருந்தகையின் சிந்தனை எப்பொழுதும் சீரிதாகவே இருக்கும் என்பதைக் கம்பர் பால காண்டத்தில் இராமன் கூற்றாகவே ஒரு பாடலை அமைத் இருக்கின்றார்.
-
ஆகும் நல்வழி யவ்வழி யென்மனம்
ஆகுமோ விதற் காகிய காரணம்
பாகு போன் மொழிப் பைந்தொடி கன்னியே
யாகும் வேறிதற் கையுற வில்லையே
(பாலகாண்டம் ; மிதிலைக்காட்சிப் படலம் : 147 )
தாடகையைக் கொல்லத் தயங்கினான். பரசுராமனைச் கொல்லலாகாதென விடுத்தான். விராதன் பக்தி நிலை கொண்டு திருந்தித் துறக்கம் புகச் செய்தான். வாலியை மறைந்திருந்து கொல்வதால் பழியுண்டாகுமெனத் தெரிந்தால் கொல்வானா? எல்லாவகைப் பயிற்சியும் இளமையிலேயே பெற்ற இராமன் தனக்கு மாசு நேரும் படியானதொரு செயலைச் செய்யத் துணிந்திருப்பானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
-
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் (குறள்: 550)
இலக்குவன் மறுமொழி கேட்ட வாலியும் மீண்டும் மீண்டும் கேள்விக் கணைகளைத் தொடுப்பதை விடுத்து இராமனை வணங்கினான் என்றே உரைக்கின்றார் கம்பர்:
-
'கவிகுலத் தரசும் அன்ன கட்டுரை கருத்திற் கொண்டான்
அவியறு மனத்த னாகி யறத்திறன் அழியச் செய்யான்
புவியுடை யண்ணல் என்ப தெண்ணினன்" (கிட் ; வாலிவதை 126)
-
"மற்றிலேன் எனினு மாய வரக்கனை வாலிற் பற்றிக்
கொற்றவ நின்கட் டந்து குரக்கியல் தொழிலுங் காட்டப்
பெறிலென் கடந்த சொல்லிற் பயனிலை பிறிதொன் றேனும்
உற்றது செய்கென் றாலும் உரியன் இவ் வனுமன் என்றான்"
(கிட்; வாலிவதை : 136)
-
"வேறு குழுவை யெல்லாம் மானுடம் வென்ற தன்றே"
(கிட்; நட்புக் கோட்படலம் : 19)
வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ
ஏனைமா நாகர்தம் இருக்கைப் பாலதோ
தேனுலாந் தெரியலாய் தெளிவ தன்றுநாம்
ஊனுடை மானிட மான துண்மை யால்
(கிட்; காலன்காண் படலம்: 29).
சுக்கிரீவனுடைய துன்பத்தைத் துடைத்த பின்னர் தான் இராமன் தன் துணை இருக்குமிடத்தைத் தேடும்படி கூறினான் என்றால், அவனுடைய பொது நோக்கும் புலப் படுகின்றதன்றோ ?
மனைவியைப் பிரிந்து வருந் தும் கணவனாக இராமனை நம்மனோர்க்குணர்த்தவே கார்காலப் படலத் தைக் கம்பர் படைத்தார் போலும்!
வாலியைக் கொல்ல இராமனால் இயலுமோ என்று ஐயுற்ற சுக்கிரீவன் கிட்கிந்தையின் அரசனான பின்னர்ப் பரதனைப் போன்று பக்தியுடையவனாகத் திகழ்ந்தான் என்ற பாடலைப் படிக்கும்போழ்து படிப்பவர்களின் உள்ளம் நெகிழ்கிறது. (கிட்கிந்தைப் படலம் 125 எண் பாடல்.) வைணவ சம்பிரதாயப்படி, சுக்கிரீவன் என்றழைக்காமல் 'மகாராஜர்' என்று அழைக்கவேண்டும். "சுக்ரீவாக்ஞை "யினை மீற முடியாது. அத்தகைய பெருந்தகையால் வணங்கப்படும் தகைமையாளன் இராமன் என்பதை யுணர்த்தவே கம்பர் மேற்குறித்த பாடலை அமைத்திருக்கின்றார்.
யுத்த காண்டம், மாயாசீதைப் படலத்தில் அனுமனை மாலியவான்,
-
"அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல் வ ரம்மா"
(யுத்த; மாயா சீதைப் படலம் :54)
ஜடாயு என்ற கழுகரசனின் உடன் பிறந்தவனான சம்பாதியின் சிறகுகள் இராமனின் பெயரை வானவர்கள் உச்சரித்த அளவில் மீண்டும் முளைத்தன என்றால் இராமன் பெயருக்குள்ள ஆற்றல் புலப்படும். இராவணன் சீதையைச் சிறை வைத்த இடத்தைச் சம்பாதிதான் தெளிவு படுத்துகின்றான். பிறருக்குகுதவுவதையே தன் நோக்கமாகக் கொண்ட இராமன் தன்னிடத்துள்ள வரம் பிலாற்றலைத் தன்னலத்திற்காக ஒரு போழ்தும் பயன் படுத்தவில்லை. அதனால்தான் அவன் தொடர்ந்து யாவ ராலும் மதிக்கப்படுகின்றான்.
மனைவியைப் பிரிந்து வருந்தும் நிலையிலுள்ள இராமனின் சிந்தனையைக் கிட்கிந்தையின்பால் திருப்பி முறைமை பிறழ்ந்த வாலியை அழித்து அதன் மூலம் தன் ஆற்றலை மேலும் உறுதிப்படுத்தி வாழ்வில் நம்பிக்கை ஒளி பெற்றுத் தேறியிருக்-கின்றான் இராமன். ஒருவில், ஒரு சொல், ஓரில் என்ற கொள்கையைத் தளரவிடாமல் தொடர்ந்து பெரு மிதம் உள்ளவனாகவே காட்சியளிக்கின்றான். சொன்ன காலத்தில் சுக்கிரீவன் வாராதபோழ்தும் சினந்தானே யன்றிச் சீறிச் சாபமிடவில்லை .
-
குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. (குறள் : 29)
சுக்கிரீவன் அணிகல முடிப்பைக் கொடுத்த போழ்து இராமன் எல்லா மனிதர்களைப் போலவும் மூர்ச்சையுற்று வீழ்ந்தான். அவனைத் தேற்றிய பெருமை சுக்கிரீவனுக்குத் தான் உண்டு. ஏனெனில், அவனும் மனைவியைப் பிரிந் தவனாயிற்றே! கம்பருடைய தனித்தன்மை இங்கும் ஒளிர் வதைக் காணலாம்.
கிட்கிந்தா காண்டத்து இராமன் தொடக்கம் முதல் இறுதிவரை மனிதனாகவே காட்சிதந்து செயற்கருஞ் செயல் புரிந்து, அறம் வெல்லவும் பாவந் தோற்கவும் தன்னால் இயன்றதையெல்லாம் செய்தான். தனித்திருக்கும் போழ்து சீதையின் பிரிவுக்கு வருந்தினானேயன்றிப் பிறரி டம் தன் கதையைக் கூறி ஓலமிடவுமில்லை, தன் துயரையே நினைத்துப் பிறர்க்குதவாமலும் இல்லை என்பது வெள்ளிடை மலை.
------------------
11. தென்றல் வரவு
பழந்தமிழர்கள் நிலங்களுக்குப் பெயரிட்டமையும், பொழுதுகளுக்குப் பெயரிட்டமையும் அவர் தம் கூர்த்த மதி நிலத்தைப் பறைசாற்றும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குன்றத்தில் பூக்கும் மலர் குறிஞ்சியாகும். அத்தகு சிறப்புடைக் குறிஞ்சி பூத்தலின் அந்நிலம் 'குறிஞ்சி'யாயிற்று. கார்காலக் கவினை மிகுதிப்படுத்திக் காட்டில் மலரும் முல்லை மலர், தான் மலரும் நிலத்திற்குப் பெயர் தந்தது. மருத நிலத்தில் மருதப் பூக்கள் மிகுதி யாகப் பூத்தலின் அந்நிலத்திற்கு அப்பெயர் வந்தது. கடலோரப் பகுதிகளில் நெய்தற் பூக்கள் மலர்தலின் அப்பகுதிக்கு நெய்தல் எனப் பெயர் வழங்கிற்று. முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்பான வளத்திற்குறைவுபட்டு மழையின்மை காரணமாக வளங்குறைந்தது, பாலையெனும் நிலமாகத் திரியும். அந்நிலத்திற் பூக்கும் பூ பாலைப்பூ. எனவே அந் நிலம் பாலை எனப்பட்டது. இவ்வாறு நிலத்திற்கு மலர்களால் பெயர் அமைந்திருப்பது தமிழர் தம் இயற்கை பரவும் இனிய பண்பாட்டினை நுவலும்.
அடுத்து, நிலத்தில் வீசும் காற்றுக்கு அவர்கள் வழங்கியுள்ள பெயர்களும் அவர்தம் மதிநுட்பத்தினை மேலும் நுவலக் காணலாம். வடக்கேயிருந்து வீசும் காற்றினை 'வாடை' என்றனர். தெற்கே யிருந்து வரும் காற்று 'தென்றல்' எனப்பட்டது. மேற்குக் காற்று 'கோடை' என்ற பெயரால் வழங்கப்பட்டது. 'கொண்டல்' என்பது கிழக்கேயிருந்து வீசும் காற்றின் பெயராகும். ஆக இவ்வாறு அவர்கள் காற்றுக்குப் பெயர் வழங்கியுள்ள திறம் உன்னி மகிழ்தற்குரியது.
பரிபாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகும். அந் நூல், செல்வேள் மாண்பினையும், திருமால் சிறப்பினையும், மதுரை அழகினையும் கிளத்துகின்றது. ஆசிரியர் நல்லந்துவனார் செவ்வேளைப் பற்றிப் பாடி யுள்ள பரிபாடலில், 'பரங்குன்று இமயக் குன்ற நிகர்க்கும்' எனப் போற்றப்பட்டுள்ளது. இத்தகு பெருமைக்குரிய திருப்பரங்குன்றத்திலிருந்து தென்றல் புறப்பட்டு வரும் சிறப்பினைப் பின்வருமாறு ஆசிரியர் நல்லந்துவனார் குறிப்பிடுகின்றார்.
-
குன்றின், அருவிதாழ் மாலைச் சுனை:
முதல்வரின் யானை முழக்கங் கேட்ட
கதியிற்றே காரின் குரல் ;
குரல் கேட்ட கோழி குன்றதிரக் கூவ
மதநனி வாரண மாறுமா றதிர்ப்ப
எதிர்குதி ராகின் றதிர்ப்பு மலை முழை
ஏழ்புழை யைம்புழை யாழிசைகேழ்த் தன்ன வினம்
வீழ்தும்பி வண்டொடு மிஞறார்ப்பச் சுனைமலரக்
கொன்றை கொடியின ரூழ்ப்பக் கொடி மலர்
மன்றல் மலர மலர்காந்தள் வாய்நாற
நன்றவிழ் பன்மலர் நால நறைபனிப்பத்
தென்றல் அசைவ ரூஉஞ்செம்மற்றே யம்மநின்
குன்றத்தாற் கூடல் வரவு. (பரிபாடல் ; 8 : 15-28)
அகநானூற்றிலே, தென்றல் குறித்து இரண்டு அழகோவியங்கள் காணக் கிடக்கின்றன. காவன் முல்லைப் பூதனார் பாடியுள்ள பாலைத்திணைப் பாடலொன்றில் பாலை வழிச் செல்லும் மன்னர்க்குத் தென்றல் செய்யும் தொண்டு சுட்டப்படுகின்றது.
வலம்சுரிந்த பூங்கொத்துக்கள் மெல்லென மலர்கின்ற அழகிய கொம்புகள், அப் பூக்களை இழந்தனவாக வருந்து மாறு, வல்லவன் ஒருவன் அக்கொம்புகளை அடித்து உதிர்த்துவிட விளங்கும் கொம்பு எவ்வாறு இருக்குமோ அதுபோல, மராமரத்தை, அதன் மலர்கள் முற்றும் உதிரு மாறு தாக்கி வருத்தும் தன்மை வாய்ந்ததும், மணத்தைத் தன்னிடத்தே கொண்டதுமான தென்றற் காற்று, பாலை வழியிலே செல்லும் மள்ளர்களது குழன்ற மயிரிலே அம் மலர்களைச் சொரியா நிற்கும் என்று தென்றற்காற்றின் சீரிய பணி சுட்டப்படுகின்றது.
-
புரியிணர், மெல்லவிழ் அஞ்சினை புலம்ப, வல்லோன்
கோடறை கொம்பின் வீயுகத் தீண்டி
மராஅ மலைத்த மணவாய்த் தென்றல். (அகநானூறு : 21 : 9-12)
-
புன்காற் பாதிரி அருநிறத் திறள்வீ
நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப
அரவெ யிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்
தேனிமிர் நறுஞ்சினைத் தென்றல்போலக்
குயில் குரல் கற்ற வேனில். (அகநானூறு ; 237 :1-5)
செங்கழு நீர், சேதாம்பல், முழுவதும் இதழ் விரிந்த குவளை, அரும்பு அற மலர்ந்த தாமரை, வயற்பூக்கள், பிறவான பூக்கள், சிறப்புப் பெருந்திய தாழையின் விரிந்த வெண்ணிறப் பூவிதழ்கள், சண்பகச் சோலையில் மாலை போலப் பூத்துக் கிடக்கும் மலர்கள் ஆகியவற்றின் தாதுக் களையெல்லாம் தேடிச்சென்று, வாரியுண்டு ஒளிபொருந்திய முகங்கொண்ட மாதரின் சுருண்ட கூந்தலிலேயிருந்து வரும் மணத்தையும் பெறுவதற்கு வழி காணாமல் சுழன்று சுழன்று திரியும் வண்டுகளுடன் தென்றலும் வந்து, அழகுடைய சாளரத்தின் வழியே புகுந்து அவ்வீட்டி னுள்ளே நுழைந்தது. கோவலன் கண்ணகியர் இருவரும் தென்றலின் வரவால் பெரு மகிழ்வு எய்தினர்.
-
'கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்பு பொதி யவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை
வயற்பூ வாசம் அளை இ, அயற்பூ
மேதகு தாழை விரியல் வெண்டோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாது தேர்ந்துண்டு மாதர் வாண்முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகலேக் கற்றுத்
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து
(சிலப்பதிகாரம் ; மனையறம்படுத்த காதை; 14- 25.)
-
'புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது ஈங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்'. (130-132)
ஊர்காண் காதையில் மாலை போலப் பூக்கும் மாதவி யானது கொடிவீசிப் படவும், சோலையும் காடும் நறுமலர்களை ஏந்தவும், தென்னவன் பொதிகை மலையின் தென்றலோடு, அம் மன்னவனின் கூடலிற் புகுந்து, தாம் மகிழும் துணைகளைத் தழுவுவிக்கும் இனிய இளவேனிலான் வேறு எங்கேயுள்ளான்?' என்று மதுரைக் காட்சியை வருணிக்கு முகத்தான் இளவேனிற காலத்து இன்பத் தென்றலைக் குறிப்பிட்டுள்ளார்.
-
கோதை மாதவி கொழுங்கொடி எடுப்பக்
காவும் கானமும் கடிமலர் ஏந்தத்
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து
மன்னவன் கூடன் மகிழ்துணை தழுவும்
இன்னிள வேனில் யாண்டுளன் கொள்?
(சிலப்பதிகாரம் ; ஊர்காண் காதை : 113-117)
-
குளிரும் பருவத்தே யாயினுந் தென்றல்
வளியெறியின் மெய்யிற் கினிதாம் - ஒளியிழாய்!
ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி
கூடல் இனிதா மெனக்கு. (ஐந்திணை ஐம்பது : 30)
'காணி நிலம் வேண்டும்' என்ற இனிய பாட்டில் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி'தான் விரும்பும் இனிய வாழ்க்கையினை எடுத்து மொழியும் பொழுது 'இளந் தென்றலை' மறவாது குறிப்பிட்டுள்ளமையினைப் பின் வரும் பாடலிற் காணலாம்.
-
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணில் அழகியதாய்- நன் மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்- அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித்தர வேண்டும்- அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போல - நிலாவொளி
முன்பு வர வேணும்;-அங்கு
கத்துங் குயிலோசை- சற்றேவந்து
காதிற்பட வேணும்; - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
-
வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு!
தெய்வ கீதம் பலவுண்டு;
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமின்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ ?
-
தென்னாடு பெற்ற செல்வத்
தென்றலே உன் இன் பத்தைத்
தென்னாட்டுக் கல்லால் வேறே
எந்நாட்டில் தெரியச் செய்தாய்? (அழகின் சிரிப்பு; தென்றல். 3)
-
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளந் தென்றலே.
-
வீசு மென் தென்றல் போலும்
வெண்ணில வொளியே போலும்
காசறு மலரின் மேவும்
கவின்கலை மணமே போலும்
பாசமும் அறிவும் சேர்க்கும்
பனிமொழி அடுக்கை வாரி
வீசினான் பலபேர் அஃது
பாட்டென விளம்பிப் போனார்.
------------------
12. இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு
ஆங்கிலத்தில் ஜான் பனியன் அவர்கள் செய்த, 'திருப்பயணியின் முன்னேற்றம்' (Pilgrim's Progress) என்ற நூலின் வழி நூலாகிய இந்நூல், சிறந்த இலக்கியம் எவ்வாறு இலங்குதல் வேண்டும் என்று வழிகாட்டும் நூலாக விளங்குகிறது. எச்சமயத்தார் ஆயினும் விருப்புடன் ஏற்றுக் கற்குமாறு செய்யவல்ல சுவைகள் அனைத்தும் ஒருங்கு கொண்டு, ஒப்பற்ற இலக்கியமாகத் திகழும் இவ் 'இரட்சணிய யாத்திரிக'த்தின் சிறப்புகளைக் காண்போம்.
இலக்கியப் பொருள்
"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே" என்பது நன்னூல். சிறந்த இலக்கியம், கற்பாரை அறமும், பொருளும், இன்பமும், வீடும் அடையுமாறு செய்வித்தல் வேண்டும் இன்பது இதன் பொருளாகும். பாவி ஒருவனின் மோட்ச வீடு நோக்கிய பயணம் பற்றிய பெருங்காப்பியமாகும் இந்நூல். பாவத்தின் காரணமாக என்றும் அழிவுக் குரியதே உலகம் என்பதை உணர்ந்த கிறித்தவன் ஒருவன், நாச உலகத்தினின்றும் தப்பிப் பேரின்ப உலகை அடைய விழைகிறான். நல்லூழால் பேரின்ப நாடு செல்லும் நெறியினை, நற் குருவால் உணர்த்தப்பெற்ற அவன், இடையில் அடையும் சோதனைகள் பலப்பல. நம்பிக்கை இழவு என்னும் உளையைக் கடந்து, இலெளகிகனுடைய சூழ்ச்சியிலிருந்து மீண்டு, சிலுவைக் குன்றில் தன் பாவக் கொடுஞ்சுமையை இறக்கி, திருப்பயணத்தைத் தடை செய்ய வரும் அழிம்பன் என்னும் காலனுடன் போரிட்டு வென்று, மாயாபுரியில் சத்தியத்தை விளக்கியதால் சிறைப்பட்டுப் பின் மீண்டு, விடாத கண்டன், கார் வண்ணன், அறிவீனன், நிலைகேடன். ஆதியர் ஆகியோரின் குறுக்கீடுகளை எல்லாம் வென்று, இறுதியாக, தர்மசேத்திரம் சென்றடைந்து மரண ஆற்றையும் கடந்து முக்தி நகரை அடையும் அவனுடைய திருப்பயணத்தை விவரிக்கிறது இக்காவியம். குருவழி காட்ட, நிதானியும், நம்பிக்கையும் வழித்துணையாய் வர, மோட்சப் பயணத்தில் கிறித்தவன் வெற்றி அடைவதாக இக்காவியம் செய்யப்பட்டிருக்கிறது.
இலக்கியச் சிறப்புகள்
உயர் பொருள் பற்றிய உணர்ச்சி உந்துதலால் எழும் இலக்கியம், கற்பனை வளத்துடன், உருவகம், உவமை போன்ற சிறந்த இலக்கியக் கூறுகளையும் கொண்டு, கற்பாரை மனம் மகிழவும், நெகிழவும் செய்வதாகும். உருவக, உவமை அணிகளும் கற்பனையும் இக்காவியத்துள் சிறப்புற அமைந்திருப்பதை முதற்கண் காண்போம்.
உருவகச் சிறப்பு
இக் காவியத்தை முற்றுருவகப் பெருங்காப்பியம் என்றும், தமிழ் மொழியில் உள்ள முற்றுருவகப் பெருங் காப்பியம் இஃதொன்றே என்றும் கூறுவர். உலகம் 'நாச தேசம்' என்று உருவகிக்கப்பட்டுள்ளது. வன்னெஞ்சன், மென்னெஞ்சன், சகாயன், காமமோகிதன், பிரபஞ்சன் அழிம்பன், நிதானி, தூர்த்தன், நம்பிக்கை விடாத கண்டன், கார்வண்ணன், விமலன், அறிவீனன், நிலை கேடன், அறப்பகை, கண்ணிலி, நன்றிலி, குரோதி, காமி, வீணன், துணிகரன், வம்பன், விரோதி, சழக்கன், நிட்டூரன், இருட்பிரியன், முழுப்பொய்யன், விவேகி, யூகி, பக்தி சிநேகி எனவரும் பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் பண்பு உருவகப் பெயர்களே. நம்பிக்கை இழவு உளையாகவும் மரணம் ஆறாகவும் துன்பமும் அறமும் மலைகளாகவும் தாழ்வு பள்ளத்தாக்காகவும் உருவகிக்கப் பட்டுள்ளன. மாயாபுரி, சோகபுரி, தர்மசேத்திரம் முதலானவும் உருவகங்களே.
மனத்தில் நன்மை, தீமைக் கூறுகளே நல்ல மாந்தராகவும், தீய மாத்தராகவும் இக் காவியத்தில் உருவாகமாகப் படைக்கப்பட்டுள்ளன. கிறித்தவன், அழிம்பனோடு செய்யும் போர், ஓர் உருவகப் போரே. கடுமுகம், கார்முகம்: வசை, அன்பு, ஆசி ஆகியன கிறித்தவன் எய்யும் எதிர் அம்புகளாகவும் கூறப்பட்டுள்ள யாவும், உருவக அணியின் பாற்படும். அழிம்பன் மார்பில் வாளைப் பாய்ச்சி ஆன்மிகன் வெல்வது, தீய மனத்தை நன் மனம் வெற்றி கொள்வதாகும்.
உவமைச் சிறப்பு
இலக்கிய ஆசிரியனின் உணர்த்தும் திறனை அவன் கையாண்டுள்ள உவமைகளாலே எளிதில் அறிந்து கொள்ள முடியும். சிறந்த உவமைகள் எண்ணிறந்த அளவில் இக் காவியத்தை அழகு செய்கின்றன்.
மோட்ச நாட்டிற்குச் செல்லும் வழியறியாது ஆன் மிகன் இருதலைக் கொள்ளி இடையுற்ற எறும்பெனத். திகைத்து, கடுங்காற்றில் சிக்கிய சருகெனச் சுழல்கின்றான்' (பாடல் எண். 6). உன்னத புண்ணிய நகர் வாழ்வை நாடாது, நாசநகரில் வாடுவது உலர்ந்த என்பை நாய் நச்சுவது போலாகும். (பாடல் எண். 10.)
அறிவற்றவர்க்குக் கூறும் அறிவுரையால் பயன் இல்லை என்பதை,
-
"பந்தமே கொளுத்தினாலும்
பயனுண்டோ குருடர்க்கு அம்மா!"
அழிம்பன் ஆன்மிகனுக்குத் தருவதாகக் கூறும் சுகம், நாய் சிங்கத்திற்குத் தரும் அரசாக உவமிக்கப்பட்டுள்ளது (பா.எ. 422). அழிம்பன், விட்ட வசைக் கணைகள், அறவோரிடம் கொடியவர் தீவினை அழிவது போல் அழிந்து பட்டன (பா. எ. 439).
ஆசிரியரின் சிறந்த உவமைத் தொடர்களை எடுத்துக் காட்டுவது, இவ்விலக்கியச் சிறப்பை உள்ளங்கை நெல்லிக் கனியென விளக்குவதாகும்.
-
"தற்பதம் இழந்த மாந்தர் தலை இழி சிகையே அன்றோ ?"(பா.எ. 48).
”அரும்பெறல் மக்களை ஆவி என்று உனை
விரும்பிய மனைவியை வெறுத்திட்டு ஏகுதல்
கரும்புவேம் பாயதோர் கணக்குப் போலுமால்!" (பா.எ. 84)
”வம்பு துற்றிய வார்த்தைக்கு இணங்கியே
கொம்பு இழந்த குரங்கெனல் ஆயினேன்". (பா. எ. 153)
”துன்னெறி ஒழுகியோர் தூயர் ஆவரோ?
நன்னெறிப் படினும்பின் நன்கு மூழ்கினும்
பொன்னிறம் வாயசம் புணரு மோகொலாம்?" (பா.எ. 150)
"வன்தொ டர்ப்படு மான்விடு பட்டெனச்
சென்று கூடினன் முன்விடு செந்நெறி" (பா. எ. 163)
"துனியெலாம் ஒரு ங்கு கூடி மலையெனத் தொடரு மேனும்
பனியெனப் படுமால் தூய பார்த்திவன் அருளுண்டாயின்" (பா.எ. 258)
"பாதக குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி". (பா.எ.315)
“புற்றரவின் சீறிப் புடையவளைந்து புல்லியர் தாம்
துற்றி விளைத்த கொடுந் துன்பம் தனியுழந்து
முற்றும் கிரகணத்தின் மூழ்கு தினகரன் போல
செற்றமிலாத் தேவமைந்தன் தேசிழந்துதேம்பினார்" (பா. எ 324)
-
"இந்தவாறு உரைத்த இருஞ்சிலை மீது தாக்கும்
பந்தெனல் ஆயது." (பா.எ. 14)
"விலையுறு மாயசிற் றின்பம் வேட்டுஉழல்
புலையுறு மாந்தருள் பொருந்திற் றில்லையால்
கலையுறு ஞானியர் பகர்ந்த கட்டுரை
சிலையுறு பந்தெனத் திரும்பிற் றென்பவே" (பா.எ. 574)
கற்பனை, காவியத்தை கற்பவர் கண்முன் நிகழ்ச்சிகளைக் கொண்டு நிறுத்தவல்ல பேராற்றல் வாய்ந்ததாகும்; தன்குறிப்பு தோன்றவும், உயர்வு நவிற்சியாகவும் இலக்கிய ஆசிரியன் படைக்கும் கற்பனை, காவியத்தைக் கற்பவரைப் பெரிதும் மகிழ வைக்கும். அத்தகு கற்பனைகளும் சிறப்புற இரட்சணிய யாத்திரிகத்தில் அமைந்துள.
இயல்பாக மலர்களில் தேன்சொரியும் காட்சியினை, ஆசிரியர், இயேசு பெருமான் பெறவிருக்கும் துன்பத்தை எண்ணி அவை அழுவதாகக் கற்பனை செய்வது கற்கையில் இன்பம் செய்கிறது, அப் பாடல் வருமாறு:
-
செழுமலர்ச் சோலை ஓங்கும் சினைதொரும் நிறையப் பூத்த
கொழுமுகை அவிழ்ந்து செந்தேன் குளிர்நறுந் துளிவார் காட்சி
அழகிய மணவாளன் தன் அகத்துவந் தடையும் ஆன்மக்
கழிதுயர்க்கு இரங்கிச் சிந்தும் கண்ணின் நீர்த் தாரை போலும்!"
(பா.எ. 304)
என்பதாகும்.
மாலையில் சூரியன் இயல்பாக மறையும் நிகழ்ச்சி மேல், ஆசிரியர் தம் குறிப்பை ஏற்றிக் கற்பனை செய்கிறார்; இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொடுமை காணப் பொறுக்காமல் கதிரவன் மறைந்தான் எனக் கூறியுள்ளார்.
-
"பொங்கு அருள் நாதன் பூதல இரட்சை புரிவான்வந்து
அங்கம் வருந்தி ஆருயிர் நல்கி அவனிக்குள்
மங்கி அடங்கக் கண்டுச் சிக்கமாட்டான் போல்
வெங்கதிர் உட்கிக் குடகல லிற்குப் புறவீழ்ந்தான்" (பா.எ.357)
-
"மோகம் மல்குமா யாபுரி மூதெயில் முயங்கும்
வாகை நீள் கொடிக் குலங்கள் விண் துயல்வரும் மரபு
மாகம் வேட்டுழல் மதியிலீர் வரம்பில் சிற்றின்ப
போகம் உண்டு இவண் வம்மின்; என்றழைப்பது போலும்."(ப.எ. 535)
தமிழ்ச்சுவை நிரம்பிய கிறித்தவ இலக்கியம்
தமிழ் இலக்கியங்களில் கற்றுத் தேர்ந்த சிறப்புடையவரான கிருஷ்ணபிள்ளை அவர்கள் இரட்சணிய யாத்திரிகத்தைத் தமிழ்க் காப்பியமாகவே செய்துள்ளார். குறள்களை எடுத்தாண்டிருப்பதும், கம்பராமாயண, தேவார, மற்றும் கலிங்கத்துப்பரணி இலக்கியங்களை அடியொற்றியிருப்பதும் இரட்சணிய யாத்திரிகத்திற்குச் சிறப்புச் செய்கின்றன.
-
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு ." (குறள் : 72)
-
அன்பிலர்த மக்குரியர் அன்புடையார் ஆக்கை
என்பும்உரி யார் பிறர்க்கு என்னும் உரை எம்மான்
தன்புடைய லாது எவரில் சான்றுபடு மாயின்
முன்புமிலை மூதுலகின் பின்புமிலை மாதோ." (பா.எ. 313)
-
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்" (குறள்: 476)
-
செய்ய அல்லசெ யக்கெடும் செய்வன்
செய்ய லாமையி னும் கெடும் தேர்க என
வைய கத்துநல் நீதிவ குக்குமால்" (பா. எ. 422)
ஆசிரியர் தாமே கூறியுள்ள உரையொன்றில் கம்ப ராமாயணத்தை அடியொற்றியே இக் காவியத்தைச் செய்திருப்பது தெளிவாகும். கம்பராமாயணத்தின் மூன்றாவது காண்டமாகிய ஆரணிய காண்டத்தின் பெயரையே, தம் காவியத்தின் மூன்றாவது காண்டத்திற்கும் பெயராக இட்டிருக்கிறார்.
-
'உலகம் யாவையும் தாமுள வாக்கலும்'
-
"உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்
அலகில் சோதி அருட்கடல் ஆரணத்து
இலகு மெய்த்திரி யேகர் பதத்துணை
குலவி என்நெஞ் சிடங்குடி கொண்டவே' (பா. எ. 1)
இயேசுவின் மறைவு குறித்த மக்களின் புலம்பல் முழுதும், இராமனின் பிரிவு குறித்த மக்களின் புலம்பலே ஆகும். இராவணன், தன் பால் தூது வந்த அங்கதனிடம் அவனுக்கு அரசு தருவதாக ஆசைகாட்ட, அங்கதன்,
-
"நீ தரக்கொள்வேன் யானே இதற்கினி நிகர்வே றெண்ணில்
நாய்தரக் கொள் ளுஞ் சீயம் நல்லர சென்று நக்கான் "
(கம்ப, யுத்தகாண்டம்; அங்கதன் தூதுப் படலம் : 29)
இக் காவியத்தில் அழிம்பனிடம் ஆன்மிகன்,
-
"மாய முறும் இன்ப நலம் வாழ்வுசுகம் ஆதி
ஆயவைத ரத்துணிதி! அம்ம ; அழ கிற்றால்!
மேயமனை தோறும் ஏறி மிச்சில் விழை நாய்கொல்
சீயமுடி பெற்றரசு செய்யும் வகை செய்யும்?" (பா. எ, 422)
இக்காவியத்துள் இடை இடையே வரும் தேவாரப் பாடல்கள், நாயன்மார்களின் தேவாரப் பாடல்களை அடி யொற்றிச் செய்தனவே ஆகும்.
-
'நாதன் நாமம் நமச்சிவாயவே!'
-
"பித்தே றிச்சுழலும் செகப் பேய்பிடித் துப்பவத்தே
செத்தேன் உன்னருளால் பிழைத் தேன்மறு சென்மமதாய்!
எத்தோ டங்களையும் பொறுத் தென்று மிரங்குகவென்
அத்தா, உன்னையல்லால் எனக் கார்துணை யாருறவே?" (பா. எ. 162)
-
"பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!"
-
"மாயா உலக மயக்கறுத்து வரையாக் கிருபை தந்தளித்த
தூய பெருமான் திருவடிக்குத் தொழும்பன் கபாடம் திறமினோ!"
(பா. எ. 166)
முடிவுரை
தமிழ் மரபைத் தழுவியதாய், முன்னோர் பொன் கருத்துக்களை ஏற்றதாய், கற்பனை வளத்துடன், உருவக உவமை அணிச் சிறப்புகளோடு மேலாகிய மோட்சம் நோக்கிய ஆன்மிகனின் அரிய பயணம் குறித்த இரட்சணிய யாத்திரிக இலக்கியம் போன்ற சிறந்த இலக்கியம், தமிழ் இலக்கியங்களுள் அத்தி பூப்பதாய்க் காண்பது அரிதாகும்.
--------------
சி. பாலசுப்ரமணியன்
தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபுரமும் திருவண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இடங்கள். பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரிப் பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி ஏ. ஆனர்சு. அங்கு முதல் வகுப்பில் தேறிய முதல்வர் 'குறுந்தொகை' பற்றிய ஆய்வுரைக்கு 1963-ல் எம்.லிட்., பட்டமும் 'சேர நாட்டு செந்தமிழ் இலக்கியங்கள்' பற்றிய ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள். நல்ல நடை கொண்ட இந்த நாகரீக பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிறார். முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாளர்.
முப்பத்தைந்து நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், 'தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றே சான்று'. அண்மையில் வந்துள்ள அணி கலன். சங்க இலக்கியம் சில் பார்வைகள் ஆங்கிலத்தில் ஒரு நூல். 'சங்ககால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி' 'இலக்கிய அணிகள்' என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் ரூபா முதல் பரிசை பெற்றது. படித்து பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்கள் : புலவரேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்சொற்புலவர் (தமிழ்நாடு நல்வழி நிலையம்) சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்).
பெருந்தகை மு. வ வின் செல்லப்பிள்ளை சி. பா. அவர் புகழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி, அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி ! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி ;
சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடுபடு!
- மா.செ.
------------------------
ஆசிரியரின் பிற நூல்கள் :
தமிழ் இலக்கிய வரலாறு | உருவும் திருவும் |
கட்டுரை வளம் | வாழையடி வாழை |
மனோன்மணீயம் (பதிப்பு) | காரும் தேரும் |
முருகன் காட்சி | இலக்கிய அணிகள் |
பெருந்தகை மு. வ. | சான்றோர் தமிழ் |
இலக்கியக் காட்சிகள் | நல்லோர் நல்லுரை |
A Study of the Literature of the Chera Country
அச்சிட்டோர் :
ஸ்ரீ வெங்கடேஸ்வரா அச்சகம், 7/40, கிழக்கு செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை - 16.
--------------
This file was last updated on 8 Jan. 2019.
Feel free to send the corrections to the Webmaster.